???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திருச்சி உள்பட 6 மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை 0 இந்தியாவில் ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று 0 தமிழகத்தில் 9 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு! 0 கீழடி 6ஆம் கட்ட அகழாய்வில் எடைக்கற்கள் கண்டுபிடிப்பு 0 தமிழகத்தில் ஒரே நாளில் 4,280 பேர் பாதிப்பு: 65 பேர் உயிரிழப்பு 0 ஆளுநருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு 0 தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகளின்றி முழு ஊரடங்கு 0 ஜூலை மாதத்துக்கும் ரேசன் பொருட்கள் இலவசம்: தமிழக அரசு 0 ஒன்றுமே செய்யவில்லையா?- சுப.வீரபாண்டியன் 0 நினைப்பும் நிஜமும்! - மாலன் 0 தமிழகத்தில் 1 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு கொரோனா 0 கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று 0 ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்க: சோனியா கடிதம் 0 எல்லா கிராமங்களுக்கும் மின்வசதி! 0 சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'¯Â¢÷¨Á' - சிற்றிதழ் அறிமுகம் 5

Posted : வியாழக்கிழமை,   ஜனவரி   12 , 2006  00:36:09 IST

நவீன தமிழிலக்கிய பரப்பில் பல சிற்றிதழ்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றில், தனக்கென இடத்தைப் பெற்று வெளிவந்து கொண்டிருக்கிறது 'உயிர்மை' மாத இதழ். 2002 டிசம்பர் முதல் உயிர்மை பதிப்பகத்தை நடத்தத் தொடங்கிய மனுஷ்யபுத்திரன், அதன் தொடர்ச்சியாக 'உயிர்மை' இதழைக் கொண்டுவரத் தொடங்கினார். 2003ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உயிர்மை முதல் இதழ் வெளிவந்தது.

" தனி நபர்களை மையமாகக் கொண்ட இலக்கிய அரசியலை முடிந்தவரை தவிர்ப்பது, உலக அளவிலான கலை, இலக்கிய ஆளுமைகள் தொடர்பான பதிவுகளை விரிவாக மேற்கொள்வது" என்கிற நோக்குடன் இதழை நடத்திக் கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார் ஆசிரியர் மனுஷ்யபுத்திரன். உயிர்மையின் சிறப்பம்சம், தொடர்ந்து 'பத்தி'களை வெளியிடுவது. ஒரு குறிப்பிட்ட துறையைப் பற்றி ஒரு குறிப்பிட்ட எழுத்தாளர் தொடர்ந்து எழுதுவதன் மூலம்தான் அத்துறை பற்றிய விரிவான ஆதாரங்களை வாசகன் பெற முடியும் என்பதால் இத்தகைய பத்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதாகக் குறிப்பிடுகிறார். அவ்வகையில் கார்டூன் வரலாறு பற்றி டிராட்ஸ்கி மருதுவும், சுற்றுச் சூழல் பற்றி நா. முருகேச பாண்டியனும் உலகக் கவிஞர்கள் பற்றி பிரம்மராஜனும், ஆழ்நதியைத் தேடி எனும் தலைப்பில் ஜெயமோகனும் கவிதைகளோடு ஒரு சம்வாதம் எனும் தலைப்பில் ஞானக்கூத்தனும் எழுதிய தொடர்கள் குறிப்பிடத்தக்கன.

இத்தொடர்களின் ஊடாக தமிழின் மிக முக்கியமான படைப்பாளிகள் மற்றும் இளம் படைப்பாளிகளின் சிறு கதைகளையும் கவிதைகளையும் நாடகங்களையும் உயிர்மை வெளியிட்டு வருகிறது. கட்டுரைகளைப் பொறுத்தவரை யமுனா ராஜேந்திரன், அ. மார்க்ஸ், நாஞ்சில்நாடன், அ. ராமசாமி போன்றோர் எழுதிய கட்டுரைகள் வாசகர்களின் கவனத்திற்கும் விவாத்திற்கும் உரியனவாக இருந்தன.

இரண்டாவது கட்டமாக உயிர்மை எஸ். இராமகிருஷ்ணணின் 'விழித்திருப்பவனின் இரவு, சுகுமாரனின் 'பின்குறிப்பு', பிரேம்-ரமெஷின் 'முடிவுகளுக்கு வெளியே' ஆகிய தொடர்களை ஆரம்பித்தது.

எஸ். ராமகிருஷ்ணன் தன்னுடைய தொடரில் உலகில் மிக முக்கிய எழுத்தாளர்களின் எழுத்து அல்லாத பிறதுறை ஈடுபாடுகளைப் பற்றி எழுதியதன் மூலம் ஒரு எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய பரந்த அக்கறைகள் பற்றிய ஒரு விரிவான பார்வையை இத்தொடரில் ஏற்படுத்தியிருக்கிறார். பிரேம்-ரமேஷ் எழுதிய தொடரில் அடிமை முறை, பின் நவீனத்துவம், கம்யூனிசம் தொடர்பாக எழுதிய கட்டுரைகள் வரவேற்பைப் பெற்றன. வாழ்வின் கசப்பும் இருளும் நிறைந்த அனுபவங்களையும் காட்சிகளையும் தமது தொடரில் பதிவு செய்திருக்கிறார் சுகுமாரன்.

நாடகத்துறை தொடர்பாகவும் உயிர்மை தொடர்ந்து தம் பங்களிப்பைச் செய்து வருகிறது. பல இளம் மற்றும் மூத்த நாடகக் கலைஞர்களின் நேர்காணல்களும் அவர்களைப் பற்றிய அறிமுகங்களும் நாடக நிகழ்வுகள் குறித்த பதிவுகளும் தொடர்ந்து இடம்பெற்று வந்திருக்கின்றன. பல புதிய கவிஞர்களையும் உயிர்மை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

பதிப்புத் துறையிலும் 'உயிர்மை பதிப்பகம்' முக்கியமான புத்தகங்களை வெளியிட்டு தனக்கென ஓரிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. சுஜாதாவின் சிறுகதைகளை 'விஞ்ஞான சிறுகதைகள்', 'ஸ்ரீரங்கத்துக் கதைகள்', தேர்ந்தெடுத்த சிறுகதைகள் இரண்டு பாகங்கள் என நான்கு பகுதிகளாக வெளியிட்டிருக்கிறது.
ஜெயமோகனின் குறுநாவல்கள் முழுத் தொகுதி, எஸ்.. ராமகிருஷ்ணனின் 'நெடுங்குருதி' நாவல், சுகுமாரனின் மொழிபெயர்ப்பில் பாப்லோ நெரூடாவின் கவிதைகள், தியோடர் பாஸ்கரின் 'எம் தமிழர் செய்த படம்', எஸ்.வி. ராமகிருஷ்ணனின் 'அது அந்தக் காலம்' போன்றவை உயிர்மையின் முக்கிய வெளியீடுகளாகும்.

ஆசிரியர் மனுஷ்யபுத்திரன், நவீனத் தமிழ்க் கவிதைகளில் தனக்கென ஓரிடத்தைத் தக்க வைத்துக்கொண்டிருப்பவர். இதுவரை ஐந்து கவிதைத் தொகுப்புகளும் இரண்டு கட்டுரைத் தொகுப்புகளும் வெளிவந்திருக்கின்றன. 'மனுஷ்யபுத்திரன் கவிதைகள்' எனும் முதல் தொகுப்பு 1988ஆம் ஆண்டு மணிமேகலை பிரசுரத்தின் வெளியீடாக வந்தது. 1993இல் 'என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்', 98-இல் 'இடமும் இருப்பும்', 2001இல் 'நீராலானது' 2004இல் 'மணலின் கதை' ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. 'எப்போதும் வாழும் கோடை', 'காத்திருந்த வேளையில்' எனும் கட்டுரைத் தொகுப்புகள் 2004, செப்டம்பரில் வெளிவந்துள்ளன.

இளம் படைப்பாளர்களுகாக தேசிய அளவில் வழங்கப்படுகிற 'சன்ஸ்கிருதி சம்மான்' விருது 2003ஆம் ஆண்டில் மனுஷ்யபுத்திரனுக்கு வழங்கப்பட்டது.

2004இல் 'இலக்கியச் சிற்பி' எனும் விருதை 'அமெரிக்க இலக்கிய நண்பர்கள்' எனும் அமைப்பு இவருக்கு வழங்கியுள்ளது. அதே ஆண்டு மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தனிநபர் படைப்பாற்றலுக்கு வழங்குகிற தேசிய விருதும் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது தொடர்ந்து இதழியல் துறையிலும் பதிப்புத் துறையிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.

உயிர்மையின் எதிர்காலத் திட்டம் என்ன?

"இன்றைய காலகட்டத்தில் தீவிர இலக்கியத் தேவைக்கேற்ற பணியை உயிர்மை செய்யும். காலப் பொறுத்தமற்றதை உயிர்மை செய்யாது" என்கிறார், மனுஷ்யபுத்திரன்.

தனி இதழ் : ரூ 15/ பக்கம் 64.

ஆண்டுச் சந்தா: ரூ 180/-

வெளிநாடுகளுக்கு ஆண்டுச் சந்தா: $20]

ஆன் லைன் மூலம் சந்தா செலுத்த விரும்புகிறவர்கள் www.anyindian.com மூலம் செலுத்தலாம்.

இதழ் தொடர்பு முகவரி:

உயிர்மை,
11/29, சுப்பிரமணியம் தெரு,
அபிராமபுரம், சென்னை- 600 018.

Tele/Fax: 91- 44- 2499 3448
¦ºø§Àº¢ : 9444 366 704..

þ¨½Â Ó¸Åâ: www.uyirmai.com
Á¢ýÉïºø: uyirmai@gmail.com

- மு. யாழினிவசந்தி

வாராவாரம் இப்பகுதியில் ஒரு சிற்றிதழை அந்திமழை அறிமுகப்படுத்துகிறது.


கல்வெட்டு பேசுகிறது
நவீன விருட்சம்
நிழல்
முகம்


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...