![]() |
ம.பொ.சி.யிடமிருந்து மார்க்சிஸ்ட் கட்சிக்கு...வரதராசனின் வாழ்க்கைக் குறிப்புகள்Posted : செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 23 , 2010 10:06:25 IST
மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவராக இருந்து மறைந்த உ.ரா.வரதராசன், சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானத்தின் தமிழரசுக் கழகத்தில் இருந்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உ.ரா. வரதராசன் 9.7.1945 அன்று, அன்றைய வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள உள்ளியநல்லூர் என்ற கிராமத்தில் ஒரு மத்திய தர வர்க்க குடும்பத்தில் முதல் பிள்ளையாகப் பிறந்தார். அவரது தந்தை ரயில்வே நிலைய அதிகாரியாகப் பணியாற்றியவர். சென்னை விவேகானந்தா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். கல்லூரிக் காலத்திலேயே அவருக்கு இலக்கியம் மீதும், அரசியல் மீதும் ஈடுபாடு ஏற்பட்டது. சர்வோதயா இயக்கத்திலும் பின்னர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. தலைமையிலான தமிழரசு கழகத்திலும் இணைந்து பணியாற்றினார். அவர் நடத்தி வந்த “செங்கோல்” பத்திரிகைக்கு உறுதுணையாக இருந்தார். அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தமிழரசு கட்சியில் இருந்து வெளியேறினார். தோழர் உ.ரா. வரதராசன் சிறந்த சொற்பொழிவாளர், எழுத்தாளர், மொழிப் பெயர்ப்பாளர், “பார்வதிபுரம்” என்ற நாவலை எழுதி சர்வோதாய இயக்கத்தின் பரிசினைப் பெற்றவர். “அருவி” என்ற இலக்கிய சிற்றிதழையும் மாணவப் பருவத்திலேயே நடத்தியுள்ளார். இதில் தமிழகத்தின் ஏராளமான எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர். 1967ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கிப் பணியில் சேர்ந்த அவர் 17 ஆண்டுகள் வங்கிப் பணியில் இருந்தார். அப்போது, ரிசர்வ் வங்கி ஊழியர் சங்கத்தின் அகில இந்திய செயலாளராக பணியாற்றியுள்ளார். வங்கி ஊழியர் சம்மேளனத்தை உருவாக்குவதில் ஈடுபட்ட முன்னணித் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆவார். அதுபோல் கூட்டுறவு ஊழியர்களை அணி திரட்டுவதிலும் பெரும் பங்காற்றினார். °ஸ்டாண்டர்டு மோட்டார் தொழிலாளர்களின் போராட்டத்தின் போது, ரிசர்வ் வங்கி ஊழியர் சங்கம் அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது. அந்த போராட்டக் களத்தில் மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்ட அவர் 1969ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1984ஆம் ஆண்டு, வங்கிப் பணியைத் துறந்து, கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றத் ததொடங்கினார். கட்சியின் சென்னை மாவட்டக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வந்தார். 1989ஆம் ஆண்டு, நடைபெற்ற தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் வேட்பாளராக வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சென்னையில் உள்ள ‘பி அண்ட் சி’ ஆலை, பெ°ட் அண்ட் கிராம்ட்டன், ஓட்டி° லிப்ட் கம்பெனி, மெட்டல் பாக்° உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு, பல்வேறு தொழிலாளர் போராட்டங்களை தலைமை ஏற்று நடத்தியவர். சிஐடியு மாநிலச் செயலாளர்களில் ஒருவராக செயல்பட்டு வந்த அவர், தொழிற்சங்கப் பணிக்காக டில்லி சென்றார். சிஐடியுவின் அகில இந்திய செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அவர் தில்லி தொழிற்சங்கப் பணிக்காக சென்ற பிறகு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அகில இந்திய வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) வாரியத்தின் உறுப்பினர்களில் ஒருவராக பணியாற்றியுள்ளார். வெண்மணி கொடுமை, இலங்கைப் பிரச்சனை, தமிழக தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு சிறு நூல்களை எழுதியுள்ளளார். தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் சிறந்த புலமை பெற்றவர். தீக்கதிர் முதன்மை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். பல்வேறு நாளேடுகளில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார்.
|
|