???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்கக் கூடாது: பிரதமர் மோடி 0 அதிமுகவில் ஒருவருக்கு கூட திமுகவை விமர்சிக்க தகுதியில்லை: ஸ்டாலின் 0 ஆதாரம் இல்லாமல் 'கட்டப்பஞ்சாயத்து' குற்றச்சாட்டை வைக்கலாமா? தமிழிசைக்கு திருமா கேள்வி 0 ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: நாராயணசாமி 0 இரட்டை இலை வழக்கு: தேர்தல் ஆணையத்தில் விசாரணை 0 அமைச்சர் ஜெயக்குமார் மீது மதுசூதனன் திடீர் பாய்ச்சல்! 0 பேரறிவாளனுக்கு நீண்டகால பரோல் வழங்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை 0 ஜனநாயகத்துக்கு எதிராக பாஜக செயல்படுகிறது: ஸ்டாலின் குற்றச்சாட்டு! 0 ஜி.எஸ்.டி வரி விதிப்பு: பொது விவாதத்துக்கு சீமான் அழைப்பு 0 நாகை தீயணைப்பு நிலையம் இடிந்து விழுந்து விபத்து 0 மேற்கு வங்கம் : திருநங்கை நீதிபதியாக நியமனம்! 0 மெர்சலை வெற்றி படமாக்கியதற்கு விஜய் நன்றி! 0 பேரறிவாளன் பரோல்: அற்புதம்மாள் முதல்வருக்கு மீண்டும் கடிதம் 0 சில நாட்களில் மற்றுமொரு அதிசயம் நடக்கும்: கருணாநிதியின் மருத்துவர் 0 தற்போதைய சூழலில் பராசக்தி படம் வந்தால் எப்படி இருக்கும்? ட்விட்டரில் ப.சி. கேள்வி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கெட்ட சினிமா - º¡.கந்தசாமியின் எழுத்தோவியம்

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   07 , 2005  11:23:56 IST

நான் சென்சார் போர்டில் உறுப்பினராக இருந்தபோது ஆபாசம், வன்முறையை ஒழிக்க ஓர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள மாநில உள்துறை செயலாளர், இன்ஸ்பெக்டர் ¦ƒனரல், சினிமா இயக்குநர்கள், கதாசிரியர்கள், சென்சார் போர்டு ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், வக்கீல்கள், மகளிர் என்று பலரும் அழைக்கப்பட்டு இருந்தனர். மாநில அதிகாரிகள் தங்களுக்கு முக்கியமான வேலை இருந்ததால்- தங்களுக்குக் கீழே இருந்த அதிகாரிகளை அனுப்பி இருந்தார்கள்.

டீ, பிஸ்கட் சாப்பிட்டதும், சென்சார் போர்டு அதிகாரி சினிமாவில் ஆபாசம், வன்முறை அதிகரித்துவிட்டது என்று புகார் வந்து கொண்டே இருக்கிறது. அதை எவ்வாறு குறைப்பது என்பது பற்றி ஆலோசிக்கவே கூடி இருக்கிறோம் என்றார். உடனேயே ஒரு போலீஸ் அதிகாâ, "எங்களிடம் ஸ்கிரிப்டை அனுப்புங்கள். நாங்கள் அதைச் சரிப்படுத்தி தருகிறோம். அப்புறம் அதில் ஆபாசம், வன்முறை எல்லாம் இருக்காது" என்றார்.

சினிமா துறையினர் கொல்லென்று சிரித்தார்கள். போலீஸ் அதிகாரிக்குக் காரணம் தெரியவில்லை.

"நாடகத்தை நாங்கள் இப்படித்தான் சரிபடுத்தி வைத்திருக்கிறோம்" என்று மறுபடியும் போலீஸ் சாதனையைப் பற்றி சொன்னார். நிஜமாகவே போலீஸால் ஆபாசத்தையும், வன்முறையையும் ஒழித்துவிட முடியும் என்ற நம்பிக்கையோடு சொன்னார்.

சினிமா போலீஸ்காரர்கள், கல்வியாளர்கள், ஒழுக்கவாதிகள் சம்பந்தப்பட்டது இல்லை. அது மக்கள் சம்பந்தப்பட்டது. ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் புதுமை. உலகத்தில் சினிமா இல்லாத நாடே இல்லை. அது இலக்கியமாக-விஞ்ஞானமாக-கலையாக-இசையாக-கல்வியாக-பொழுதுபோக்காக இருக்கிறது.

சினிமா இரண்டு அம்சங்கள் சம்பந்தப்பட்டது. அதன் முதல் அம்சம் தொழில் நுட்பம். அதாவது சினிமா எடுக்கும் கேமிரா, எடிட்டிங், ரெக்கார்டிங், அப்புறம் சினிமாவைக் காட்டும் கருவிகள். முதல் தரமான கண்டுபிடிப்பு. எஞ்சினியர்களின் அயரா உழைப்பால் உருவானது. முழுக்க முழுக்க எஞ்சினியர்கள் சம்பந்தப்பட்டது.

இரண்டாவது சினிமாவில் இடம் பெறுவது. அதாவது எது சினிமாவாக எடுக்கப்படுகிறது என்பது. கேமிரா இதைத்தான் படம் எடுப்பேன் என்று சொல்வதில்லை. அது எதையும் படம் பிடிக்கும். நல்லது-கெட்டது என்ற வித்தியாசம் எல்லாம் அதற்குக் கிடையாது. அது படம் பிடிக்கும் அவ்வளவுதான். ஏனெனில் அது கண்டுபிடிக்கப்பட்டது.

சினிமா மீது ஏன் ஒழுக்கவாதிகளுக்குக் கோபம் வருகிறது. முதல் காரணம் ஒழுக்கம் என்பதை அறியாமல் இருப்பது. இரண்டாவது காரணம் மற்றவர்கள் சந்தோஷமாக இருப்பதைக் கண்டு பொறாமைப்படுவது. ஒழுக்கவாதிகளுக்குத் தானும் சந்தோஷமாக இருக்கத் தெரியாது. மற்றவர்கள் சந்தோஷமாக இருப்பதையும் பொறுக்கத் தெரியாது. அதில் ஆண்-பெண் என்ற பேதமெல்லாம் கிடையாது.

அதிகமான மக்கள் எதை பார்த்து சந்தோஷப்படுகிறார்களோ அதை நிந்திப்பார்கள். சமூகம் கெட்டுப் போகிறது என்று புலம்புவார்கள். அது இன்று நேற்று புலம்பல் இல்லை. நெடுங்காலம் புலம்பல். புலம்பல்வாதிகளுக்கு சமூக நலம், சமூக முன்னேற்றம் என்பதைவிட பத்தாம்பசலி கொள்கைகள் மீதுதான் அதிகமான ஈடுபாடு. அதிகார மையங்களோடு சேர்ந்து கொண்டு மக்கள் மீது வன்முறையை ஏவி விடுவார்கள்.

சினிமா என்பது பல கலைகளின் கூட்டு. அதில் எதையும் கொடுக்கலாம். கொடுக்க திறமையான அறிஞர்கள், கலைஞர்கள், நிஜமாகவே சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் வேண்டும். ஆட்டன்பேரோ காந்தி படம் எடுத்தார். அது கெட்ட சினிமாவா?

எல்லீஸ் ஆர் டங்கன் சகுந்தலா-மீரா எடுத்தார். சத்யஜித்ரே பதேர்பாஞ்சாலி எடுத்தார். ரவீந்தரநாத் தாகூர் சிறுகதைகள் சினிமா மூலமாகவே உலகம் முழுவதற்கும் அவரை எடுத்துச் சென்றன.

தில்லானா மோகனாம்பாள் மட்டமான சினிமாவா? தற்போது வந்த அழகி, ஆட்டோகிராப் எல்லாம் ஆபாசமான சினிமாவா?

ஆபாசம், வன்முறையை ஒழுக்கவாதிகளைவிட பாமர மக்கள் அதிகமாகவே தெரிந்து வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு எதை ஏற்பது நிராகரிப்பது என்பது எல்லோரையும்விட அதிகமாகத் தெரியும்.

கல்லாத பேர்களே=நல்லவர்கள் என்பது படிப்பு பற்றியது இல்லை. பகுத்தறியக் கூடியவர்கள் சம்பந்தப்பட்டது என்பதுதான் சரித்திரம்.

மாணவர்கள் மீது பலருக்கு அதிகமான அக்கறை வந்து இருக்கிறது. சுயநிதி கல்லூரிகள், நிகர் நிலைப் பல்கலைக் கழகங்கள்- என்று நிறையத் தொடங்கி இருக்கிறார்கள். பெற்றோர்கள் கை நிறைய சம்பளம் வாங்கும் கனவுகளோடு மகன், மகளைக் கொண்டு போய் அதில் சேர்த்து இருக்கிறார்கள். இது கல்வியின் காலம். கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் வேலைக்கு ஆட்களை தயார் செய்யும் தொழிற்சாலைகளாகிவிட்டன. கல்வி-என்பது வேலையை குறிவைத்து அடிக்கப்படும் இடமாகிவிட்டது. மாணவர் என்பவர் படிக்கும்-பயிற்சி பெறும் ஒரு ஜந்துவாகிவிட்டார். அதற்குத் தன் பயிற்சியைத் தவிர உலகத்தில் எதுவுமே இல்லை என்றாகிவிட்டது. அது இந்தக் காலத்தில் அவலம்.

மாணவர்கள் என்பவர் ஒரு நாட்டின் இளைய சமூகம். அதில் ஆண்-பெண் எல்லோரும் உண்டு. அவர்கள் மிருகங்கள் இல்லை. அதாவது மாடு மாதிரி வைக்கோல் தின்றுவிட்டு-பால் கொடுப்பது இல்லை. ஒவ்வொரு நாளும்-சுவை-ஒவ்வொரு வேளையும் களிப்பு களிக்கக் கூடியதாக வாழ வேண்டியவர்கள். அதில் வேலை என்பதும் ஓர் அம்சம். வாழ்க்கையே வேலை இல்லை. ஆனால் நன்றாக வாழ-வளமாக இருக்க வேலை வேண்டும். அதற்காகச் சம்பாதிக்க வேண்டும். திரைக் கடலோடியும் திரவியம் தேடு என்பது முன்னோர் வாழ்க்கை.

பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை என்பது திருவள்ளுவர் வாக்கு. ஆனால் பொருள் தேடுவதிலேயே வாழ்க்கையைக் கழிக்கச் சொல்லவில்லை. மானிட வாழ்க்கை-பிறப்பு முதல் இறப்பு வரை மகத்தானது. தானாகவே சிறப்பு அடைவதில்லை. அப்படி ஆக்கிக் கொள்ளக்கூடிய அறிவும் ஆற்றலும் திறனும் கொண்டது.

கலைகள் இல்லாத வாழ்க்கை ஓர் வாழ்க்கை இல்லை. விஞ்ஞான கண்டுபிடிப்புகள் எல்லாம் வாழ்க்கையை மேலும் மேலும் சந்தோஷமுள்ளதாக்கவே கண்டுபிடிக்கப்பட்டன. அதில் ஒன்று சினிமா. அதற்கென்று தனியாக எதுவும் கிடையாது. எதைக் கொடுக்கிறதோ-அதையே திருப்பிக் கொடுக்கும்.

நல்ல தரமான சினிமா எடுக்க முயற்சி வேண்டும். ஆர்வம் வேண்டும். அறிவு வேண்டும். அது சமூகத்தில் இருந்து வர வேண்டும். படிப்புதான் அதனைக் கொடுக்கும்.

நல்ல படிப்பு இருக்கும் நாட்டில் பொதுவான தரமான வாழ்க்கை இருக்கும். தரமான வாழ்க்கை இருந்தால் தரமான சினிமா இருக்கும்.

சாகித்ய அகதமி விருது பெற்ற சா.கந்தசாமி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவர்.அந்திமழைக்கென்று சா.கந்தசாமி எழுதும் பிரத்தியேக கட்டுரைகள் வாராவாரம் செவ்வாயன்று வெளிவரும்.
அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள...
Profile
Article 1, Article 2,Article 3,Article 4 ,Article 5,Article 6, Article 7 ,Article 8, Article 9, Article 10


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...