???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பாதுகாப்பாக இருங்கள்- நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல் 0 7.5% உள் இடஒதுக்கீடு மசோதா: ஆளுநருக்கு முதல்வர் அழுத்தம் தரவில்லை | மு.க.ஸ்டாலின் 0 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி உதவி 0 'கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது சட்டவிரோதம் இல்லை' 0 தமிழக மக்களை நலம் விசாரித்து சசிகலா கடிதம்! 0 பாடத்திட்டங்களை குறைப்பது பற்றி 10 நாளில் முடிவு - அமைச்சர் செங்கோட்டையன் 0 ராஜஸ்தானிடம் படுதோல்வியடைந்த சென்னை! 0 3 நாள் பயணமாக வயநாடு செல்கிறார் ராகுல்காந்தி! 0 நன்றி... வணக்கம்...! விஜய் சேதுபதி அறிவிப்பு 0 நாடும் ஜனநாயகமும் ஆபத்தான நிலையில் உள்ளன: சோனியாகாந்தி 0 முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின் 0 பள்ளிக்கூடங்கள் திறக்க தற்போது வாய்ப்பு இல்லை: செங்கோட்டையன் திட்டவட்டம் 0 அரியர் கட்டணம் செலுத்திய பொறியியல் அல்லாத மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க முடிவு 0 தமிழகத்தில் 4000-க்கும் கீழ் பதிவான கொரோனா தொற்று 0 மேலும் 3 மாதம் கால அவகாசம் வேண்டும்: ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திராவிடக் கட்சிகள் தமிழுக்குச் செய்தது என்ன..? - போகிற போக்கில்..

Posted : திங்கட்கிழமை,   ஜுலை   05 , 2010  11:48:56 IST

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் பேசிய தமிழ் ஆர்வலர்கள் ’தமிழன் தமிழுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.தமிழுக்கு அமுது என்று பெயர்... அந்த அமுதைப் பருக ஏன் தயங்குகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். ஆங்கிலக் கலப்பு இல்லாமல் தமிழில் பேசுங்கள் , தமிழில் படியுங்கள். தமிழில் எழுதுங்கள். குறைந்தபட்சம் தமிழில் கையெழுத்தாவது போடப் பழகுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்கள்.

மொழி என்பது என்ன..?
அது தான் மனிதனின் அடையாளம். மனித இனம் தோன்றியபோது மொழி இல்லை . சைகையே மொழி. மனிதன் ஓசை மொழி மூலம் பேசத் துவங்கி அதற்கு எழுத்துகளை உருவாக்கி, இலக்கண கட்டமைப்பு வரையறுத்த போதுதான் ஆதிவாசியாக இருந்தவன் மனிதன் ஆனான்.அவனுக்கு நல்லது எது கெட்டது எது என்று பகுத்து சொன்னது அவன் மொழிதான். அதுதான் பகுத்தறிவு ஆனது.

மொழிகளில் தமிழ் மூத்தது. அது கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் தோன்றிய செம்மொழி. தமிழ் மொழியின் பெருமையை உலகுக்கு எடுத்து சென்ற பெருமை திருக்குறளையே சாரும். உலகின் எல்லா மொழிகளிலும் மொழி பெயர்க்கபட்ட பொது மறை அது.தமிழ் மொழி தமிழனின் அடையாளம் திருக்குறள்.
.
தமிழ் நூல்கள் பற்றி பெருமை பேசக் கூடிய விஷயங்கள் ஏராளம். தமிழனுக்குதான் அதன் அருமை, பெருமை எல்லாம் தெரிவதில்லை..குறைந்தபட்சம் தமிழில் கையெழுத்தாவது போடுங்கள் என்று தமிழனிடம் கெஞ்ச கோடிக் கணக்கில் செலவு செய்து மாநாடு நடத்த வேண்டியிருக்கிறது.தமிழ் மொழிக்கு ஆபத்தும் அவமானமும் தமிழ் நாட்டில் தான். தமிழ் மொழி பரவியுள்ள இலங்கையிலோ மலேசியாவிலோ.. இல்லை.

இலங்கை தமிழ்ப் பேரறிஞர் ஒருவரைப் பேட்டி கண்ட தமிழ்ப் பத்திரிகையாளர் கவலையுடன் தமிழ் மொழி பற்றிக் கேட்ட போது ’இலங்கையில் தமிழுக்கு எந்த ஆபத்தும் இல்லை.இலங்கைத் தமிழனுக்குத் தான். தமிழ் நாட்டில்தான் தமிழ் மொழியை காணவில்லை’ என்றார்..அது உண்மைதானே...?

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு இருபது தினங்களுக்கு முன் தான் வணிக நிறுவனங்கள் தமிழ்ப் பெயர்ப் பலகைகளை வைக்கவில்லை என்பதைக் கண்டுபிடித்து ஆங்கிலப் பெயர் பலகைகளை அகற்றி தமிழ்ப் பெயர் பலகைகளை வைக்க ஆணை பிறப்பிக்கபட்டது. தமிழ் நாட்டில் பெயர்ப்பலகைகளைத் தமிழில் எழுதவே ஆணை பிறப்பிக்க வேண்டுமாம்.தமிழின் நிலையும் தமிழனின் நிலையும் இதுதான்.தமிழனின் மோகம் ஆங்கிலத்தின் மீதுதான்..


திராவிடக் கட்சிகளின் அரசியல் மூலதனமே தமிழ் தான். தமிழ்தான் அவர்களுக்குக் கட்சி உருவாக்க உதவியது. மக்களிடம் செல்வாக்குப் பெற்றுத் தந்தது. ஆட்சியில் அமரவைத்தது.அந்தத் தமிழுக்கு அவர்கள் செய்த சேவை என்ன...? கைம்மாறு என்ன ...?

ஆட்சிக்கு வந்து நாற்பத்தி மூன்று ஆண்டுகள் கடந்த பின்னரே 'தமிழன் தமிழில் கையெழுத்துப் போடவேண்டும். தமிழில் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை' போன்ற அடிப்படைச் செயல்பாடுகளைப் பற்றி யோசிக்கிறார்கள். தமிழர் ஆட்சியின் லட்சணம் இது.

திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலங்களில்தான் கிண்டர்கார்டன், நர்சரிப் பள்ளிகள் , மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் போன்ற ஆங்கில வழிக் கல்விக் கூடங்கள் அதிகரித்தன. மம்மி, டாடி, எல்லாம் திராவிட ஆட்சியில் பரவலாக வார்த்தைகள் , தமிழனுக்கு இதெல்லாம் நெருக்கமானது திராவிட ஆட்சியில் தான் , தமிழே மூச்சு , எங்கள் பேச்சு என்று சொன்ன தமிழ்த் தலைவர்களின் குழந்தைகள் படித்தது ஆங்கில வழியில். இவர்கள் இந்தியை எதிர்த்தார்கள். ஆங்கிலத்தை வரவேற்றார்கள்.

சரி இந்தி எதிர்ப்பவையாவது ஒழுங்காகச் செய்தார்களா? இந்தி பிரச்சார சபா இந்தியை தபால் மூலம் கற்றுத் தருகிறது. அறுபதுகளில் தமிழ் நாட்டில் இந்தி கற்பவர்கள் சொற்பம்.இந்தி கற்பவர்களுக்காகத் தேர்வு நடத்தியதும் இந்தி பிரச்சாரசபா மட்டும்தான். திராவிட ஆட்சியில் தான் இந்தி படிப்பவர்கள் அதிகரித்தார்கள். தமிழகத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட இடங்கள் ஆனது.இந்தி தேர்வு மையங்கள் உருவாயின.

அறுபதுகளில் இந்தி கற்போர் சில நூறு பேர். திராவிட ஆட்சிக் காலத்தில் ஆயிரம் என்று துவங்கி பல லட்சம் ஆனது இப்போது எல்லாம் திராவிடக் கட்சித் தலைவர்களின் பேரன்களும் பேத்திகளும் இந்தி படிக்கிறார்கள். தனியாருக்குக் கல்வி நிலையங்கள் தொடங்கவும் கல்விக் கட்டண என்ற பெயரில் கொள்ளையடிக்க அனுமதித்தது திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தான்.
பொறியியல் , மருத்துவ கல்லூரி துவங்க பல தமிழினத் தலைவர்களுக்கு திராவிடக் கட்சி அரசுகள் அனுமதி வழங்கின.

எத்தனை தமிழினத் தலைவர்கள் தங்கள் கல்லூரிகளில் தமிழ் வழிக் கல்வியை அறிமுகம் செய்து இருக்கிறார்கள்?.பணம் பண்ண ஆங்கில கல்விதான் சரி என்று அவர்கள் கற்பிப்பது ஆங்கிலத்தில் தானே? , அனுமதி அளிக்கும் போது தமிழ் வழி கல்வி கட்டாயம் போதிக்க வேண்டும் என்று நிபந்தனை வழித்தால் கல்லூரி தொடங்க அனுமதி கேட்டு யாரும் வர மாட்டார்கள் என்பதே உண்மை. இவர்களின் தமிழ்ப் பற்று இதுதான்.மொழி என்பது இவர்களை பொறுத்தவரை விற்பனைச் சரக்கு. தமிழ் மொழி போணியாகாது என்பது இந்த திராவிட வியாபாரிகளுக்கு நன்கு தெரிந்து இருக்கிறது. ஆங்கிலத்திற்கு என்று விசேஷ வகுப்புகள் நடத்துவது இங்கிலாந்தில் இருந்து வந்த சர்ச்சிலோ , ராணி எலிசபெத்தோ அல்ல. தமிழன் தான்.
.
தமிழ் நாட்டில் உள்ள எத்தனை பல்கலைக்கழகங்கள் பிற மொழிகளில் தமிழ் நூல்களை மொழி மாற்றம் செய்து வெளியிட்டுள்ளன? திருக்குறள் போன்ற நன்நூல்கள் மொழிபெயர்ப்பு கூட தனியார் செய்தது தான் தமிழக அரசு எதுவும் செய்யவில்லை என்பதே உண்மை..

தாய்மொழியில் சிந்தித்து தாய்மொழியில் படித்தால் மாணவர்கள் அதை உள்வாங்கி கொள்வது எளிது என்ற உண்மையை தமிழ்...தமிழ் என்று சொல்லி ஆட்சியில் அமர்ந்த திராவிடக் கட்சிகள் தெரிந்து கொண்டார்களா..இல்லை.. அறிந்தும் அறியாமலும் இருக்கிறார்களா? தமிழுக்குச் செம்மொழித் தகுதி கிடைத்தது என்று பெருமை படலாம்.ஆட்சி மொழி என்ற தகுதி தமிழுக்குக் கிடைக்க மத்திய அரசிடம் போராடலாம்.நீதிமன்றத்தில் தமிழில் வாதாட மத்திய அரசை அனுமதி கேட்டு வலியுறுத்தலாம். அதற்கு முன் தாய்மொழிக்கு உரிய கவுரவம் கிடைக்க திராவிடக் கட்சிகள் என்ன செய்தன என்று முதலில் அவர்களே கேட்டுக் கொள்ளட்டும். மனசாட்சி உள்ள தமிழன் தமிழை தமிழன் மதிக்க முதலில் நடவடிக்கை எடுப்பான். மனசாட்சி உள்ள திராவிடக் கட்சிகள் என்றால் முதலில் தமிழனிடம் தமிழுக்கு மரியாதை பெற்றுத் தரட்டும். தமிழ் நாட்டில் தமிழ் நன்கு வாழட்டும் மற்றவை எல்லாம் தானாக கிடைக்கும். தானாக வரும்..


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...