அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அட்டகாசமான 'அழகி'

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   20 , 2005  20:59:46 IST

தமிழ் மென்பொருள்களில் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றிருக்கிறது 'அழகி' (Azhagi) மென்பொருள். இதை உருவாக்கியிருப்பவர்
விஸ்வநாதன் என்கிற 37 வயது இளைஞர். இவர் SRV Consultants எனும் மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

மற்ற தமிழ் மென்பொருள்களில் இல்லாத பல சிறப்பு 'அழகி'
மென்பொருளில் இருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

இனி 'அழகி' விஸ்வநாதன் ..

இந்த 'அழகி' தமிழ் மென்பொருளை உருவாக்கும் எண்ணம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

"நான் TCS, IT solution, Bajaj Auto ஆகிய நிறுவனங்களில் வேலை பார்த்திருக்கிறேன். ஜப்பான், சிங்கப்பூர், போன்ற வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாகச் சென்று வந்திருக்கிறேன். இத்தகைய சூழலில்தான் பெருங்குடல் புண் நோயின் பாதிப்புக்குள்ளானேன். 1997லிருந்து 2000ஆம் ஆண்டு வரை படுக்கையிலிருந்தேன்.

அப்போது என் மனைவிதான் எனக்குப் பக்கபலமாக இருந்து என் குடும்பத்தைக் கவனித்துக் கொண்டார். அந்த நேரத்தில்தான் நாம் ஏதேனும் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. அதன் விளைவுதான் இந்த 'அழகி'. 2000-த்திலிருந்து 2002 வரைக்கும் இந்த மென்பொருளை இலவசமாகத்தான் எல்லோருக்கும் வழங்கி வந்தேன்.
பிறகுதான் என் சூழ்நிலையின் காரணமாக கட்டணத்திற்கு வழங்கி
வருகிறேன். இப்போது பெருங்குடல் புண் நோயிலிருந்தும், பொருளாதார நெருக்கடியிலிருந்தும் மீண்டுள்ளேன். இதற்குப் பின்னணியாக இருந்து எனக்கு உந்துசக்தியாக செயல்பட்ட என் மனைவிக்காகத்தான் இந்த மென்பொருளுக்கு 'அழகி' என்று பெயர் வைத்தேன்.

'அழகி' பற்றி..

'அழகி' மென்பொருளில் மூன்று வகையான தட்டச்சு வடிவமைப்பை (கீபோர்டு லே அவுட்) வழங்கியிருக்கிறோம். அவை, ஒலியியல் (Transliteration), தமிழ் தட்டச்சு (TamilTypewriter) மற்றும் தமிழக அரசு பொதுமைப்படுத்திய தமிழ்நெட் 99. தமிழில் வலைதளம் அமைக்க இலவச தானியங்கி தமிழ் எழுத்துரு (Tamil dynamic Font) இம்மென்பொருளில் உள்ளது.

24 வகையான எழுத்துரு(Font) இதில் இலவசப் பயன்பாட்டிற்கு இணைக்கப்பட்டுள்ளது. இருதிரை (ஆங்கிலம் தெரியும்) ஒலிபெயர்ப்பு (Effect Dual Screen(Transparent) Transliteration) முறை, மற்ற மென்பொருள்களில் இல்லாத ஒன்றாகும். இம்முறையில் திரையை இரண்டாகப் பிரித்துக் கொண்டு மேல்திரையில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய கீழ் திரையில் தமிழில் வரும் வசதி உள்ளது. தமிழ் தட்டச்சில் முறையான பயிற்சி இல்லாதவர்கள் கூட இம்முறையில் தமிழில் எளிதாகத் தட்டச்சு செய்ய முடியும்.

ஒருதிரை(ஆங்கிலம் தெரியாத) ஒலிபெயர்ப்பு முறையில் MS-Word, Excel, Outlook Express, Page Maker, Access, Power Point, yahoo messenger என்று எல்லா செயலிலும் நேரடியாக ஆங்கிலத்தில் செய்து
தமிழில் பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது.

ஈடிணையில்லா ஆங்கிலம்-தமிழ் சொல் இணைப்பும் இதில் உண்டு. உதாரணமாக 'பரதன்' அல்லது 'ஸ்ரீதர்' என்று தட்டச்சு செய்ய baratham, barathan, bharadhan, Sridhar, Sreedhar, shridar என்று எப்படி வேண்டுமானாலும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யலாம். புரிந்துணர் முறையில் தமிழில் சரியான சொல் வந்துவிடும் வசதியும் இப்பொருளில் உள்ளது.

தமிழில் தட்டச்சு செய்து ஆங்கிலத்தில் பெறும் 'மாற்று ஒலிபெயர்ப்பு' முறையும் 'அழகி' மென்பொருளின் சிறப்பம்சமாகும். அத்துடன் ஏற்கெனவே தட்டச்சு செய்து வைத்திருக்கும் ஆங்கிலக் கோப்புகளை (Word documents, Web pages etc) அப்படியே தமிழில் ஒலிபெயர்த்துக் கொள்ளலாம். மீண்டும் தட்டச்சு செய்ய வேண்டிய கட்டாயமில்லை.

உருவாக்கிய கோப்புகளைத் தமிழ்நெட்99 TAB என்கோடிங்கிற்கு மாற்றி அமைக்கும் வசதியும் இதில் உள்ளது. மென்பொருள்களுடன் உள்ளடங்கிய முழுமையான, தெள்ளத் தெளிவான உதவிக் கோப்புகள் (Help files) இதில் உண்டு.

www.azhagi.com வலைத்தளத்தை பார்ப்பதன் மூலம் இந்த 'அழகி' மென்பொருளைப் பற்றிய முழுத் தகவல்களையும் விரிவாக அறிந்து கொள்ள முடியும்.

தமிழின் மீது ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

"நான் பள்ளியில் படிக்கும்பொழுதே எனக்குத் தமிழ் மீது அதிகப் பற்று இருந்தது. பள்ளிக் காலங்களிலும் கல்லூரிக் காலங்களிலும் இலக்கிய மன்றச் செயலராக இருந்திருக்கிறேன்".

உங்களது இந்தப் பணி (அழகி பற்றி) எப்போது வெளியுலகிற்குத்
தெரியவந்தது?


"பல பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும் இணைய இதழ்களிலும் இந்த அழகி மென்பொருள் குறித்து எனது நேர்காணல்கள் வெளிவந்துள்ளன. என்றாலும் 2003ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகிய விசுவின் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் எனது மென்பொருள் பற்றி செயல்விளக்கம் (Demo) செய்து காட்டினேன். அதைப் பார்த்துவிட்டு எனக்கு ஏறக்குறைய 500 தொலைபேசிகளும் 2000 மின் அஞ்சல்களும் வந்தன. இந்நிகழ்ச்சியின் மூலமாக என் 'அழகி' பரவலாக அறியப்பட்டது. இப்போது 10,000க்கும் மேற்பட்ட பயனாளிகள் அழகியைப் பயன்படுத்துகின்றனர்.

உங்கள் குடும்பத்தைப் பற்றி..?

"தஞ்சை எனது சொந்த ஊர். கேரளாவில் கோழிகோட்டில் உள்ள ரீஜினல் இன்ஜினியரிங் கல்லூரியிக் (REC) Production engineering and Management துறையில் பட்டம் பெற்றேன். பிறகு அண்ணா பல்கலைக் கழகத்தில் PGDOR பட்டயச் சான்றிதழ் பெற்றேன் மனைவி, ஐந்து வயதில் ஒரு மகன். என் மனைவி தற்போது உலக வங்கியின் (world bank) சென்னைக் கிளையில் IT பிரிவில் பணிபுரிகிறார்.

- சந்திப்பு ஜெ. முனுசாமி

முகவரி:
SRV Consultants,
B1, 15-16, New no: 28,
'Subodhaya' Flats,
Gopalakirshna Road,
T. Nagar, Chennai-600 017.

e mail: contact@azhagi.com
Phone: 91-44- 52024669
cell: 098403-39750
web: www.azhagi.com


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...