அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பிறந்த நாளுக்கு மெளண்ட் ரோட்டில் வினயல் போர்ட் வைக்க கூடாது..

Posted : புதன்கிழமை,   ஜுன்   02 , 2010  01:15:01 IST

தலைவர்கள் தான் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடத்த வேண்டுமா?
சாமானியமானவர்கள் என்ன செய்யலாம்..

அதிக காசு செலவில்லாமல் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடத்த இருக்கவே இருக்கு வெப்..பலர் உற்சாகமாக கொண்டாடுகிறார்கள்..

சாம்பிளுக்கு..பத்திரிக்கையாளர் கடற்கரையின் இணைய பிறந்த நாள் கொண்டாட்டங்கள்..(தமிழ் சிறு பத்திரிகை வெளியில் 98-ல் இருந்து இயங்கிவரும் இவர் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிறந்தவர். இதுவரை 'இயல்பின்றி தவிக்கும் வீடு' 'விண் மீன் விழுந்த இடம்' இரு கவிதைத் தொகுப்புகள் வெளி வந்துள்ளன.கவியரசு கண்ணதாசன் விருது, சிற்பி விருது,போன்ற விருதுகள் பெற்றவர். தொன்மம் என்ற அமைப்பின் இயங்கிவருபவர். குங்குமம் இதழில் ஐந்தாண்டுகள் பணியாற்றிவிட்டு, தற்சமயம் குமுதம் வார இதழில் பணியாற்றுகிறார்.)

மயில்வானன் பெரியசாமி: கடற்கரய் - இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே!

தமிழ் மனவாளன் :
கனிவான கடலே வாழ்க!
கடற்கரையே வாழ்க!
கரையின் கலங்கரையே வாழ்க!
கலங்கரையின் விளக்கே வாழ்க!
விளக்கின் வெளிச்சமே வாழ்க!

கடற்கரய் :அலைகடலாக என் பிறந்த நாளைக்கு திரண்டு வந்திருக்கும் அன்பர்களேளளளஏஏஏஏ..நண்பர்களேளளளஏஏஏஏஏ.. கழகத்தின் கண்மணிகளேஏஏஏஏஏ..கொள்கைக் கூட்டாளிகளேஏஏஏஏ..பாசறை சிறுத்தைகளேஏஏஏஏஏ..பாயும் புலிகளேஏஏஏஏ..பச்சை,மஞ்சள்,சிகப்பு,ஊதா,வைலட் தமிழர்களே,ஏஏஏ..அசராத சிங்கங்களேஏஏஏஏஏ..அஞ்சா நெஞ்சங்களேஏஏஏ..அற்வை தங்கங்களேஏஏஏஏ..ரத்தத்தின் ரத்தங்களேஏஏஏஏ..எண் உயிரினும் மேலான உடன் பிறப்புகளேஏஏஏஏஏ..

கடற்கரய் : என்னுடைய பிறந்த நாளைக்கு மெளண்ட் ரோட்டில் வினயல் போர்ட் வைப்பது,பேரணிகள் நடத்துவது,பட்டாசு கொசுத்தி மாசுக் கட்டுப்பாட்டிற்கு எதிராக செயல்படுவது,மாநகர பேருந்துகளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு வந்து என்னை சந்திக்க முயல்வது,கவியரங்கம்,பொதுக்கூட்டங்கள் நடத்துவது,உற்சாக மிகுதியில் அசம்பாவிதங்களீல் ஈடுபடுவது போன்ற காரியங்களில் இறங்குவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிக்கொள்கிறேன்.

ஒட்டக்கூத்தர்: ஒவர் பில்டப்பா இருக்கே... கடற்கரய்

Parameswaransivan Sivan கடற்கரய்க்கு அலை அலையாக வந்து மோதும் வாழ்த்துகளில் ஒன்றாக இணைகிறது இந்த வாழ்த்தும். இனிய பிறந்த நாள்
வாழ்த்துகள்!

கடற்கரய் :மாப்ள சரக்கு இல்லையா..?வெறும் வாழ்த்து மட்டும்தானா..நன்றிநன்றிநன்றி

Asadha Arul 420 வது வட்டம் சார்பாக அண்ணனுக்கு இந்தக் கதராடையை பொன்னாடையாக அணிவித்து எனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.....(கை தட்டுங்கப்பா.....)

கடற்கரய் :ஆஹா..உடன் பிறப்பே..என் உண்மை தமிழே..

Shiva Sivarajan கொள்கை கூட்டாளியே... பாசறை சிறுத்தையே... பாயும் புலியே... பச்சை, மஞ்சள், சிகப்பு, வைலட் தமிழனே, அசராத சிங்கமே............. பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.....!!!!!!!!!!!!!!

கடற்கரய் : என்ன வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே?

Shiva Sivarajan பிறந்த நாளுக்கு ஏரியா முழுவதும் போஸ்டர் அடிச்சு ஒட்டியிருக்கோம்... அன்னதானம், இலவச திருமணம்... அது இதுன்னு... ஏகப்பட்டது பண்ணியாச்சு... மாலை பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்கு வந்து சேருங்க...!!!!!

Tharai Ilamathi Mathi நண்பரே... பிறந்தநாள் வாழ்த்துக்கள்... நேரில் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல வந்தேன்.. தலைவருக்கு வாழ்த்துச் சொல்ல நின்ற வரிசை குறையவே இல்லை.. அதனால் தான் நட்பு பட்டறை முலம் வாழ்த்து அனுப்புகிறேன்..

கடற்கரய் :இன்று அதிகாலைதான் தொண்டர்கள் கூட்டம் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது ஆகவே உங்களை சந்திக்க முடியாமைக்கு என் வருத்தங்கள்..உங்களின் வாழ்த்துக்கு நன்றி


கடற்கரய் : உங்கள் அத்தனை பேருக்கும் ஸ்பெஷல் தாங்க்ஸ்..

Tail Piece:
அரசியல் நமது வாழ்க்கையை அதிகமாக பாதித்துள்ளதால் அதை ஒன்றும் செய்யமுடியாத பொதுஜனம் தங்களைத் தாங்களே கேலிசெய்து கொள்கிறார்கள்..


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...