???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்!

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   14 , 2018  23:12:39 IST

மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தலைமையிலான அரசு மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது. கரூர் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப திமுகவில் இணைந்துள்ளேன்.
 
ஸ்டாலின் தலைமையில் மக்கள் ஆட்சி ஏற்பட பாடுபடுவேன். மிகுந்த அர்பணிப்பு உணர்வோடு செயல்படுவேன். திமுகவில் இருந்துதான் முதன் முறையாக கவுன்சிலர் ஆனேன்.
 
கரூர் நாடாளுமன்ற தொகுதி, மற்றும் 4 சட்டமன்ற தொகுதிகளில் திமுகவே வெல்லும். மு.க ஸ்டாலினை முதல்வராக்க பாடுபடுவேன். ஆதங்கத்தின் வெளிப்பாடாக வெளியாகும் கருத்துக்கு பதில் கூற விரும்பவில்லை.
 
தொண்டர்கள் அரவணைக்கும் தலைவராக ஸ்டாலினை பார்க்கிறேன். தகுதி நீக்கத்துக்கு ஆளான எம்.எல்.ஏ.க்களை திமுகவுக்கு வருமாறு அழைக்கவில்லை. இந்த அரசு இருக்கும் வரை எடப்பாடி பழனிசாமி இருப்பார். அரசு கவிழ்ந்தால் அவர் விவசாயபணியை பார்க்க வேண்டும்.
 
தகுதி நீக்கம் செய்யப்பட்டதும் முதல் ஆளாக தேர்தலை சந்திக்கலாம் என்று டிடிவி தினகரனிடம் கூறினேன். தொண்டர்களை அரவணைத்து செல்லக்கூடிய தலைவர்தான் சிறந்த தலைவராக இருப்பார்.
 
தொண்டர்களை அரவணைக்கும் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். திமுகவில் இணைய வேண்டும் என்பதற்காக அமமுக செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருந்தேன்.
 
பணியாற்றிய கட்சியை விமர்சிப்பது சரியல்ல. அது தொடர்பாக பேச விரும்பவில்லை. கே.சி பழனிசாமியுடன் இணைந்து பணியாற்றுவதில் பிரச்னை இல்லை.
 
திமுகவில் நான் இணைந்தது சுதந்திரமாக எடுக்கப்பட்ட முடிவு. ஆலோசித்து முடிவெடுத்தே திமுகவில் இன்று இணைந்துள்ளேன்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...