அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் புதிதாக 1,233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 0 தமிழன் இந்துவே இல்லை - சீமான் 0 தயவு செய்து பாதுகாப்பாக இருங்கள் - ராகுல் காந்தி எம்பி! 0 ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் அஞ்சலி! 0 சிஎஸ்கே அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து! 0 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சிஎஸ்கே! 0 உடன்பிறப்பே- திரை விமர்சனம் 0 பட்டாசு விற்பனைக்கு தடை: 4 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் 0 மசின குடியில் டி 23 புலி பிடிபட்டது! 0 வீதிகளில் வீசப்படும் ஏர் இந்தியா ஊழியர்கள்: சு.வெங்கடேசன் கண்டனம் 0 எதிர்க்கட்சியே இல்லாத ஆளுங்கட்சி என்ற இறுமாப்பு ஒருபோதும் இல்லை: மு.க.ஸ்டாலின் 0 கருக்கலைப்புக்கான காலஅவகாசம் 24 வாரங்களாக நீட்டிப்பு! 0 தமிழகத்தில் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி! 0 அதிமுக தலைமை அலுவலகம் பெயர் மாற்றம்! 0 இந்திய நடுத்தர வர்க்கத்தினரிடம் பணம் இருக்கிறது: நிர்மலா சீதாராமன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நடந்தது நடந்தபடி - சா. கந்தசாமியின் எழுத்தோவியம்

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   20 , 2005  22:18:28 IST

இருபதாண்டுகளுக்கு முன்னால் நடந்தது. இது நடந்தது என்பதுதான் முக்கியம். காலம், இடம் என்பதெல்லாம் முக்கியம் இல்லை. ஏனெனில் காலம் என்பதை புறந்தள்ளிவிடுகிறது, நிகழ்வின் தனித்தன்மை. எனவேதான் மறுபடியும் மறுபடியும் சில சம்பவங்கள் திரும்பத் திரும்பச்
சொல்லப்படுகின்றன. சொல்லப்படும் ஒவ்வொரு முறையும் அது தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது.

நடந்தது இதுதான்.

பிரான்ஸில் இருந்து இரண்டு எழுத்தாளர்கள் இந்தியா வந்து இருந்தார்கள். சென்னையில் அவர்களுக்கு ஒரு கூட்டம் இருந்தது. இருபது இருபத்தைந்து எழுத்தாளர்கள் இலக்கியத்தில் ஆர்வமும்-ஈடுபாடும் கொண்டிருந்தவர்கள் கூடி இருந்தார்கள். உரைக்குப் பின்னர் சில கேள்விகளுக்குப் பதில் சொன்னார்கள்.

கேள்வி: கர்த்தர் எப்படி பிரான்ஸில் கொண்டாடப்படுகிறார்?

பதில்: கர்த்தர் எங்கள் நாட்டில் அநேகமாகப் படிக்கப்படுவதில்லை. அவர் காலமும், தத்துவமும் முடிந்துவிட்டது. ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு கூட்டத்திலும் கர்த்தர் பற்றி கேட்கிறார்கள். அது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

கேள்வி: அதைக் கொஞ்சம் விளக்க முடியுமா?

பதில்: கர்த்தர் எதற்காக எழுதுகிறேன்-என்று ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்டு அதற்காகப் புத்தி பூர்வமாகப் பதில் சொல்கிறார். ஆனால் தற்போது பிரான்ஸில் எழுதும் எழுத்தாளர்களுக்கு இப்படியொரு கேள்வி எழுவதே இல்லை.

அவர்கள் கேள்வியை நிராகரித்துவிட்டு எதன் பொருட்டு
ஜீவிக்கிறார்களோ அதன் பொருட்டே எழுதுகிறார்கள். நவீன எழுத்தாளர்கள் தனிச் சமூகம் பற்றி யோசிப்பது இல்லை. அவர்கள் யோசிப்பதிலேயே சமூகம் இருக்கிறது.

இலக்கியம்- அதன் தேவை-பயன்பாடு என்பது பற்றி எத்தனைத்தான் சொன்னாலும்-மேலானது-தரமானது என்று கொண்டாடப்படும் இலக்கியம் என்பது சித்தாந்தங்களையும் முடிவுகளையும் நிராகரித்துவிட்டு தன்னளவில் புதுமையாக உள்ளது. அதனை ஒரு மரபு என்றே சொல்ல வேண்டும். அதனை ஸ்தாபிக்க ஆள்கள் யாரும் தேவை இல்லை. தன்னைத் தானே நிலை நிறுத்திக் கொண்டுவிடும். மனித மனத்திற்குள்
ஊடுருவிச் செல்லும் மகத்தான சக்தியை அது பெற்றுள்ளது. மாறான, மூன்றாம்தரமான, நான்காம்தரமான படைப்புகளுக்கு எடுபிடிகள் தேவைப்படுகிறார்கள். அதனைத் தூக்கி நிறுத்த துளிகூட சம்பந்தமில்லாத பதவியில் இருக்கும் ஆள்களை எல்லாம் பிடித்துக் கொண்டு வந்து
வெளி£ட்டு விழா, அறிமுக விழா, பாராட்டு விழா என்று பெரிய பெரிய
விழா கொண்டாடுகிறார்கள்.

விழா சமூக அந்தஸ்தின் ஒரு வெளிப்பாடாக உள்ளது. அது படைப்பின்
விழா அல்ல. வேண்டியவர்களைப் பாராட்டவும்; வேண்டாதவர்களை வசைபாடவும், மிரட்டவும் வசதியாக உள்ளது. ஆனால் உருட்டல், மிரட்டல் இலக்கியத்தில் பலிப்பதில்லை. ஏனெனில் படைப்புத்தான் அளவுக்குப் பயன்படுகிறது. அது தன்னுடைய இயல்பை தானே நிலை நிறுத்திவிடுகிறது.

தன் எழுத்தை மாüÈ¢ எழுதுவது-திருத்தி எழுதுவது என்பது சாத்தியமில்லை என்பதால்- ஒரு படைப்பு-எழுத்தாளனின் தகுதி, திறமை என்பதை அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

தமிழில் மெளனி என்ற ஓர் எழுத்தாளர்-சிறுகதைகள் மட்டுமே எழுதியவர்- அதுவும் 27 சிறுகதைகள் மட்டுமே எழுதியவர் முக்கியமான எழுத்தாளராகக் கொண்டாடப்படுகிறார். 1932-ஆம் ஆண்டுவாக்கில் எழுதத் தொடங்கிய மெளனி ஐந்தாறு ஆண்டுகளில் 27 சிறுகதைகள் எழுதினார். அவை மணிக்கொடி என்ற சிறுபத்திரிகையில் வெளிவந்தது. பின்னர் இருபதாண்டுகள் கழித்து மூன்று நான்கு கதைகள் எழுதினார். அவர் சிறுகதைகளில் சமூகம், சுதந்திர போராட்டம் என்ற முன்னேற்றமான சிந்தனை ஏதும் கிடையாது. மனிதர்கள்-அவர்களின் வாழ்க்கை-மிகவும் சாதாரணமான மனிதர்களின் அசாதாரணமான வாழ்க்கை நெருக்கமான ஒரு தொனியில் சொல்லப்பட்டு உள்ளது.

மெளனி தமிழ் மரபின் வழியில் எழுதியவர். அவர் படிப்பு என்பது ஆங்கிலந்தான். ஆங்கிலம் இலக்கியத்தைப் படித்துவிட்டு தமிழில் எழுதியவர். மரபு என்பது கற்றுவருவது இல்லை. அது தொடர்ந்து ஜீவிதமாக இருந்தது. அறிந்து எழுதுவதைவிட அறியாததை-அறியாத நிலையில் எழுதுவது நிலை பெற்றுவிடுகிறது என்பதற்கு நவீன இலக்கியத்தில் மெளனி ஓர் எடுத்துக்காட்டு.

என் இல்லத்திற்கு வந்த ஒரு பேராசிரியர், கவிஞரிடம் மெளனியின் சிறுகதைத் தொகுப்பைக் காட்டினேன். அவர் ஒருமுறைப் புரட்டிப் பார்த்துவிட்டு, தமிழ் எழுதத் தெரியவில்லை என்று புத்தகத்தைக் கீழே வைத்தார்.

மெளனி இலக்கியப் படைப்பாளர். இலக்கியம் இலக்கணத்திற்குள் இல்லை என்பது ஒவ்வொரு தலைமுறையும் ஸ்தாபித்துக் கொண்டு வருகிறது.

சாகித்ய அகதமி விருது பெற்ற சா.கந்தசாமி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவர்.அந்திமழைக்கென்று சா.கந்தசாமி எழுதும் பிரத்தியேக கட்டுரைகள் வாராவாரம் செவ்வாயன்று வெளிவரும்.
அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள...
Profile
Article I, Article II,Article III,Article IV ,Article V,Article VI, Article VII
Article VIII


மௌனியை பற்றி மேலும் தெரிந்து கொள்ள...Mouni a profile


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...