???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பாஜக மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: காங்கிரஸ் நோட்டீஸ்! 0 கார்த்தி சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் 0 ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 147 பேர் ராஜினாமா அறிவிப்பு! 0 நடிகர் தனுஷை சொந்தம் கொண்டாடிய மதுரை தம்பதி: வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம் 0 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லாது: டெல்லி உயர்நீதிமன்றம் 0 உலகின் அதிவேக ஏவுகணை: பிரமோஸ் சோதனை வெற்றி! 0 மாநிலங்களவை தேர்தல்: பாஜகவிற்கு வாக்களித்த பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ-க்கள்! 0 உள்ளாட்சித் தேர்தல் தாமதத்திற்கு திமுக காரணம் என்பது வடிகட்டிய பொய்: ஸ்டாலின் 0 திசை மாறிப்போன குழந்தைகள் மீண்டும் தாய் கட்சிக்கு திரும்புவார்கள்: முதல்வர் நம்பிக்கை 0 பேஸ்புக் தகவல் திருட்டு: விஷயம் இதோடு முடிந்துபோய் விடவில்லை! 0 காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நாடகமாடுகிறது: கமல் குற்றச்சாட்டு! 0 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் தொடங்கியது! 0 தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழா - சென்னையில் இன்று நடக்கிறது! 0 இன்று பகத்சிங்கின் 87வது நினைவு தினம்! 0 குரங்கணி காட்டுத்தீ விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மிரட்டும் குரல்கள் - சா.கந்தசாமியின் எழுத்தோவியம்

Posted : திங்கட்கிழமை,   அக்டோபர்   10 , 2005  17:08:41 IST

மன்னிப்புக் கேள் என்ற குரல்கள் தமிழ்நாட்டில் மிரட்டிக் கொண்டு இருக்கின்றன. அந்தக் குரலில் அதிகாரம், ஆணவம் அதிகமாக உள்ளது. மன்னிப்பு கேள்- என்று சொல்லத் தகுதி வேண்டும். மன்னிப்பு கேட்க தைரியம் வேண்டும். இரண்டும் இல்லாத கோழைகள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றார்போல மன்னிப்புக் கேள்- என்று கட்டளை இடுகிறார்கள். மன்னிப்பு என்று உதட்டளவில் சொல்லி சிக்கலைத் தவிர்த்துக் கொள்கிறார்கள்.

மன்னிப்பு- என்பது மனம் அறிந்து, தானே செய்தது தவறு என்று உணர்ந்து அதற்காக வருந்திக் கேட்பதுதான் நிஜமான மன்னிப்பு. ஒருவரை கட்டாயப்படுத்தி, சிக்கலில் மாட்ட வைத்து கோரிப் பெறுவதில்லை மன்னிப்பு. அப்படி செய்வது, மன்னிப்புக் கேட்க வைக்கத் தூண்டும் அதிகார மையத்தின் ஆணவத்தையும் அறிவின்மையையுந்தான் காட்டும்.

மன்னிப்பு கேட்பது-மன்னிக்க வைக்கப்படுவதும் மகத்தான தைரியத்தின் வெளிப்பாடு. அது நிஜம் என்பதைச் சார்ந்தது. போலிகள், அயோக்கியர்கள், அற்பர்கள் ஆயிரம் முறை மன்னிப்பு கேட்பார்கள். அறிவிலிகள் மன்னிப்பார்கள்.

மன்னிப்பு என்பதை ஆன்மீகமாக உபதேசித்து வளர்த்தது ஏசுநாதர்தான். கிறிஸ்தவ சமயத்தில் அடிப்படை கொள்கைகளில் ஒன்றாக மன்னிப்பு கேட்பதும்-மன்னிக்கப்படுவதும் உள்ளது. இறைவனால், நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள் என்று தங்களைப் பாவிகள் என்று நம்பிக் கொண்டிருந்த மக்களிடம் கூறினார். அதற்காக அவர் செய்ய வேண்டியதெல்லாம் உண்மையிலேயே செய்த பாவத்தை உணர்ந்து அதற்காக வருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கோரினால் மன்னிக்கப்படுவீர்கள் என்று மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாகக் கூறினார்கள்.

நீங்கள் எப்படிப்பட்ட மனிதராக இருந்தாலும்-உண்மையிலேயே மன்னிப்புக் கோரினால் நிஜமாகவே மன்னிக்கப்படுவீர்கள் என்று ஏசு கூறினார். இப்படி கூறிய ஏசு மீது மக்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டது. அவர்கள் தங்களின் பாவச் செயல்களுக்காக வருந்தி மன்னிப்புக் கோரினார்கள்.

கடவுள் அவர்கள் கோரிக்கையை ஏற்று மன்னித்தாரா என்பது அல்ல. தங்கள் பாவம் மன்னிக்கப்படும் என்று ஒரு மனிதன் முன்பு சொன்னது அவர்களுக்கு கடவுள் மீது நம்பிக்கையைத் தூண்டியது. மனித சரித்திரத்திலேயே, உங்கள் பாவங்கள், கொடிய செயல்கள் எல்லாம் மன்னிக்கப்படும் என்று ஏசு தான் சொன்னார்.

அவர் அதை எல்லா மனிதர்களிடமும் சொன்னார். தனக்கு நன்மை செய்தவர்களிடம் சொன்னதைவிட தனக்குத் தண்டனை கொடுத்தவர்கள், காட்டிக் கொடுத்த ஆள்கள் என்று பாரபட்சம் காட்டாமல் அவர்களை மன்னித்துவிடுங்கள் என்று அவர்களுக்காக கடவுளிடம் மன்னிப்பு கேட்டார். அவர் தனக்காக- தான் உயிர் பிழைத்து வாழ மன்னிப்புக் கேட்கவில்லை. அறியாமையில் மூழ்கி, என்ன செய்கிறோம் என்று தெரியாமல் வாழ்வதாக அவர் நம்பிய மனிதர்களின் சார்பாக மன்னிப்புக் கோரினார்.

மன்னிப்பு- என்ற செயல் மகத்தான செயலாக-உண்மையான செயலாக புனிதம் பெற்றது.

மன்னிப்பு கேட்க வைப்பது வீரர்களின் செயலும் இல்லை; மன்னிப்புக் கேட்பது கோழைகளின் செயலும் இல்லை. அது அன்பும் கருணையும் கொண்ட உண்மையான செயல். வீரமும் தைரியமும் கொண்டவர்கள்தான் மன்னிப்புக் கேட்பார்கள். போலிகள் நடிப்பார்கள். நடிப்பு நிஜமல்ல. அது நிஜமல்ல என்பதைத் தெரிந்து கொண்டு அவர்களை மன்னிப்பதுதான் மக்களின் செயல்.

ஏனெனில் போலிகள் என்ன செய்கிறோம் என்பது தெரியாமலேயே சொல்கிறார்கள்.

என் பிதாவே, அவர்களை மன்னித்துவிடுங்கள் என்று ஏசு இறைவனிடம் இறைஞ்சியது எப்போதும் அர்த்த உள்ளதாகவே இருக்கிறது .

சரித்திரத்தில், மனிதன் அறிந்து கொண்டு இருப்பதில் இருந்து தெரிவது என்னவென்றால், அவர்கள் தன்னைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ளவில்லை. அதாவது தெரிந்து கொள்ள நிறைய உள்ளது என்பதுதான்.

மன்னிப்புக் கேள் என்று மிரட்டும் குரல்கள் அதன் தொடர்ச்சியாகவே இருக்கிறது.

சாகித்ய அகதமி விருது பெற்ற சா.கந்தசாமி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவர்.அந்திமழைக்கென்று சா.கந்தசாமி எழுதும் பிரத்தியேக கட்டுரைகள் வாராவாரம் செவ்வாயன்று வெளிவரும்.
அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள...
Profile
Article I, Article II,Article III,Article IV ,Article V,Article VI


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...