???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம்! 0 டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்! 0 தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது! 0 அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் 0 மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு! 0 தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் 0 மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் 0 கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு 3 ஆண்டுகளுக்கு தேர்வு உண்டு; ஃபெயில் இல்லை: செங்கோட்டையன்

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   19 , 2019  00:16:40 IST

1 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி என்ற முறைக்கு தடை விதிக்கும் விதமாக 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதனை ஆமோதிக்கும் விதமாக இந்த முறையை தமிழகத்திலும் அமல்படுத்த இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. மாநிலம் முழுவதும் இந்த அறிவிப்பு அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது மத்திய அரசு கொண்டு வந்த விதிகளில் இந்த ஆண்டு முதலே பொதுத்தேர்வு என்ற அறிவிப்பு உள்ளதாகவும். ஆனால் தமிழக அரசு தன்னுடைய தன்னாட்சி அதிகாரத்தை பயன்படுத்தி 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு அளித்துள்ளதாகவும் கூறினார்.

3 ஆண்டுகள் விதிவிலக்கு முடிவதற்குள்ளாக மாணவர்கள் அனைவரின் கல்வித் திறனும் மேம்படுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்த அமைச்சர், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

இந்த ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடக்கும் என்றும், ஆனால் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுவிடுவார்கள் என்றும் அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...