???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை 0 பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் 0 பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு! 0 பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு 0 ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி 0 தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் 0 மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் 0 முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம்

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   13 , 2018  22:45:13 IST

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது: செந்தில் பாலாஜி மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர். மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்கள் ஒரே நிலைப்பாட்டில் இருக்க மாட்டார்கள் என்பதற்கு அவரே உதாரணம்.
 
அதிமுக, திமுகவில் ஆரம்பத்திலிருந்து இருப்பவர்கள் கட்சி மாற மாட்டார்கள். ஆகையால்தான் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
 
சதி செய்து யாரும், யாரையும் முடக்க முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை கொலை செய்யக் கூட முயற்சி நடைபெற்றது. ஆனால் அதையும் மீறி இருவரும் கட்சியை வளர்த்தனர். சதி என்பது அரசியலில் இருக்கத்தான் செய்யும். அதையும் மீறி வெற்றி பெற்று இயக்கத்தை வளர்ப்பதுதான் தலைவர்களின் கடமை.
 
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் மேல்முறையீடு செய்வது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என்றார் கடம்பூர் ராஜூ


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...