???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டிசம்பரில் வெளியாகும் ‘பாவக்கதைகள்’ : நெட்ஃபிளிக்ஸின் ஆந்தாலஜி திரைப்படம் 0 ஓ.டி.டி-யில் வெளியாகிறதா விஜய்யின் ‘மாஸ்டர்’? 0 மராட்டிய எம்.எல்.ஏ பாரத் பால்கே காலமானார்! 0 மக்களுக்கு எரிவாயு மானியத்தில் தடையிருக்காது – அமைச்சர் தர்மேந்திர பிரதான் 0 மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை 0 வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது 0 நிவர் புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி 0 லக்ஷ்மி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் 0 திருவண்ணாமலைக்கு வெளிமாவட்ட பக்தர்கள் நுழைவதற்குத் தடை! 0 மு.க.ஸ்டாலினுக்கு பாராட்ட மனமில்லை: அமைச்சர் ஜெயக்குமார் 0 மருத்துவம் - காவல்துறைக்குச் சங்கம் தேவையில்லை: உயர்நீதிமன்றம் 0 ஒ.பி.சி இடஒதுக்கீடு: மத்திய-மாநில அரசுகள் மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் 0 பொதுப்பிரிவினருக்கு நவம்பர் 30 முதல் மருத்துவ கலந்தாய்வு 0 முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி! 0 இந்திய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தந்தை ஃபாகிர் சந்த் கோஹ்லி மறைவு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

’எனக்கு சினிமா அரசியல் தெரியல, மிரட்டுறாங்க’ - சீனு ராமசாமி பேட்டி

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   28 , 2020  02:20:41 IST


Andhimazhai Image

இன்று காலை தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி தமிழக முதல்வர் உதவ வேண்டும் என சீனு ராமசாமி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து, சற்று முன் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேட்டியளித்தார்.

அதில், ”எனக்கு அரசியல், சினிமா தெரிந்த அளவிற்கு சினிமா அரசியல் தெரியவில்லை. ’800’ படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதால் மிகுந்த வேதனை அடைந்தேன். தமிழ் சினிமாவில் நடிக்கக் கூடிய கதாநாயகன், ஒரு பகுதி தமிழர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க கூடாது என ட்விட்டரில் பதிவிட்டேன். இதை விஜய் சேதுபதிக்கு எதிராக நான் பேசுவதாக சிலர் சித்தரிக்கிறார்கள்.

நன்றி வணக்கம் என்பது பற்றி அவரிடம் கேட்டேன். அதற்கு முதலில் கதை நன்றாக உள்ளதால் நடிக்க ஒப்புக்கொண்டேன். பின்புதான் இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியான விமர்சனங்கள் பற்றி தெரியவந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த போது தயாரிப்பு நிறுவனமே தானாக முன்வந்து படத்திலிருந்து விலகிக் கொள்ளுமாறு தெரிவித்தார்கள். நானும் நன்றி வணக்கம் என்று கூறி முடித்துக் கொண்டேன் என்று விளக்கம் அளித்தார். அத்துடன் அந்த விவகாரம் முடிந்துவிட்டது. பின்னர் அவருடன் ஆயுத பூஜை நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொண்டேன்.

ஆனால், கடந்த 4 நாட்களாக எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனக்கு வாட்ஸ் அப், மெசேஜ் மற்றும் கால் செய்து ஆபாச வார்த்தைகளில் பேசுகிறார்கள். முகம் தெரியாத சில சக்திகள் என்னை தொடர்ந்து அச்சுறுத்துகிறார்கள். ஏன் என்று தெரியவில்லை. இதுகுறித்து எழுத்துப்பூர்வமாக காவல்துறைக்கு புகார் அளிக்க உள்ளேன்.” என்று கூறியுள்ளார்.

முன்னதாக 800 படத்திலிருந்து விஜய் சேதுபதியை விலகிக் கொள்ளுமாறு இயக்குநர் சீனு ராமசாமி  கோரிக்கை வைத்திருந்தார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...