???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நாம் தமிழர் கட்சி: போதுமா பதினாறு லட்சம் வாக்குகள்?

Posted : வெள்ளிக்கிழமை,   மே   24 , 2019  07:50:00 IST


Andhimazhai Image

சீமானின் நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலில்  16 லட்சத்து 45 ஆயிரத்து 57 வாக்குகளை பெற்றுள்ளது. இது மொத்தம் பதிவான வாக்குகளில் 3.8 சதவிகிதம் ஆகும். காஞ்சிபுரம் , கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, ஆகிய தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3ம் இடத்தை பிடித்துள்ளது.  

 

 2016ம் ஆண்டு  நாம் தமிழர் கட்சி சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட்ட போது  4 லட்சத்து 58 ஆயிரத்து 104 வாக்குகளை மட்டுமே பெற்றது. அப்போது பதிவான வாக்குகளில் இது 1.1 சதவிகிதம் ஆகும். அத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவிகிதம், 2 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

 

2016ம் ஆண்டு 6வது இடத்தில் இருந்த நாம் தமிழர் கட்சி 2019ம் ஆண்டு தேர்தலில் 4ம் இடத்தில் உள்ளது.

 

தேர்தலின் முடிவை குறித்து விகடனுக்கு  அளித்த பேட்டியில்  சீமான் ’‘மோடி தன்னுடைய மனசாட்சியைத் தொட்டுச் சொல்லட்டும் ’அவர்கள்  வாக்கு  இயந்திரத்தில்’ எந்த கோளாறுகளையும்  செய்யவில்லை என்று. அதிகாரிகளே அவர்களுக்கு வாக்கு செலுத்திய கொடுமையும் நடந்தது.

 

கமல் வெள்ளையாக இருப்பதால் அவர் பொய் சொல்லமாட்டார் என்று நம்பி மக்கள் வாக்களித்துவிட்டனர். அடுத்த தேர்தலில் நான் போட்டியிடுவேன் ஆனால் கமல் போட்டியிடமாட்டார். அடுத்த தேர்தலில் 117 இடங்கள் ஆண்களுக்கும் 117 இடங்கள் பெண்களுக்கு பிரித்துக் கொடுத்து போட்டியிட  வைப்பேன். ரஜினி அரசியலுக்கு வரும்போது  இதைவிட அதிக சலசலப்பு இருக்கும்’’ என்று கூறினார்.

 

நாம் தமிழர் கட்சி சீமானின் பிரச்சாரத்தையும் உழைப்பையும் மட்டுமே நம்பி இருக்கிறது. இப்போது பெற்றிருக்கும் சுமார் 3.8 சத வாக்குகளைப் பார்த்தால் அவர்கள் இன்னும் நீண்டதூரம் போக வேண்டி இருப்பது புலனாகிறது!

 

“நாங்கள் தயாராக இருக்கிறோம். இப்போது பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள்தாம் எங்கள் எதிர்கால வாக்காளர்கள் என்றுதானே சீமான் சொல்வார்? அதைத்தான் இப்போதும் சொல்கிறோம்” என்கிறார் நாதக ஆதரவாளர் ஒருவர். என்ன இருந்தாலும் அரசியலில் சீமானை விட ஜூனியரான கமல் ஹாசன் கட்சியும் கிட்டத்தட்ட இவர்கள் அளவுக்கே வாக்குகளைப் பெற முடிந்திருக்கிறது என்பதையும் கவனிக்கவேண்டும்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...