![]() |
3000 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்: அமைச்சர் செங்கோட்டையன்Posted : செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 09 , 2018 18:47:55 IST
மூவாயிரம் அரசு பள்ளிகளில் நவம்பர் மாதம் இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டுவரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
போரூரில் அரசுப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் தானியங்கி வருகைப்பதிவு ஆகியவற்றை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், நவம்பர் மாத இறுதிக்குள் மூவாயிரம் அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டுவரப்படும் என்றார்.
|
|