அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

'இது போன்ற மகிழ்ச்சியை நீ மட்டும் தான் தர முடியும்' - ரெட்டச்சுழிக்கு முன் நடந்த தாமிராவின் 20 வருட போராட்டம்

Posted : வியாழக்கிழமை,   மே   06 , 2010  10:28:42 IST

ரெட்டச்சுழி இயக்குநர் தாமிரா நேர்காணல்

தமிழ் சினிமா இயக்குநர்களில் மிகப்பெரும் ஆளுமைகள் பாலசந்தரும் பாரதிராஜாவும். . இருவரும் தனித்தனியாகச் சில படங்களில் நடித்திருந்தாலும் முதல் முறையாக இமயமும் சிகரமும் 'ரெட்டச்சுழி ' படம் மூலம் இணைந்திருக்கிறர்கள். , இணைத்தவர் இயக்குனர் தாமிரா . சிறு வயது முதல் சினிமா வரையிலான தாமிராவின் அனுபவங்கள் அந்திமழைக்கான பிரத்தியேக சந்திப்பில்...

சிறு வயது முதல்...

சினிமா ஆர்வம் இந்த வயசுல இப்படி வந்ததுனு சொல்லமுடியாது . சின்ன வயதில் இருந்து கதை கேட்கிற பழக்கம் உண்டு.5வது 6வது படிக்கும் போது நானே நண்பர்களை அழைத்து என்னுடைய இஷ்டத்துக்குக் கற்பனையில் கதை சொல்ல ஆரம்பித்தேன் .இதன் மூலம் கதை சொல்லும் திறன் என்னுள் வளர்ந்தது.பள்ளியில் படிக்கும் போது நடக்கும் நடகங்களில் நடிக்க அப்போது ஆர்வம் உண்டு , பேச்சு போட்டியில் கலந்து கொள்ள எழுதுவதன் மூலம் எழுத்தார்வம் வளர்ந்தது.அதுவே கல்லூரி பருவத்தில் அந்த எழுத்து கவிதையாய் மாறியது , கவியரங்கங்களில் கலந்து கொள்வதன் மூலம் கவிதை எழுத ஆரம்பித்தேன். இது சினிமாவிற்கான ஆயத்தம் என்று சொல்ல முடியாது, என்னை முதன்மைப் படுத்தி கொள்ளும் எண்ணம் என்று சொல்ல வேண்டும்.இப்படி என் எழுத்து பயணம் வேறு வேறு பாதைகளில் சென்று சிறுகதையாக வடிவம் எடுத்தது.

பத்திரிகையில் இருந்து சினிமாவிற்க்கு...

பத்திரிகைகளுக்கு கதைகள் எழுதி அனுப்ப அனுப்ப திரும்பி வந்து கொண்டே இருந்தன . இப்படி சென்று கொண்டு இருக்கையில் என் முதல் சிறு கதை " குஞ்சு " கல்கியில் வெளிவந்தது . தொடர்ந்து நிறைய சிறுகதைகள் எழுதினேன்.பின் இதன் அடுத்த படி என்ன ? சினிமா. சினிமா வை நான் தேர்ந்தெடுக்க இன்னொரு காரணமும் உண்டு . என் அப்பா 60களில் சினிமாவில் வாய்ப்பு தேடி தோற்று போனவர்.அவர் சினிமாவில் பாடகராக விரும்பினார்.நல்ல குரல் வளம் உண்டு.சென்னையில் எப். நாகூர் என்று ஒரு இயக்குநர். அவர் அப்பாவின் சொந்தம் அவர் வீட்டில் தங்கி வாய்ப்பு தேடினார்.வாழ்க்கை சூழல் அவரை சினிமாவிற்குள் நுழைய விட வில்லை.சொந்த ஊருக்கே போய் விட்டார்.
60 களில் என் அப்பா வந்து சென்ற பாதையில்.. 90 ல் நானும் வந்தேன்.சினிமாவில் முதல்படி என்பதால் எப்படி அணுகுவது என்று தெரியவில்லை.சிறுகதையை அடையாளமாய் வைத்து பத்திரிகையில் சேர்ந்தேன்., பத்திரிகையில் ரிப்போர்ட்டராக வேலை பார்த்து கொண்டு சினிமாவில் வாய்ப்பு தேடினேன். தொடர்ச்சியாக கதைகள் எழுதி கொண்டு இருந்தேன் . அந்த கதைகள் மேல் உள்ள மதிப்பீட்டில் யாரும் சினிமாவில் சேர்த்து கொள்ள வில்லை.அதனால் உதவி இயக்குனராக யாரிடமும் பணிபுரியும் வாய்ப்பு இல்லாமல் போனது , அதற்கு பின் வாழ்க்கை சூழல் சென்னைக்கும் நெல்லைக்கும் அலைய வைத்தது .பிறகு அப்பாவை போல நானும் இது முடியாது என்று சொந்த ஊருக்கே சென்று கல்யாணம் குழந்தை , விவசாயம் என்று வாழ்க்கை போய் கொண்டு இருந்தது.ஓய்வு நேரங்களில் நண்பர்களிடம் சினிமா பயணம் பற்றி பேசிக்கொண்டு இருக்கையில் நீ சரியாக முயற்சி செய்யவில்லை என்றார்கள். கடைசியாக ஒரு முயற்சி என்று முதல் குழந்தை பிறந்த பின் 98ல் மீண்டும் சென்னைக்கு வந்தேன் .

கடைசி முயற்சி....

அப்போதும் வாய்ப்பு கிடைக்கவில்லை.குடும்பம் குழந்தை என்று ஆன பிறகு இனிமேல் உதவி இயக்குநராக பணி புரிந்து அதன் பின் இயக்குநராவது என்றும் எந்த பக்கம் சாய்வது என்றும் மனக்குழப்பம்.ஸ்கிரிப்ட் எழுதும் அனுபவம் இருந்ததால் தமிழ் சினிமாவில் ஸ்கிரிப்ட் எழுதும் வாய்ப்பு தேட முடிவு செய்தேன்.ஆனால் தமிழ் சினிமாவில் அதற்கான இடமே இல்லாமல் இருந்தது.

அப்போது இயக்குநர் பாலச்சந்தரின் மின்னஞ்சல் தொலைக்காட்சி தொடரில் மைக்ரோ தொடர்களுக்கு கதை கொடுக்கலாம் என்று முடிவு செய்தேன்.அப்போது என் சூழ் நிலை இன்னும் ஒரு மாதம் தான் சென்னையில் தாக்குபிடிக்க முடியும் என்ற நிலை.வழக்கமாக ஒரு மாதம் வாடகை கொடுக்க முடியவில்லை என்றால் அட்வான்சில் கழித்து கொள்ளுங்கள் என்போம். அது மாதிரி தொடர்ச்சியாக செய்து ஒரு மாத வாடகைதான் அட்வான்சில் மீதம் இருந்தது. அந்த சூழ்நிலையில் தான் கதையை கொடுத்தேன்.அந்த கதையை அவர்கள் தேர்வு செய்தார்கள். " ஸ்வேதா " என்ற அந்த கதையை சமுத்திர கனி இயக்கினார்.ஒரு கதையை எவ்வளவு நாளில் ஸ்கிரிப்ட் எழுதி கொடுப்பீர்கள் என்று கவிதாலயாவில் கேட்டார்கள்.நான் இரண்டு நாளில் கொடுக்கிறேன் என்றேன்.200 நிமிட கதையை இரண்டு நாளில் செய்து கொடுப்பது என்பதை அவர்கள் நம்பவில்லை.. எப்படி முடியும் என்றார்கள்.இரண்டு நாளில் கொடுத்தேன்.அப்போது அந்த வேகமும் தரமும் அவர்களுக்கு பிடித்தது. பின் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுத்தார்கள்.ஒரே சமயத்தில் இரண்டு , மூன்று ஸ்கிரிப்ட் எழுதினேன்.

அப்போது குங்குமத்தில் வெளிவந்த எனது சிறுகதை ஒன்றை படித்து விட்டு என்னை பார்க்க பாலச்சந்தர் சார் அழைத்தார். ரொம்ப நாள் படிக்காமல் இருந்தேன் , இந்த கதை படிக்கும் ஆர்வத்தை தூண்டியது.அதனால் தான் உங்களை பார்க்க அழைத்தேன் என்று சொன்னார்.இதை ஸ்கிரிப்ட் எழுதி தர முடியுமா என்றார் , தருகிறேன் என்றேன். எவ்வளவு நாளில் கிடைக்கும் என்றார். இரண்டு நாளில் தருகிறேன் என்றேன். 3 கதாபாத்திரங்களை வைத்து 200 நிமிட ஸ்கிரிப்ட் எழுதுவது சவாலாக இருந்தது. பின் அந்த ஸ்கிரிப்ட் கொடுக்கும் போது இதை படமாக ஏன் செய்ய கூடாது என்றார்.அப்போது எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது , சினிமாவிற்கான கதை என்னால் எழுத முடியும் என்று . அந்த சூழ்நிலையில் அதை படமாக்குவது முடியாத காரணமாய் இருந்தது . அதன் பின் அவர் " அண்ணி " மெகா தொடரில் திரைக்கதை எழுத வாய்ப்பு கொடுத்தார். மெகா தொடரின் மேல் எனக்கு ஈடுபாடு இல்லாமல் இருந்தது . அவர் மேல் உள்ள மரியாதையில் அதை ஒத்து கொண்டேன்.அதன் பின் ஒரு 7 வருட வாழ்க்கை சீரியலில் போனது.



சினிமாவில்.....

இந்த சந்தர்பத்தில் பாலச்சந்தர் சாருடன் எனக்கு ஏற்பட்ட நெருக்கத்தை ஆத்மார்த்தமான நட்பு என்றே சொல்ல வேண்டும் . அப்போது அவர் " பொய் " படம் பண்ணினார் , அதன் ஸ்கிரிப்ட் வேலை எல்லாம் கூட இருந்து செய்தேன்.அப்போது ஒரு நாள் அவர் என்னை கூப்பிட்டு அந்த படத்திற்கு வசனம் எழுதச் சொன்னார். அன்று முதல் ஆரம்பித்தது சினிமா வாழ்க்கை.பிறகு கன்னடத்தில் ஒரு படம் திரைக்கதை எழுதினேன்.கன்னடத்தில் அந்த படம் வெள்ளி விழா கொண்டாடியது.

பிறகு ஒரு நம்பிக்கையோடு பாலச்சந்தர் சாரை சந்தித்து நான் சினிமா எடுக்க வாய்ப்புத் தேடப் போகிறேன் என்றேன்.அவர் ஸ்கிரிப்டை கொடு என்றார், ரெட்டசுழி கதையை கொடுத்தேன். நல்லா இருக்கு இதை படமா பண்ணலாம் என்றார் . பின் முழுக்க முழுக்க இதை பாடமாக்குவதில் முயற்சி செய்தேன்.அப்போது பாலச்சந்தர் சார் ஒரு மாதத்திற்கு உன் குடும்பத்திற்கு எவ்வளவு செலவாகும் என்றார். நான் பத்தாயிரம் வரை செல்வாகும் என்றேன். நான் தருகிறேன் நீ இதை படமாக்கு என்றார்.பல கம்பெனிகளில் ஏறி இறங்கினேன்.. கதை பிடித்தாலும் குறைந்த செலவில் படமாக்கி தர முடியுமா என்றார்கள். இவ்வளவு குழந்தைகளை வைத்து இவ்வளவு செலவில் படம் பண்ணுவது எளிதல்ல.பின் பாலச்சந்தர் சாரிடம் போய் சொன்னேன். அவர் ஆமாம் ஆர்ட்டிஸ்ட் வேல்யூ இல்லாமல் இதை பண்ணமாட்டார்கள் என்றார். பின் அவரிடமே தொடர்ச்சியாக வேலை பார்த்து கொண்டு இருந்தேன் . அப்போது அவருக்கான ஒரு ஸ்கிரிப்ட் வேலை நடந்து கொண்டிருக்கும் போது அந்த கதையில் ஒரு கெஸ்ட் ரோலுக்கு இருவர் தேவை அதில் கமல் ரஜினி இருவரையும் நடிக்க வைத்தால் 25 வருடம் கழித்து இருவரும் இணைந்தால் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் . அதுவும் உங்களால் மட்டும் தான் முடியும் என்றேன். அதற்கு அவ்வளவு சின்ன வேடங்களில் அவர்களை நடிக்க வைக்க முடியாதுடா ... என்றார்...

அப்போது என் மனதில் ஒன்று தோன்றியது , இந்த இரண்டு பேரையும் உருவாக்கிய பாலச்சந்தர் , பாரதி ராஜா எனது படத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என்று...

அவரிடமே சொன்னேன்.அவர் முடியாது என்றார் , பின் ஒரு நாள் அவகாசம் கொடு என்றார், ஒரு நாள் கழித்து ஒத்து கொண்டார். ஒரு நாள் எதற்கு கேட்டீர்கள் யோசிப்பதற்கா.. ? என்றேன். இல்லை கமல் ஒரு படத்தில் நடிக்க கூப்பிட்டு இருந்தான்.உன் படத்தில் நடிப்பதால் அவனிடம் சொல்லிவிட்டு வந்தேனென்றார். பாரதிராஜா சாரையும் ஒத்து கொள்ள வைக்க சிரமப்பட்டேன். தலையில் முண்டாசுடன் இருவரும் இருக்கும் படத்தை கொண்டு போய் காட்டினேன்.பிறகு ஒத்து கொண்டார்.

சங்கர் சாரிடம் கதை சொல்லும் போது இதில் என்ன சிறப்பு இருக்கு என்றார். இவர்கள் இருவரும்
நடிக்கிறார்கள் என்றேன் , சாத்தியமா என்றார். கண்டிப்பாக நடிக்கிறார்கள் என்றேன்.இவர்களை வைத்து படம் பண்ணுவதில் எனக்கு பெருமை என்று படம் செய்ய ஒத்து கொண்டார்.

பாலச்சந்தர் உடனான அனுபவம்....

பாலச்சந்தர் சார் ஒரு நல்ல ஆசிரியர் , வெறும் சினிமா மற்றும் கற்று கொடுக்க மாட்டார். நல்ல பழக்க வழக்கம் , ஒழுக்கம், பேசும் வார்த்தையில் கூட நிறைய விஷயங்கள் இருக்கும் எல்லாரும் நல்லா இருக்க வேண்டும் என்கிற ஒரு நல்ல எண்ணம் கொண்ட நல்ல மனிதர் அவர்.என்னுடைய ஸ்கிரிப்ட் முழுமை அடைந்தது அவரால் தான் . ஒரு பொறுமையை அவரிடம் கற்று கொண்டேன். நான் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணி புரியாமல் இந்த படத்தை இயக்கியதற்கு ஒரு காரணம் நான் அவருடன் பணி புரிந்தேன் என்பது தான் .யாரும் அறியாத ஒரு விஷயம் அவர் ஒரு சிறந்த நகைச்சுவையாளர் , நான் அவரிடம் சொல்வேன். உங்களிடம் இருந்து யார் யார் என்ன எடுத்து சென்றார்கள் என்று எனக்கு தெரியாது, உங்களுடைய ஹுமர் ஐ யாரும் எடுத்து செல்ல வில்லை நான் அதைச் செய்ய போகிறேன் என்றேன். பாலச்சந்தர் சாரின் ஹுமருக்கு தில்லு முல்லு , பாமா விஜயம் , போன்ற படங்கள் சிறந்த உதாரணங்கள்.எதை செய்தாலும் நேர்த்தியுடன் செய்வார் , வெளிப்படையான விமர்சனங்களை ஏற்று கொள்வார். பக்குவமான மனிதர் என்றே நான் சொல்வேன்.

இமயமும் சிகரமும்......

இவர்கள் இருவரும் தான் தமிழ் சினிமாவின் ஆணி வேர்கள் , இவர்களிடம் இருந்து வந்த விழுதுகள் தான் இப்போது உள்ளவர்கள்.இவர் இமயம் , இவர் சிகரம் , என்ற எண்ணம் எல்லாம் என் மனதில் இல்லை இதை நினைத்தால் நான் பயந்து இருப்பேன். பாலச்சந்தர் சாருடன் எனக்கு இருந்த நெருக்கம் போல பாரதி ராஜா சாருடன் எனக்கு நீண்ட பயணம் உண்டு, தமிழ், இலங்கை பிரச்சனை போன்றவற்றில் அவருடன் சேர்ந்து பயணித்திருக்கிறேன். அவருக்கு என் உணர்வுகள், எழுத்துக்கள் எல்லாம் பிடிக்கும் , நான் நல்லா இருக்க வேண்டும் என்ற உணர்வு இருவருக்கும் இருந்தது .அப்படிபட்ட நல்ல நண்பர்களுடன் நான் படம் செய்தேன் அவ்வளவுதான்.

அடுத்த இலக்கு.....

இலக்கற்ற பயணமா இருக்க வேண்டும். இப்படி தான் பண்ண வேண்டும் என்று இல்லை. நிறைய விதங்களை கொடுக்க வேண்டும்.நேர்மையான ஆக்க்ஷன் படம் எடுக்க வேண்டும் என்பது ஆசை. ஒரு வட்டத்திற்குள் சிக்க கூடாது.

சினிமா போராட்டமும் திருமண வாழ்க்கையும்....

என் மனைவியை பொறுத்தவரை ஜெயிப்பதா, தோற்பதா என்ற கேள்வியில்லை, நான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். என்னிடம் யாரும் எதுவும் எதிர்பார்க்கவில்லை.எதிர்பார்பற்ற ஒரு அன்பை என்னிடம் தந்தார்கள் , குடும்பத்தார் மற்றும் அல்லாமல் நண்பர்களும் அப்படிதான்.

நான் ஊருக்கு செல்லும் போது கூட என்ன பண்ணுகிறாய் என்று யாரும் கேட்க மாட்டார்கள் . என் அப்பா கையில் காசு இருக்கிறதா என்று என்னை தயங்க விடுவதில்லை.நான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே என் சுற்றத்தார்களின் விருப்பம்.

என் அப்பா ஆடியோ ரிலீஸுக்கு வரும் போது ஒரு விஷயம் சொன்னார்." எனக்கான வருமானத்தை என் நிலம் தரும். இது போன்ற மகிழ்ச்சியை நீ மட்டும் தான் தர முடியும்'' என்றார்.

என் எழுத்து எல்லோருக்கும் பிடித்த ஒன்று , சமீபத்தில் ஜூனியர் விகடனில் வெளிவந்த " புலிகளின் இறையாண்மை " என்ற கவிதை வந்தது, நான் எழுதினேன் என்று தெரியாமல் என் அப்பா அந்த கவிதையை படித்து மிகவும்
ரசித்திருக்கிறார்.பெயர் கீழே இல்லாமல் பக்கவாட்டில் இருப்பதை பார்த்து நெகிழ்ந்து இருக்கிறார்.இதனால் என் மகன்
கைது செய்யபட்டால் நான் கவலை பட மாட்டேன் என்றார். வாழ்க்கையில் உறவு ரீதியான சிக்கலோ, பொருளாதார
ரீதியான சிக்கலோ என்னிடம் இல்லை என்பது இந்த வெற்றி பயணத்துக்கு காரணம்.


சந்திப்பு : கெளதமன், திருமால்.


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...