???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கான பயிற்சி அடுத்த மாதம் தொடங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் 0 நீட் தேர்வு கருணை மதிப்பெண்கள் விவகாரம்: சி.பி.எஸ்.இ தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீது வெள்ளிக்கிழமை விசாரணை 0 ஊழல் வழக்கில் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீப், மகள் மர்யம் நவாஸின் ஜாமின் மனு நிராகரிப்பு 0 எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனத்தில் இரண்டாவது நாளாக நீடிக்கும் வருமான வரி சோதனை! 0 ஓரினச் சேர்க்கைக்கு எதிரான குற்றப்பிரிவு சட்டத்தை நீக்க கோரிய வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்! 0 உலகக்கோப்பை சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய பிரான்ஸ் கால்பந்து வீரர் கிலியன் எம்பாப்பே 0 ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் மீது தாக்குதல் 0 புலன் மயக்கம் - 93 - ஏன் அவர் மேஸ்ட்ரோ [பகுதி-3] இசைவழி முத்தங்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்! 0 தென்மாநிலங்களில் கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 0 பினாமி வீடுகளில் வருமானவரி சோதனை: முதலமைச்சர் பதவி விலக மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: 18 பேர் கைது 0 மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டுகிறது! 0 நாடாளுமன்றம் சுமூகமாக செயல்படவே எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன: குலாம்நபி ஆசாத் 0 46% இந்தியர்கள் லஞ்சம் கொடுத்து பாஸ்போர்ட் பெறுகிறார்கள்: ஆய்வில் தகவல் 0 ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துகுவிப்பு புகாரை விசாரிக்க நீதிமன்றத்தில் மனு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நாங்கள் மறந்து விட்டோம், நீங்களும் மறந்து விட்டீர்கள் என நம்புகிறோம் - மு.கவிற்கு ராமதாஸ் கடிதம்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   மே   30 , 2010  20:15:19 IST

இன்று மாலை நடந்த திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் பாமகவை கூட்டணியில் சேர்ப்பது குறித்து சாதகமான முடிவு எட்டப்பட்டுள்ளது.

இன்று மாலை அண்ணா அறிவாலயம் முரசொலி வளாகத்தல் உள்ள கூட்ட அரங்கில் திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு தலைவர் கருணாநிதி தலைமையில் கூடியது.

பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த 26.04.2010 மற்றும் 15.04.2010 ஆகிய தேதிகளில் இரண்டு கடிதங்களை திமுக தலைவர் கருணாநிதிக்கு அனுப்பினார்.

ராமதாஸ் எழுதிய கடிதங்கள் திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழுவில் பார்வைக்கு வைக்கப்பட்டன.

ராமதாஸ் கடிதத்தில் கூறியிருப்பதாவது,'கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாமக நிபந்தனையற்ற ஆதரவு அளித்தது. அன்று முதல் இன்று வரை திமுகவுக்கு ஆதரவு என்கிற நிலைமையில் மாற்றமில்லை.

தோழமை கட்சிகள் ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி ஆதரவை விலக்கிக்கொண்டாலும், பாமக உறுதியாக இருந்தது.

இடையே நடைப்பெற்ற சில விரும்பத்தகாத சம்பவங்களை நாங்கள் மறந்து விட்டோம். அதேபோல் நீங்களும் மறந்து விட்டீர்கள் என நம்புகிறோம்.

முன்பு அதிமுக ஆட்சியில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கலைக்கப்பட்ட சட்ட மேலவை கொண்டுவரப்படுவதற்கு, பாமக ஆதரவு தெரிவித்து வாக்களிப்பில் கலந்து கொண்டது. இந்த இணக்கம் தொடர பாமக விரும்புகிறது.

2011 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திமுக தலைமையிலான ஆட்சி அமைய பாமக விரும்புகிறது. அதனால் திமுக கூட்டணியில் பாமக போட்டியிட விரும்புகிறது.

2006ல் 6 எம்எல்ஏக்களைக் கொண்ட சிபிஐக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டது. 2008ல் 9 எம்எல்ஏக்களைக் கொண்ட மா.கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டது.


அதேபோல் 2010ல் நடக்க உள்ள மாநிலங்களைத் தேர்தலில் பாமகவுக்கு ஒரு இடம் கொடுக்க வேண்டும் என விரும்புகிறோம் 'என்று கூறியிருந்தார்.


2011ஆம் ஆண்டில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் பாமகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று திமுக கூறியுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...