![]() |
கைது செய்து வைத்திருந்த இடத்தில் தான் புதிய சட்டப்பேரவை வளாகம் :மு.க.Posted : திங்கட்கிழமை, மார்ச் 15 , 2010 07:09:05 IST
கைது செய்து விடிய விடிய காவலில் வைத்திருந்த இடத்தில் தான் புதிய சட்டப்பேரவை வளாகம் :மு.க.
காங்கிரஸ் - திமுக இடையிலான உறவைத் துண்டிக்கவேண்டுமென எவ்வளவோ முயற்சிகள், எத்தனையோ பயணங்கள் நடைபெற்றன, மீடியாக்கள் கனவு கண்டு கற்பனைப் பிரச்சாரங்களைக் கட்டிவிடுவதாகவும் ஆனால் எங்கலிடம் இருந்த அந்த உறுதிப்பாடு அந்த முயற்சிகளையெல்லாம் வெற்றிபெறச் செய்யவில்லை. அந்த நேச மனப்பான்மைக்கும் நெஞ்சுறுதிக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என்று சட்டப்பேரவை புதிய வளாக விழாவில் முதலமைச்சர் கருணாநிதி பேசினார். விழாவுக்குத் தலைமை வகித்த முதல்வர் கருணாநிதி பேசிய போது,' இந்தியாவின் மிகச் சிறந்த இந்தக் கட்டடம் உருவாகக் காரணமாக இருந்த நான், மிக மிக சாமானியன். சாதாரண குடும்பத்தில், சிறிய கிராமத்தில் பிறந்தவன். எனக்கென்று எந்தவிதமான குடும்பப் பெருமையும் இல்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் உழைப்பு, உழைப்புதான். ஓய்வில்லாத உழைப்பு. அது எந்தத் துறையானாலும் அனைத்திலும் அயர்வில்லாத உழைப்பு. எனக்கென எந்தவிதமான தனிப்பட்ட விருப்பமும் எப்போதும் இருந்தது இல்லை. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, நள்ளிரவில் ஒரு நாள் என்னைக் கைது செய்து நையப்புடைத்து அன்றைய சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்குக் கொண்டு வந்து தன்னந்தனியாக விடிய விடிய காவலில் வைத்திருந்தனர். அதே இடத்தில்தான் இன்று இந்தப் பிரமாண்டமான கட்டடம் உருவாகியுள்ளது. அனைவரிடமும் அன்பு செலுத்தவே விரும்புகிறேன். ஊனமுற்றவர்களை மாற்றுத் திறனாளி என அழைக்க வேண்டும் என்று ஐ.நா. சபை கூறியுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள திட்டத்துக்கு மத்திய அரசு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தை மத்திய அரசும் அமல்படுத்த வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார். சென்னையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய சட்டப் பேரவைக் கட்டடத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கட்டடத்தை பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார்.
|
|