அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இலங்கை அரசுக்கு ரூ.5ஆயிரம் கோடியா? பெரும் கேடாக முடியும்- வைகோ

Posted : சனிக்கிழமை,   ஜுன்   12 , 2010  23:51:03 IST

தமிழ் இனத்தைப் பூண்டோடு அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் ராஜபக்சேவுக்கு இப்பொழுது, மேலும் 5,000 கோடி ரூபாயைக் கொடுப்பது, ஈழத்தமிழர்களுக்கு மட்டும் அல்ல, தமிழகத்துக்கும், இந்தியாவுக்குமே எதிர்காலத்தில் பெருங்கேடாக முடியும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஈழத்தமிழ் இனத்தை நிரந்தர அடிமை இருளில் நசுக்கத் திட்டமிட்டு உள்ள ராஜபக்சேவுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் கோலாகல வரவேற்பு. ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாம். சிங்கள அரசுடன், டெல்லி போட்ட ஒப்பந்தங்கள்.

டெல்லி ராஜகட்டத்தில் காந்தியார் கல்லறையில், 'ஏழு பாவங்கள்' என்று எழுதப்பட்டு இருக்கிறது. அத்தகைய பாவச் செயல்களை, இந்திய அரசு செய்து உள்ளது.

ஈழத்தமிழ்ப் பெண்களை மிகக் கொடூரமாகக் கற்பழித்துக் கொன்று எரித்த கோர நிகழ்ச்சிகளை நினைக்கும்போதே நெஞ்சை அடைக்கிறது. இத்தகைய சிங்கள ராணுவத்துக்கும், காவல்துறைக்கும்தான் இந்தியாவில் நவீனப் பயிற்சிகளாம்! இலங்கையில் மின்சார உற்பத்தி ஆயிரம் கோடி ரூபாயும், ரெயில்வே உள்ளிட்ட மற்ற திட்டங்களுக்கு 4,000 கோடி ரூபாயும் கொடுக்க, இந்தியா ஒப்புக் கொண்டு உள்ளது. ஏற்கனவே, ராடார்கள் உள்ளிட்ட ஆயுதங்களையும், ஆயிரம் கோடி ரூபாயையும் இந்தியா கொடுத்து இருக்கிறது.

தமிழ் இனத்தைப் பூண்டோடு அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் ராஜபக்சேவுக்கு இப்பொழுது, மேலும் 5,000 கோடி ரூபாயைக் கொடுப்பது, ஈழத்தமிழர்களுக்கு மட்டும் அல்ல, தமிழகத்துக்கும், இந்தியாவுக்குமே எதிர்காலத்தில் பெருங்கேடாக முடியும்.

சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையில் கால் ஊன்ற விடாமல் தடுப்பதற்கு என்று சொல்லிக்கொண்டே, இந்தியா இலங்கைக்கு பல்லாயிரம் கோடி உதவியும், ராணுவ உதவிகளும் செய்வது மிகவும் தவறான நடவடிக்கை ஆகும். இந்தியாவிடம் இருந்து எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டே, எதிர்காலத்தில், சீனாவும், பாகிஸ்தானும், இலங்கையில் பலத்த அடித்தளம் அமைக்க, ஏற்பாடு செய்யப்போவது ராஜபக்சேதான்.

இலங்கைத் தீவில் தமிழ் ஈழம் அமைவதும், ஈழத்தமிழர்கள் வலுப்பெறுவதும் மட்டும்தான் தாய்த் தமிழகத்துக்கு மட்டும் அல்ல, இந்தியாவுக்கே பாதுகாப்பு அரணாக அமையும்.

பிரபாகரனின் தாய், பார்வதி அம்மையார் தமிழக மண்ணில் கால் எடுத்து வைக்கக்கூட அனுமதிக்காத இந்திய அரசு, தமிழ்நாட்டில் 1986-ம் ஆண்டு நவம்பர் 1-ல் ஒரு தலித் இளைஞன் திருநாவுக்கரசை சுட்டுக்கொன்ற கொலைக் குற்றவாளி டக்ளஸ் தேவானந்தாவுக்கு, வரவேற்புக் கொடுப்பதும், அவரோடு பிரதமர் மன்மோகன்சிங் கைகுலுக்குவதும், தமிழர்களின் தன்மானத்துக்கு இந்திய அரசு விடுக்கின்ற சவால் என்று வைகோ கூறியுள்ளார்.


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...