அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

செக்ஸ் என்பது சுவாரசியமானது - கி. ராஜநாராயணன்

Posted : சனிக்கிழமை,   ஏப்ரல்   30 , 2005  01:54:54 IST

"எனக்கு எழுபத்தி இரண்டு வயசாகிறது" என்று கூறும் திரு. கி. ராஜநாராயணன் சொல்வது பொய்யோ என்று தோன்றுகிறது. "செக்ஸ் என்பது சுவாரசியமானது" என்று அவர் சொல்லும் போது இளவயதுக்காரர் போல் தெரிகிறார். இவர் சாகித்ய அகாடமி விருது பெற்றவர். கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், கதவு, வேட்டி, கரிசல்காட்டு கடுதாசி இவருடைய படைப்புகளில் சில. புதுவையில் அவரை அந்தி மழைக்காக சந்தித்தபோது....

கரிசல் காட்டு இலக்கியம் எந்த பிரதேசங்களை சார்ந்தது?

முதலில் கரிசல்காட்டு இலக்கியம் என்று பெயர் வைத்தது நாங்கள் இல்லை. எப்படி கிராமங்களுக்கு அந்த ஊர்க்காரர்கள் பெயர் வைக்காமல் அடுத்த ஊர்க்காரர்கள் பெயர் வைப்பார்களோ, அதே போல்தான் எங்களுக்கும் பெயர் வந்தது. கோவில்பட்டியிலும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் எழுத்தாளர்கள் தோன்றியது. தற்செயலான நிகழ்ச்சி. இந்த பகுதியிலிருந்து இரண்டு பேர் சாகித்ய அகாடெமி விருது, வாங்கியிருக்கிறோம்...கு. அழகிரி சாமி அவர்களும், நானும். கரிசல் இலக்கியம் என்பது சிதம்பரனார் மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம், நெல்லை மாவட்டத்தில் சில பகுதிகள், காமராஜர் மாவட்டம் ஆகியவற்றைச் சார்ந்த எழுத்து என்று சொல்லலாம்.

உங்கள் கதைகளில் ?செகாவ்? பாதிப்பு இருப்பதாக கூறுப்படுவது பற்றி....

இல்லை. நான் சொல்லவில்லை. சுந்தரராமசாமி தான் அப்படிச்சொன்னார். ஒரு எழுத்தாளர் செகாவ் கதைகளை படித்துவிட்டு எழுதினால், மற்றவர்கள் "இவருடைய கதைகளில் செகாவ் பாதிப்பு இருக்கிறது" என்று சொல்வார்கள். ஆனால் சுந்தரராமசாமி என்னுடைய கதைகளை படித்துவிட்டு செகாவிய பாணி இருப்பதாக கூறியபின் தான் நான் செகாவ் கதைகளின் மொழி பெயர்ப்பை தேடி படிக்க ஆரம்பித்தேன்.

தொலைக்காட்சியின் வருகையால் பத்திரிகை படிப்பவர்கள் குறைந்து விட்டதாக சொல்லப்படுவது குறித்து...

பத்திரிகைகள் விற்பனை குறையவில்லை. பங்காளிகள் நிலத்தைப் பகிர்வது போல் ஆகிவிட்டது. முன்பெல்லாம் ஆனந்தவிகடன், குமுதம், கல்கிதான் இருந்தது. இப்போது எத்தனை பத்திரிகைகள் இருக்கிறது. அதேபோல் முப்பது வருஷத்திற்கு முன் புத்தக வெளியீட்டாளர்களின் எண்ணிக்கையையும், இன்றைய எண்ணிக்கையையும், ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரியும். என்னுடய புத்தகங்களின் விற்பனையை கூட எடுத்துக்கொண்டால், விற்பனை ஏறுமுகமாகத்தான் இருக்கிறது. எழுந்து சென்று பைலை எடுத்து வந்து காட்டுகிறார். 91ஆம் வருடத்திலிருந்து விற்பனை கூடிக்கொண்டே செல்வதைக் காட்டுகிறார்)

சுபமங்களாவின் விற்பனை அதிகரித்தற்கும் இதுதான் காரணமா?

நிச்சயமாக.

ஆனால், கணையாழியின் விற்பனை அதிகரித்ததாக தெரியவில்லையே?

கணையாழியின் முகம் வேறு, சுபமங்களாவின் முகம் வேறு. சுபமங்களா வணிகபத்திரிகையின் வெளித் தோற்றத்துடன் வருவது, உள்ளடக்கத்திலும் இரு பத்திரிகைகளுக்கும் வித்தியாசங்கள் உண்டு.

குமுதம் ஆசிரியராக பொறுப்பேற்றிருக்கும் சுஜாதாவின் முயற்சிகள் பற்றி...

நிச்சயமாக நல்ல விஷயம்தான். அவர் பல்வேறு சாகசங்களை எழுத்தில் செய்தவர். அர்ச்சுனன் மாதிரி என்று சொல்லலாம். குமுதத்தின் இரண்டாவது தலைமுறை அவர்...முதல் தலைமுறை எஸ்.ஏ.பி.

உங்களுடைய `கதவு' கதைக்கு இரட்டைக்கதவுகள் படம் போட்டிருந்தது என்று கூறியிருந்தீர்கள். இதுபோல் வேறு எந்த கதைக்காவது நிகழ்ந்திருக்கிறதா?

அப்படி நடக்கிறது உண்டு. அதையெல்லாம் நான் பெரிதாக நினைப்பதில்லை. இதை வைத்து கூட நான் ஒரு கதை எழுதியிருக்கிறேன்...அப்பா அம்மா பிள்ளை தொகுதியில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

மாஜிக்கல் ரியலிஸம் (Magical Realism) குறித்து....?

எனக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தால் படித்திருப்பேன்...ஆனால் இவர்கள் சொல்வதைக் கேட்கும்போது நாட்டுப்புற கதைகளிலும் மேஜிக்கல் ரியலிஸம் இருப்பதுபோல் தோன்றுகிறது. கிராமத்தில் சொல்வார்கள் மனோரஞ்சிதம் பூவை எந்த பூவின் வாசனையை நினைத்துக்கொண்டு முகர்கிறோமோ அந்த பூவின் வாசனை வருமென்று. இதுவும் மாஜிக்கல் ரியலிஸம் தானோ என்று தோன்றுகிறது.

"வயது வந்தவர்கள்" மட்டும் தொடரை ஒரு இளம் வயதுக்காரர் எழுதியிருந்தால், இந்த அளவு எதிர்ப்பு இருந்திருக்காது என்று நினைக்கிறோம். இதைப் பற்றி....

அப்படி நான் நினைக்கவில்லை. வயதானவர்கள் தான் இதமாக பதமாக எதையும் சொல்வார்கள். அது வயதைப் பொறுத்த விஷயமல்ல. ஆனால் அந்தத் தொடருக்கு இரண்டு விதமான எதிர்ப்புகள் இருந்தன. ஜாதீய மற்றும் ஒழுக்க ரீதியான எதிர்ப்பு. இதைப் படிச்சா நம்ம பிள்ளைங்க கெட்டுப்போகும் என்று சொல்ற வங்ககிட்ட இது வரைக்கும் ஒழுங்கா இருக்குதான்னு கேட்டா அது ஒரு பக்கம் கெட்டிருக்கு...இது ரொம்பவும் கெடுத்துடும்னு சொல்றாங்க. தேர் சிற்பங்களை பாருங்கள் தேரை தெருவில் இழுத்து வரும்போது யாரும் கண்ணை மூடிக்கோ என்று சொல்றதில்லையே. வெளிநாடுகளில் பாலியல் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஆனால் இங்கு அந்த முயற்சிக்கே எதிர்ப்பு. இம் மாதிரியான போலி ஒழுக்கவாதிகள் பின்னால் மத அரசியல் சம்பந்தப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி நான் சொல்ல விரும்பவில்லை.

தொண்னூறுக்கு பின் வந்த இலக்கியங்கள் குறித்து....

சமீபத்தில் அரங்கேற்றத்தில் பெருமாள் முருகன் எழுதிய மேடு சிறுகதை படித்தேன். புதிதாக எழுதுகிறார். பிரமாதமாக எழுதுகிறார். சமீபத்தில் படித்ததில் பிடித்த கட்டுரை. மிதிபட்ட ரோஜாக்கள்,
பா. இராமமூர்த்தி எழுதியது.

நீங்கள் கவிதை எழுதியதுண்டா?

கவிதை எழுதுவதில்லை. எழுதுபவர்களை ஊக்குவிப்பதும் இல்லை. சங்க காலத்திலிருந்தே கவிதை வளர்ச்சி பெற்றிருக்கிறது. ஆனால் உரைநடை இலக்கியம். அந்த அளவுக்கு வளரவில்லை. கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் உரைநடை இலக்கியம் குதிரை வேகத்தில் வளர்ந்திருக்கிறது. ஆனால் தமிழில் அந்நிலை இல்லை.

ஆடுகளுக்கு இன்று அடையாளமாக tatooing செய்யப்படுகிறது. ஆனால் அந்தக் காலத்தில் ஒவ்வொரு ஆட்டின் நிறம், கொம்பு, உறுப்புகள், குணம் ஆகியவை கொண்டு ஆட்டை இனம் கண்டார்கள். ஆயிரம் ஆடுகள் இருந்தால் கூட ஒவ்வொரு ஆட்டையும் தனித் தனியாக அடையாளம் காணும் திறம் பெற்றிருந்தார்கள். அதற்கு அவர்கள் உபயோகித்த அடையாளச்சொற்களைப் பற்றி வட்டார வழக்கு சொல்லகராதியில் உள்ளது. அதில் இருந்து சில...

அரியாடு...சுத்தச் செகப்பு

காடு பார்த்த கொம்பு - பாதையின் இருபுறமும் இருக்கும் வயக்காடுகளைப் பார்ப்பது போல் வளைந்திருக்கும் கொம்புகளையுடையது.

கொக்கரிக் கொம்பு - சேவல் கூவும் போது தரும் காட்சியை ஒத்த கொம்பு
கிளிக்கொம்பு.

அரியாடு - தனி சுத்தச் சிகப்பு

கம்பளியாடு - கருப்புமிஞ்சின சிகப்பில் தொடைகளிலும் முன் சப்பையிலும், முதுகு எழும்பு புருவங்களிலும், தாரை தாரையாக கருப்புக் கோடுகளைக் கொண்டது.

கரிசையாடு - கரும்பு மிஞ்சின சிகப்பு

கருங்காத்து வெள்ளை - உடல் பூராவும் வெண்மை. காதுகள் மட்டும் கருமை.

கொப்பாடு - கொம்பு உள்ள பெண் ஆடு
சுட்டி - தலையில் வெண்புள்ளி
மூளி - காது குறைபட்டு இருத்தல்
தாலி - கழுத்தின் கீழே இரு தொங்கட்டான்கள் தொங்குவது.
சில நம்பிக்கைகள்
தினவு எடுத்த சில எருமை மாடுகள் பருத்தி மார்ப் படப்பில் உரசினாலே போதும் சினை தங்கிவிடும்.

சந்திப்பு :அம்பலவாணன்
செப்டம்பர் '94


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...