???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக தொடரும் போராட்டம்! 0 வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திருமணம்! 0 சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு! 0 மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல்! 0 டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு 0 மதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறு வீடியோ: பெண் கைது! 0 போலீஸ் பணிக்கு கூலி வேலை செய்வதே மேல்: வைரலாகும் பதிவு! 0 CAA-க்கு எதிராக ஒத்துழைமை இயக்கம்: தி.மு.க. தீர்மானம் 0 மோகன் பகவத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பாலிவுட் நடிகை! 0 டாடாவின் காதல் தோல்வி! 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 31- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 காவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் 0 CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் 0 தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி! 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிரச்சினையை தீர்க்கச் சொல்லி பேசுகிறவனை கைது செய்வதுதான் தீர்வா?: சீமான் கடிதம்

Posted : திங்கட்கிழமை,   ஜுலை   12 , 2010  18:04:31 IST

வன்முறை மற்றும் பிரிவினையை தூண்டும் விதத்தில் பேசிய வழக்கில் நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் கைது செய்யப்பட்டார்.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவதைக் கண்டித்தும் ,ஈழத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்தும், நாம் தமிழர் இயக்கம் சார்பில் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டதில் கலந்துகொண்டு பேசிய சீமான், இதற்குமேல் தமிழக மீனவர்கள் சிறிலங்க கடற்படையினரால் தாக்கப்பட்டால், இங்குள்ள சீங்களவர்களை விடமாட்டோம் என்று கூறியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து வன்முறை மற்றும் பிரிவினையை தூண்டும் விதத்தில் பேசியதாக சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று சென்னை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்திப்பதாக சீமான் கூறியிருந்தார்.

பிரஸ் கிளப்பில் பேட்டி தரும் முன்னரே சீமானை பிடிக்க போலீசார் திட்டமிட்டிருந்தனர்.இன்று காலை 12 மணி அளவில் சீமான் சென்னை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்க வந்தபோது, போலீசார் அவரை கைது செய்தனர்.

கைதான சீமான் தான் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றை பத்திரிகையாளர்களிடம் வழங்கினார்.

சீமானின் அறிக்கையில் ,'உங்களை சந்திப்பதற்கு முன்பு நான் கைது செய்யப்பட்டால் சில செய்திகளை பகிர்ந்து கொள்ள முடியாது. எனவே இந்த கடிதத்தை தருகிறேன்.

வன்முறை பிரிவினையை தூண்டியதாக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் 561 பேரை சிங்கள ராணுவம் சுட்டு வீழ்த்தியது வன்முறையை தூண்டும் செயல் இல்லையா? எங்கள் மீனவர்கள் சுடப்படுவதை பாதிக்கப்பட்டவர்களின் குரலாக கருதி நான் பேசியதால் வன்முறை ஏற்பட்டு விட்டதா?

தி.மு.க. மீனவர் அணியினர் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராடினார்களே, இது யாருக்கு எதிராக ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாடு பிரிவது பிரினை வாதம் என்றால் உலகத்தில் சுதந்திரம் என்ற சொல்லே இருந்திருக்காது. இன்று கூட சிங்களர்கள் தமிழக மீனவர்களை தாக்கி இருக்கிறார்கள். இதற்கு அரசு என்ன பதில் சொல்லப் போகிறது.

மீனவர்கள் பிரச்சினையை தீர்க்காமல் பிரச்சினையை தீர்க்கச் சொல்லி பேசுகிறவனை கைது செய்வதுதான் தீர்வா? இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தனித் தமிழ் ஈழம்தான். இப்படி சொல்வது எப்படி பிரிவினையாகும். சிங்கள மீனவர்கள் எல்லை தாண்டி வரும்போது இந்திய ராணுவம் சுடாதது ஏன்?

எண்ணற்ற கேள்விகளோடு நேரமின்மையால் சிறை செல்கிறேன். வந்து சொல்கிறேன். நன்றியோடு உங்கள் சீமான்' என்று கூறப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சீமான் பின்னர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், நீதிபதி சீமானை ஜூலை 23ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்ட சீமான், அங்கிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...