![]() |
கவிஞர்கள் கலாப்ரியா மற்றும் இளம்பிறை ஆகியோருக்கு சிற்பி இலக்கிய விருதுPosted : செவ்வாய்க்கிழமை, ஜுலை 20 , 2010 21:07:28 IST
கவிஞர் சிற்பி அறக்கட்டளை கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தமிழின் தலை சிறந்த கவிஞர்களைப் பாராட்டி விருது வழங்கி வருகிறது.
2010ஆம் ஆண்டுக்குரிய சிற்பி இலக்கிய விருது இரண்டு கவிஞர்களுக்கு அளிக்கப்படுகிறது.தமிழ்க் கவிதையில் புதிய தடம் பதித்த கலாப்ரியா. சிறந்த படைப்புகள் பல தந்த இளம்பிறை ஆகியோர் இந்த ஆண்டு விருது பெறுகின்றனர். சிற்பி இலக்கிய விருது மற்றும் ரூபாய் இருபதாயிரம் பரிசுத் தொகையும் சான்றிதழும் கொண்டது. இந்த ஆண்டுக்குரிய சிற்பி இலக்கியப் பரிசு பெறும் நான்கு கவிஞர்கள் அழகிய பெரியவன், மரபின் மைந்தன் முத்தையா, தங்கம் மூர்த்தி, சக்திஜோதி ஆகியோர். தலா ரூபாய் பத்தாயிரமும் சான்றிதழும் கொண்டது. வரும் ஆகஸ்ட் எட்டாம் தேதி காலை 9 .30 மணிக்கு நடைபெறும் விழாவில் கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் பி. கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் விருதுகளை வழங்குகிறார். கவிமாமணி தி.மு. அப்துல் காதருக்கு 'சொற்கலை வித்தகர்' என்ற சிறப்பு விருது வழங்கப் படுகிறது. அவர் விழாப் பேருரை ஆற்றுகிறார். பொள்ளாச்சி என். ஜி. எம். கல்லூரி விவேகானந்தர் அரங்கில் விழா நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று அறக்கட்டளைத் தலைவர் கவிஞர் சிற்பி அறிவிக்கிறார்.
|
|