![]() |
வாசிக்காவிட்டால் வளைவீர்கள் - இன்று 23 ஏப்ரல் உலக புத்தக தினம்Posted : வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 23 , 2010 21:22:11 IST
மேற்கத்திய நாடுகளிலும் பிரிட்டனிலும் முன்பு ஒரு மரபு நிலவியது. நண்பர்களையோ உறவினர்களையோப் பார்க்கச் செல்லும்போது புத்தகங்களைப் பரிசளிப்பது. புனித ஜார்ஜ் நாளையொட்டி இந்த மரபு ஒரு மதச் சடங்காகவே கடைப் பிடிக்கப்பட்டது.
இன்று நாம் கடைப் பிடிக்கும் 'புத்தக தினம்' இலக்கியம் சார்ந்தது. ஆங்கிலப் பெருங்கவிஞரும் நாடகாசிரியருமான வில்லியம் ஷேக்ஸ்பியரின் பிறந்த நாளான ஏப்ரல் 23 'புத்தக தினமானது 1995இல். பதிப்புக் காப்புரிமை நாளாகவும் இந்த தினம் முக்கியத்துவம் பெற்றது. ஏப்ரல் 23 ஷேக்ஸ்பியரின் பிறந்த நாள் மட்டுமல்ல. ஆங்கிலக் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வர்த், ஸ்பானிய எழுத்தாளரும் 'டான் குவிக்சோட்' என்ற நாவலை எழுதியவருமான மிகயில் தெ செர்வான் டிஸ் - ஆகியோரின் நினைவு தினமும் கூட. @ உலகின் முதல்அச்சிடப்பட்ட புத்தகம் - வைரத்தின் சூட்சுமம். கிமு 868 இல் மரச் செதுக்குகளால் அச்சிடப்பட்டது. முதன் முதலாக இயந்திரம் மூலம் அச்சியற்றப்பட்ட புத்தகம் - குட்டன்பர்க் பைபிள் - ஜெர்மன் மொழியில் - 1455 இல். இந்தியாவில் முதன் முதலில் அச்சிடப்பட்ட படைப்பு: கோவா புனித பால் கல்லூரி ஆசிரியராக இருந்த அண்டானியோ குத்ரோஸ் எழுதிய போர்த்துகீசிய மொழிக் கட்டுரைகள். 1556. முதலில் அச்சிடப்பட்ட இந்திய மொழிப் புத்தகம் - டாக்ட்ரினா கிறிஸ்டம் என்ற நூலின் தமிழாக்கமான 'தம்பிரான் வணக்கம்'. இந்த நூல் அச்சிடப் பட்டது கேரளத்திலுள்ள கொல்லத்தில். 1578. @ மலையாளக் கவிஞர் குஞ்šண்ணியின் கவிதையொன்று பின்வருமாறு 'வாசித்தாலும் வளர்வீர்கள் வாசிக்காவிட்டாலும் வளர்வீர்கள் வாசித்தால் விளைவீர்கள் வாசிக்காவிட்டால் வளைவீர்கள். -சுகுமாரன்
|
|