???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சக்திவாய்ந்த குரல்கள் அமைதியாக இருப்பது ஏன்? ஜார்கண்ட் கொலை குறித்து ராகுல் கேள்வி 0 தமிழகத்தின் 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 18-ம் தேதி தேர்தல் 0 பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு ஸ்டாலின் கண்டனம் 0 ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் 0 கீழடி அகழாய்வில் இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு! 0 மாணவர் சேர்க்கை இல்லை: மூட விண்ணப்பிக்கும் பொறியியல் கல்லூரிகள் 0 டெல்டா மாவட்டங்களில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் 0 தாய்லாந்தில் சிக்கியுள்ள திருப்பூர் இளைஞரை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சர் நடவடிக்கை 0 தங்க தமிழ்ச் செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்: தினகரன் 0 மேகதாது விவகாரத்தில்கர்நாடக திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது 0 ஊதியம் வழங்க மத்திய அரசின் உதவியை கேட்கிறது பி.எஸ்.என்.எல். 0 இதுதான் புதிய இந்தியாவா?: குலாம் நபி ஆசாத் கேள்வி 0 பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது! 0 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ராகவா லாரன்ஸ் விவகாரம் - சீமான் வருத்தம்

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   15 , 2019  03:06:33 IST

தனது சேவை மற்றும் செயல்பாடுகள் குறித்து நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் இழிவாக பிரச்சாரம் செய்கின்றனர் என நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது தொடர்பில் பதிலளித்த  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக ராகவா லாரன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், "நீங்கள் என்னைத் தவறாகப் பேசியதையும், அதற்கு நான் நாகரிகமாகப் பதில் சொன்னதையும், முடிந்துபோன ஒரு விஷயமாய் விடாமல், உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் எனது சேவை சம்பந்தப்பட்ட பதிவுகள் போடப்படும் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற வலைதளங்களில் கமெண்ட்ஸ் என்கிற பெயரில் தப்புத்தப்பான வார்த்தைகளில் கொச்சையாகவும், அசிங்கமாகவும்  நாலாந்தர நடையில் பதிவிடுகிறார்கள்.

இறுதியாக ஒன்றை மட்டும் உறுதிபடக் கூறுகிறேன். எனக்கு எது நடந்தாலும் அதைத் தாங்கிக் கொள்வேன்! ஆனால், மாற்றுத்திறனாளிகளான என் பசங்களுக்கும் பாசமிக்க எனது ரசிகர்களுக்கும், ஏதாவது ஒரு சிறு தொந்தரவு ஏற்பட்டாலும்  என்னால் தாங்கிக்கொள்ள முடியாது'' எனக் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த சீமான், "ராகவா லாரன்ஸின் சேவை மனப்பான்மை கொண்ட செயல்பாடுகள் மீது எனக்கு பெரும் மதிப்பிருக்கிறது. எனக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் சிலர் செயல்படுகின்றனர். அவர்கள் எங்களது பெயரில் இவ்வாறு தவறு செய்திருக்கலாம். எங்களது இயக்கத்தில் புரிதலும், முதிர்ச்சியும் இல்லாமல் யாரேனும் ராகவா லாரன்ஸை இழிவாக பேசியிருந்தால் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். ராகவா லாரன்ஸ் புண்படும்படி நடந்தவைக்கு அவரிடம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
 


English Summary
Seeman regretted for lawrence issue

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...