![]() |
பேச்சு /எங்கும் பேச்சு - º¡.கந்தசாமியின் எழுத்தோவியம்Posted : சனிக்கிழமை, அக்டோபர் 29 , 2005 01:51:08 IST
மனிதன் ஒலியை எழுப்பக் கூடியவன். அதாவது ஒரே மாதிரி ஒலியை நினைவில் வைத்துக் கொண்டு எழுப்பக்கூடியவன். அதுவே மனிதன் பேசக் கூடியவன் என்று நிலை நிறுத்தி உள்ளது. பேச்சு மொழியாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. மனிதன் சுமார் நாற்பதுவிதமான ஒலிகளை எழுப்பிப் பேசுகிறான் என்று மொழியியல் அறிஞர்கள் கண்டுபிடித்து சொல்கிறார்கள். எல்லா மொழிகளுக்கு ஒலி-அதாவது சப்தந்தான் முக்கியம். அதில் அறிந்ததும் உண்டு; அறியாமல் இருப்பதும் உண்டு. அதாவது பொருள் அறிய முடியாமல் இருப்பது.
மனிதன் கண்டுபிடிப்புக்கள்தான் அவனை மற்ற விலங்குகளில் இருந்து வேறுபடுத்தி உள்ளது. கண்டுபிடிப்பு என்றால்- ஒன்று இரண்டு இல்லை. தன்னைப் பற்றியும் உலகத்தில் இருப்பதைப் பற்றியும்- இல்லாமல் இருப்பது பற்றியும் யோசித்து பேசி உள்ளான். கண்டுபிடிப்பு என்று அறுதிட்டுச் சொல்ல முடியாத கண்டுபிடிப்பு பேச்சு. அந்தப் பேச்சில்தான் கணிதம், விஞ்ஞானம், வேளாண்மை, வானவியல், இலக்கியம் எல்லாம் இருந்து வந்தன. அப்புறம் மனிதன் (மனித்துக்களைக்?) கண்டு பிடித்தான். மனிதன் சுருக்கமாக-இலக்கியப் பூர்வமாக-பேசக் கூடியவனாகி இருபதாயிரம் ஆண்டுகள் ஆகிறது என்றால் எழுதக்கூடியவனாகி சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டதுதான் என்று சரித்திர ஆசிரியர்கள் கூறுகிறார்கள். பல சமூகங்கள் தங்கள் இலக்கியத்தை நெடுங்காலம் வாய்மொழி இலக்கியமாகவே வைத்து இருந்தன. சமஸ்கிருத மொழியை அதற்கு ஓர் எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டும். வேதம் என்பது நெடுங்காலத்திற்கு வாய் மொழி இலக்கியமாகவே இருந்து வந்தது. அது ஓர் அமைப்புக்குள் கொண்டு வந்துவிட்டபடியால் எங்கு அது எடுத்துச்செல்லப்பட்டாலும் குறைபாடு ஏற்படுவது இல்லை. மக்கள் பேசுகிற மொழி என்பது பல நிலைகளில் உள்ளது. இடத்திற்கு இடம் மாறக்கூடியது. ஒரே இடத்திலுங்கூட குடும்பத்திற்கு குடும்பம் மாறக் கூடியது பழக்கம், படிப்பு, வேலை பார்க்கிற இடம், சமூக அந்தஸ்து பற்றி பேச்சு வழக்கில் மொழியின் சொற்கள் கைவிடப்படுவது உண்டு. எல்லா பேச்சு மொழிக்கும் உள்ள பிரச்சினை அதுதான். இலக்கியம் நெடுங்காலமாக பேச்சு மொழி என்பதை கைவிட்டு விட்டு இலக்கியமான-தரப்படுத்தப்பட்ட மொழியில் எழுதப்பட்டு வந்தது. இலக்கியம் கவிதையாக இலக்கியம் படைத்தவர்கள் புலவர்களாக- இருந்தனவாயில் சிக்கல்கள் இல்லை. ஏனெனில் படிப்பாளர்களும் படிக்கின்றவர்களும் அநேகமாக ஒரே தரத்தில் மொழிப் புலமையில் இருந்தார்கள். எனவே அதில் புரிந்து கொள்ளும் பிரச்சினை இல்லை. கவிதை எழுத அவர்கள் நிகண்டுகளை வைத்துக் கொண்டு இருந்தார்கள். ஒரு பொருளுக்குப் பல பெயர்களை நிகண்டு எடுத்துக் காட்டியது. ஆனால் படிப்பு, பரவலாகிய பின்னர் இலக்கியத்தின் நோக்கம்-அடிப்படை மாறிய பின்னர் சாதாரணமாக மக்கள் இலக்கியத்தில் இடம்பெற்È¡ர்கள். அவர்கள் தங்களின் இயல்பான மொழியில்தான் பேசுவது, சரியாக இருக்குமென நம்புகிறார்கள். எனவே நவீன இலக்கியத்தில் பேச்சு மொழி ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டது. பேச்சுமொழி என்பது அடிக்கடி மாறக் கூடியது. ஒரு தலைமுறைக்குக் கூட அது நிலை கொண்டு இருப்பது இல்லை. வாழ்க்கை வசதிகள், படிப்பு, அந்தஸ்து கூடுகிறபோது முதலில் பலியிடப்படுவது மொழிதான். அதும் சமூக கலாச்சார பொருளாதார ரீதியில் பின்தங்கி உள்ளவர்கள் முதலில் தங்களின் பேச்சு மொழியை கைவிடுகிறார்கள். மொழி மூலம் வருகிற அடையாளம்- அடையாளம் காட்டிவிடுகிறது என்று நம்புகிறார்கள். எனவே அதைத் துடைக்க படிப்பின் வழியாக- பணி செய்கிற இடத்தின் வழியாக- வானொலி, தொலைக்காட்சியில் கேட்டதின் வழியாக வரும் சொற்களைப் படித்துக் கொள்கிறார்கள். சிங்கப்பூர் ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, "ரைஸ் கொண்டு வா?" என்ற குரல் கேட்டது. திரும்பிப்பார்த்தேன். என்னோÎ இருந்த சிங்கப்பூர் தமிழர், "ரைஸ் கேட்டது இந்தியத் தமிழர்; சிங்கப்பூர் தமிழர் சோறு என்றுதான் கேட்பார்" என்றார். ரைஸ்- என்பது தமிழ்ச் சொல்லை மூலமாக கொண்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் ரோம், கிரேìகத்தோடு வணிகத் தொடர்பு கொண்டு இருந்தபோது அரிசி ஏற்றுமதி செய்து கொண்டு இருந்தார்கள். கிரேக்க மொழியில் Orydza, லத்தீனில் Oryza, இத்தாலியில் rico என்று அழைக்கப்பட்டது அரிசி, நெல் என்று சொக்லோவிஷியா தமிழ் அறிஞர் கமில் சுலபில் எழுதி உள்ளார். பேச்சு மொழியை எழுதி ஸ்தாபிக்க முடியாது. ஏனெனில் அதன் சுவையும், அழகும் வரிவடிவத்தில் கிடையாது. பேச்சு மொழியை பேச்சு மொழியாகவே பதிவு செய்து பாதுகாக்க வேண்டும். பிரபல மொழி அறிஞரான டி.பி. பட்டநாயக்கிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னார்; (அவர் தமிழ் உட்பட பல மொழிகள் கற்றவர். மைசூரில் உள்ள இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தின் தலைவராக இருந்தவர்) ஒவ்வொரு பத்து கிலோ மீட்டர் தொலைவை எல்லையாக வைத்துக் கொண்டு பேச்சுமொழியைப் பதிவு செய்ய வேண்டும். அது எல்லா இந்திய மொழிகளிலும் செய்யப்பட வேண்டியது அவசியம் என்றாலும், தமிழ் மொழிக்கு உடனடியாகத் தேவை. ஏனெனில் அது பழம்பெரும் மொழி. பல அரிய சொற்கள் பழமையான சொற்கள் மக்கள் பேச்சுவழக்கில் உள்ளன. அது மறைந்து போவதற்குள் பேச்சின் தொனியைப் பிடித்து வைக்க வேண்டும் என்றார். செல்போன் வந்த பின்னர் எல்லா இடத்திலும் பேச்சை கேட்க முடிகிறது. டெலிபோனில் ஒலித்த முதல் குரல் கிரகாம்பெல்லின் குரல். மாடியில் இருந்த தன் உதவியாளர்க்கு அவர் பேசிய முதல் பேச்சு "மிஸ்டர் வாட்ஸன். கீழே வாருங்கள். வேலை இருக்கிறது" என்பதுதான். தற்காலத்தில் பேச்சு ஒரு வேலையாக இருக்கிறது. பேசத்தெரிந்தவர்கள் சாதிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் மெளனமாக இருக்கக் கற்றவன் மா மனிதன். சாகித்ய அகதமி விருது பெற்ற சா.கந்தசாமி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவர்.அந்திமழைக்கென்று சா.கந்தசாமி எழுதும் பிரத்தியேக கட்டுரைகள் வாராவாரம் செவ்வாயன்று வெளிவரும். அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள...Profile Article I, Article II,Article III,Article IV ,Article V,Article VI, Article VII ,Article VIII, Article IX
|
|