தமிழகத்தின் ஆளுமை மிக்க அரசியல் தலைவர் என்றால் வைகோ மட்டுமே இருக்கிறார், அவரை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,மெட்ராஸ் உயர் நீதிமன்றமா? அல்லது தமிழக அரசு நீதிமன்றமா? என்று வைகோ நாடாளுமன்றத்தில் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, “திமுக-வில் இணைந்து அவர் நினைத்ததை சாதித்து வருகிறார்.
திமுக வெளியிலிருந்து அசைக்க பார்த்தார். ஒன்றும் அசைக்க முடியவில்லை. குறிப்பாக ஆளுமை திறன் அதிகம் மிக்க அரசியல்வாதி தமிழகத்தில் இருப்பார் என்றால் அவர் வைகோ தான். எனவே அவருடைய அரசியல் தலைமைக்கு வாழ்த்து கூறுவதற்கு கடமைப்பட்டுள்ளேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
ஊழல் மிகுந்த குடும்பம் என்றும் ஸ்டாலின் ஆட்சி அமைக்க தகுதி இல்லை என்று கூறி வந்த வைகோ, திமுகவை வெளியிலிருந்து ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதால் கூட்டணி அமைத்து தற்போது அவர் ஸ்டாலினுைடய ஊதுகுழலாக மாறி இருக்கின்றார் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.