???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மின்கட்டணத்தை அபராதம் இன்றி 14-ந்தேதி வரை செலுத்தலாம் 0 தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு 0 கமல் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீசால் சர்ச்சை 0 அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது! 0 பிரதமர் தொகுதியில் உணவின்றி குழந்தைகள் புல்லைச் சாப்பிட நேர்ந்த அவலம்! 0 கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் 2,624 கைதிகள் ஜாமினில் விடுவிப்பு! 0 தனிமைப்படுத்தப்பட்ட நபர் மூதாட்டியை கடித்துக்கொன்ற அவலம்! 0 வங்கிகள் இணைப்பைத் தள்ளிப் போடுங்கள்: ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை 0 மளிகைக் கடைகள் இயங்க கட்டுப்பாடு! 0 கொரோனா சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகள் 25% படுக்கைகள் ஒதுக்க வேண்டும்: தமிழக அரசு 0 ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி ஆளுநர் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 727 ஆனது! 0 கொரோனா: சீனாவை மிஞ்சியது அமெரிக்கா! 0 உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 24 ஆயிரத்தை தாண்டியது 0 கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் நாயகனும் மருத்துவருமான சேதுராமன் மாரடைப்பால் காலமானார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வாழ்வின் துயரங்களைக் கேலிசெய்யத் தெரிந்தவனே உயர்ந்த கலைஞனாகிறான் - 'நினைவின் தாழ்வாரங்கள்'

Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   11 , 2010  08:51:33 IST

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் கலாப்ரியாவின் கவிதைகளுக்கு ரசிகனாக சற்று விலகியே இருந்திருக்கிறேன். அவர் வசிக்கும் இடைகாலுக்கு என் அப்பாவின் சொந்த ஊரான கடையநல்லூரிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவு தான் . ஊருக்கு போகும் போதெல்லாம் அவரை போய்ப் பார்க்கலாம் என்று தோன்றும் ஆனால் ஏனோ ஒரு தயக்கம் தடுத்துவிடும். கலாப்ரியாவின் கவிதைகளை படிக்கும் போது அவர் எழுதியதை விட எழுதாமல் விட்டது அதிகம் என்று தோன்றும் . அவரை எப்படியாவது கட்டுரைத் தொடர் எழுத வைக்க வேண்டும் என்ற நோக்கில் குஜராத்திலிருந்து (பரோடா) நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுக்க ஆரம்பித்தேன், இரண்டு மாதம் கழித்து " தொடர் சாத்தியமா என்று தெரியவில்லை " என்று சொல்லிவிட்டு அப்போது அந்திமழையில் வந்து கொண்டிருந்த ' கவிதைத்திருவிழா ' தொடருக்கு சில கவிதைகள் அனுப்பினார்... பின் அவரை தொடந்து எழுதச் சொல்லி நச்சரித்தேன். வருடங்கள் கடந்தது . ஆனால் அவர் எழுதவில்லை . இடையில் நான் குஜராத்திலிருந்து சென்னைக்கு வந்திருந்த இரண்டு தருணங்களில் வண்ணநிலவன் சார் வீட்டிலும் , மற்றொரு இலக்கிய நிகழ்வின் போதும் நேரில் பார்த்தும் வற்புறுத்தினேன்.

பின் கலாப்ரியாவின் இரண்டாவது மகள் ஒரு பிளாக் ஏற்படுத்தி கொடுக்க அதில் இரண்டு பதிவுகளை போட்ட பின் அது பற்றி ஒரு குறிப்பை அந்திமழையில் வெளியிட்டோம்.

ஒரு நாள் இரவு(15-09-08 ) கலாப்ரியாவிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு... ஒரு கட்டுரையை அனுப்பியிருக்கிறேன் எப்படி இருக்கிறது என்று அபிப்பிராயம் சொல்லச் சொன்னார். ' அண்ணாவை வழியனுப்ப போனபோது ' என்ற கட்டுரை. அன்று அண்ணாவின் பிறந்த நாள். உடனடியாக அந்திமழையில் பிரசுரித்து விட்டோம்... இவ்வளவு தூரம் வந்தவரை எப்படி விடுவது அப்படியே அமுக்கிவிட்டோம்... தொடர் துரத்தலின் பயனாக 40 கட்டுரைகள் எழுதிவிட்டார். இடையில் நிறுத்திவிடும் மனோ நிலைக்கு மூன்று முறை வந்தார்.

கரிசல் காட்டுக் கடுதாசி தொகுப்பின் முன்னுரையில் கி.ரா." இந்தக் கட்டுரைகளில் கற்பனை இல்லை. இவைகளில் சிலது மட்டும் , பரிமளிக்க பண்ணுவதற்காக எழுதப்பட்டவைகளில் கொஞ்சம் ' கதை' உண்டு , மற்றபடி அனைத்துமே நடப்பு தான் " என்று கூறியிருப்பார். நினைவின் தாழ்வாரங்களில்' வந்த கட்டுரைகளுக்கும் கி.ராவின் வரிகள் பொருந்தும்.

வாராவாரம் அந்திமழையில் வெளிவரும் போது அனேக கட்டுரைகள் பெரு வரவேற்பைக் பெற்றாலும் பின் வரும் ஏழு கட்டுரைகளுக்கு வெள்ளிவிழா வெற்றி.

'புற்றில் உரையும் பாம்புகள்.

காட்டுக்கேது தோட்டக்காரன்

சித்திரத்தில் பெண்ணெழுதி

ஆயிரம் வாசல் இதயம்

காலமகள் மடியினிலே ஓடும் நதி

பெண்ணாகப் பிறந்துவிட்டால் சொல்லாத நினைவிருக்கும்

அண்ணாவை வழியனுப்பப் போனபோது..'

இந்த தொடரை படித்த சில சினிமாக்காரர்கள் என்னிடம் நினைவின் தாழ்வாரங்களுக்குள் பல 'சுப்பிரமணியபுரங்களும்', 'பருத்தி வீரன்களும்' புதைந்து கிடப்பதாக கூறினார்கள் .

இதுவரை படிக்காதவர்கள் நிச்சயம் படிக்கவேண்டிய தொகுப்பு...

- ந.இளங்கோவன்

நினைவின் தாழ்வாரங்கள் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன்


திருநெல்வேலிப்பற்றி புதுமைப்பித்தன் எழுதியது ஒரு விதம்; வண்ணதாசன் , வண்ணநிலவன் காட்டிய திருநெல்வேலி , இன்னொரு வசீகரம். கலாப்ரியா, தன் நினைவுகளின் வழியே அடையாளம் காட்டும் திருநெல்வேலியோ இந்த மூன்றிலிருந்தும் மாறுபட்டது. எவ்வளவு மாறுபட்ட மனிதர்கள் , சுபாவங்கள். ஒரு ஆவணப்படத்தைக் காண்பது போல அத்தனை நெருக்கமாகவும் ஈரத்துடனும் , திருநெல்வேலி எழுத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை சாத்தியமாக்குவது, கலாப்ரியாவின் மொழி; எதிரில் அமர்ந்து உரையாடுவது போன்ற நெருக்கத்தைத் தருகிறது. வாழ்வின் துயரங்களைக் கேலிசெய்யத் தெரிந்தவனே உயர்ந்த கலைஞனாகிறான். அப்படி , தன் குடும்பத்தின் வீழ்ச்சியை , வேதனைகளை எழுதும் போது கூட கலாப்ரியாவிடம் சுய எள்ளல் காணமுடிகிறது.அந்த சிரிப்பை வாசித்து முடிக்கையில் , மனம் ஆழ்ந்த துயரையே அடைய நேரிடுகிறது.

தன்னைச் சுற்றிய தினசரி வாழ்விலிருந்து அவரது கவித்துவம் எப்படி உருவாகியது என்பதற்கு நிறைய உதாரணங்களை இந்த நூலில் காணமுடிகிறது இவ்வளவு வெளிப்படையாகாத் தனது அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொண்ட கவி வேறு யாருமில்லை.

கவிஞர் கலாப்ரியாவின் ' நினைவின் தாழ்வாரங்கள் ' என்னும் இந்த நூலை இலக்கிய வாசகர்களும் கவிஞர்களும் அவசியம் வாசிக்கவேண்டும்.

- எஸ் . ராமகிருஷ்ணன்


நினைவின் தாழ்வாரங்கள் பற்றி ஷங்கர் ராமசுப்பிரமணியன்

நினைவுதான் மரணத்தை விட நம்மை வெகுவாகப் பீதியூட்டுவது; கலாப்ரியாவின் சசி குறித்த நினைவுதான் அவரது மொத்தப் படைப்புலகுக்கான முன்னிலை. சசி கிடைக்காத துக்கம் , மரணபீதி போன்று அவரை வெளியே விரட்டி சகலவற்றின் மீதும் படிந்து , சகலரின் துக்கத்தையும் அவர் துக்கமாக மாற்றுகிறது. அது தோல் உரிந்த நிலை; கிட்டத்தட்ட, பைத்தியதிற்குப் பக்கத்தில் உள்ள நிலை. கலாப்ரியா மிகுந்த உயிர்ப்புடன் படைப்பாக்கத்தில் ஈடுபட்டிருந்தபோது எழுதிய கவிதைகள், இப்போது வாசிக்கும் வாசகனைக்கூட நிலைகுலையச் செய்யும் வன்முறையும் தீவினையின் வேகமும் கொண்டவை.

திருநெல்வேலி என்னும் நிலவியலின் பின்புலத்தில் எழுதப்பட்டிருக்கும் ' நினைவின் தாழ்வாரங்கள்' நூலை வாசித்த அனுபவத்திலிருந்து - புதுமைப்பித்தனிலிருந்து விக்ரமாதித்யன் வரை - இந்த நிலத்தின் படைப்புக் குழந்தைகளைப் பிணைக்கும் சரடு என்ன , இவர்களின் ஆதார மனவுலகம் எப்படி உருவாகிறது என்பதைப் பார்ப்பது முக்கியமானது.


புத்தகம் பற்றி

நினைவின் தாழ்வாரங்கள்

பக்கம் - 384
விலை - ரூ.225
வெளியீடு : சந்தியா பதிப்பகம்


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...