தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இலங்கை இந்திய வம்சாவளி தமிழ் அரசியல் பிரமுகரான செந்தில் தொண்டைமானின் பிறந்தநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இலங்கையின் அரசியல் பிரமுகர்களில் முக்கியமானவராக விளங்கும் செந்தில் தொண்டமானின் பிறந்தநாளை, தமிழகத்தில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, பெரம்பலூர், சிவகங்கை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்ட இளைஞர்கள் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
செந்தில் தொண்டைமான் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். இவர் தமிழகத்தின் பல கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு ஜல்லிக்கட்டு மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இலங்கையில் தற்போது வசித்து வந்தாலும், தமிழக ஜல்லிக்கட்டு நலச் சங்கத்தின் கௌரவத் தலைவராகவும் அறியப்படுகிறார்.