அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லி பயணம் மகிழ்ச்சியாக இருந்தது – ஓபிஎஸ் 0 இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி! 0 எகிறியடிக்கும் ஏக்நாத் ஷிண்டே.. ஆபத்தில் மகாராஷ்டிர ஆட்சி! 0 குஜராத் கலவர வழக்கு: பிரதமர் மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்! 0 மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு! 0 தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்! 0 பா.ஜ.கவையும் யாராவது உடைக்கலாம்: மம்தா பானர்ஜி எச்சரிக்கை 0 அக்னிபத் திட்டத்தின் கீழ், விமானப்படை, கடற்படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 0 ஜனாதிபதி தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் திரவுபதி முர்மு 0 அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. என்றுமே தலையிட முடியாது: ஜெயக்குமார் 0 திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோயிருக்கிறார்கள்: மு.க. ஸ்டாலின் 0 ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம்: அவைத் தலைவர் அறிவிப்பு 0 சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக கூறி மேடையில் கோஷமிட்ட ஓபிஎஸ் தரப்பு 0 அதிமுக பொதுக்குழு: சி.வி.சண்முகம் ஆவேசம் 0 அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் பொறுக்கிகள்: இயக்குநர் பேரரசு காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சுஜாதா நினைவு விருதுகள்

Posted : செவ்வாய்க்கிழமை,   மார்ச்   09 , 2010  00:57:49 IST

சுஜாதா அறக்கட்டளை-உயிர்மை இணைந்து வழங்கும் சுஜாதா நினைவு விருதுகள்

தமிழ் மொழியின் நவீனத்துவத்திற்கு பெரும் பங்காற்றிய அமரர் சுஜாதாவின் நினைவாக அவரது பிறந்த தினமான மே 3 ஆம் தேதி இலக்கியம் மற்றும் இணையம் சார்ந்து 6 விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன. ஒவ்வொரு விருதும் 10 ஆயிரம் ரூபாய் பரிசும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது.

1. சுஜாதா சிறுகதை விருது: சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கு

2. சுஜாதா நாவல் விருது: சிறந்த நாவலுக்கு

3. சுஜாதா கவிதை விருது: சிறந்த கவிதைத் தொகுப்பிற்கு

4. சுஜாதா உரைநடை விருது: சிறந்த கட்டுரைத் தொகுப்பிற்கு

5. சுஜாதா இணைய விருது: சிறந்த வலைப்பதிவு(blog) அல்லது இணைய தளத்திற்கு(web site)

6. சுஜாதா சிற்றிதழ் விருது: சிறந்த சிறுபத்திரிகைக்கு

விதிமுறைகள்

1. முதல் நான்கு பிரிவுகளில் 2008-2009 ஆண்டு வெளிவந்த நூல்களில் 2 பிரதிகள் அனுப்பப்படவேண்டும். எழுத்தாளரோ பதிப்பாளரோ அல்லது வாசகர்களோ கூட நூல்களை அனுப்பலாம். எழுத்தாளரைப்பற்றிய தகவல்கள் மற்றும் முகவரி தனித்தாளில் எழுதி நூல்களுடன் அனுப்பவும். நூல்களில் எதுவும் குறிக்கப்படவேண்டியதில்லை.

2. 5 ஆவது பிரிவில் தமிழின் சிறந்த வலைப்பதிவு அல்லது இணையதளத்திற்கு வழங்கப்படும். அந்த இணைய தளத்தை அல்லது வலைப்பதிவை நடத்துபவர்கள் தம்மையும் தமது இணைய பக்கங்களையும் பற்றிய சிறு குறிப்புடன் அதில் வெளிவந்த முக்கியமான ஆக்கங்களின் பத்து சுட்டி(Link)களையும் அனுப்பவேண்டும். அனுப்பவேண்டிய முகவரி: sujathaawards@gmail.com

3. 6 ஆவது பிரிவில் தமிழில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த சிற்றிதழ்களிலிருந்து பிரதிகள் அனுப்பப்படவேண்டும். அந்த ஆண்டில் குறைந்த பட்சம் மூன்று இதழ்களாவது வெளியிடப்பட்டிருக்க வேண்டும். அந்த ஆண்டில் வெளிவந்த ஒவ்வொரு இதழிலிருந்தும் ஒரு பிரதி வீதம் அனுப்பினால் போதுமானது.

4. விருதுக்குரிய தேர்வுகள் தமிழின் முண்ணனி எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களால் மேற்கொள்ளப்படும். தேர்வு முறை குறித்த தகவல்கள் பகிரங்கமாக வெளியிடப்படும்.

5. தேர்வுக்கான விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: மார்ச் 31, 2010

6. விருதுகள் மே. 3, 2010 ஆந்தேதி சுஜாதாவின் பிறந்த தினத்தில் வழங்கப்படும்

விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி:

சுஜாதா விருதுகள், உயிர்மை,11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-600018
மின்னஞ்சல்:
sujathaawards@gmail.com

தொலைபேசி:91-44-24993448


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...