???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 போராட்டம், கலவரங்களை கடந்து 18 படிகளில் ஏறினார் பெண் பக்தை 0 #MeToo எதிரொலி: மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா 0 சபரிமலையில் பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: பத்திரிக்கையாளர்கள் சங்கம் கண்டனம் 0 தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் 0 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஸ்டாலின் ஆலோசனை! 0 சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு! 0 கொலை வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு 0 இந்தியாவின் "ரா" உளவு அமைப்பு என்னை கொலை செய்ய சதி: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு 0 சபரிமலை செல்பவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்: பினராயி விஜயன் உறுதி 0 குட்கா வழக்கு: 3 பேரின் ஜாமின் மனுவை தள்ளுபடி 0 பகத்சிங் பிறந்த நாளை கொண்டாடியதற்காக கல்லூரி மாணவி சஸ்பெண்ட் 0 ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு உயர் நீதிமன்றம் தடை 0 பிரதமரின் இதயத்தில் ஏழைகளுக்கு இடமில்லை: ராகுல் குற்றச்சாட்டு 0 அசாமில் போலி என்கவுண்டர்: ராணுவ மேஜர் ஜெனரலுக்கு ஆயுள் தண்டனை! 0 #MeToo புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் மீது எம்.ஜே. அக்பர் மானநஷ்ட வழக்கு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அப்துல் ரவூபின் தியாகம் நெஞ்சில் எரியட்டும்: சீமான்

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   16 , 2010  10:35:38 IST

யாழ்ப்பாணத்தில் ஈழத்தமிழர்கள் மீதான ராணுவத்தாக்குதலைக் கண்டித்து 95ம் ஆண்டு திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல்ரவூப் தன்னை எரித்து தியாகி ஆனார். அவரைப் போன்ற தியாகிகளின் தியாகங்கள் இனவிடுதலை பெறும்வரை நெஞ்சில் எரியட்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை :


ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் முதன் முதலாக தன்னைத் தானே எரியூட்டிக் கொண்ட மாமனிதன் அப்துல் ரவூப்பின் 15ம் ஆண்டு நினைவு நாள். தன் 24 ஆம் வயதில், தன்னையொத்த தமிழ்ச் சொந்தங்கள் ஈழத்தில் இன உரிமைக்காக உயிரைத் துறந்து போராடிக் கொண்டிருக்கையில் அதே உணர்வோடு தன் இன்னுயிரை தீக்குளித்துப் போக்கிய வீரம் செறிந்த நாள் இது.


அன்று எந்த நோக்கத்திற்காக அப்துல் ரவூப் தன் இன்னுயிரைப் போக்கினாரோ அதே நோக்கம் இன்று மேலும் மேலும் வலுப்பட்டிருக்கிறது.அன்று அப்துல் ரவூப் உயிர் துறந்த பொழுது தமிழ்நாட்டில் இன எழுச்சி ஏற்பட்டிருந்தால் இன்று ஈழத்தில் இந்த மோசமான நிலை ஏற்பட்டிருக்காது.


அன்று அப்துல் ரவூப் உயிர் துறக்கும் முன், ஈழ மக்களின் துயரம் விரைவில் தீர்க்கப்படாவிட்டால் ஆயிரமாயிரம் அப்துல் ரவூப்கள் எழுவார்கள்’ என்று கூறினார். இன்று அவரது கூற்றுப்படி தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் பல்லாயிரம் முத்துக்குமார்கள் தோன்றி உள்ளார்கள்.


இந்த நாளில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழி என்னவென்றால் அப்துல் ரவூப் போன்ற மறத்தமிழர்கள் மேற்கொண்ட லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்.அதே சமயத்தில் இனியொரு அப்துல்ரவூப்பும் முத்துக்குமாரும் தோன்றாமல் இருப்பது,நமது கையில்தான் இருக்கிறது. தமிழர்களின் ஒற்றுமையும் ஒன்றுபட்ட போராட்டமும்தான் அந்த நிலையை உருவாக்கும். அவர்களின் தியாகங்கள் ஆண்டுக்கொருமுறை நினைவு கூருவதற்காக மட்டும் அல்ல. அது நம் இனம் விடுதலை பெறும் வரையில் நம் நெஞ்சிலே எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...