???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கேரளாவில் பழங்குடி அடித்துக்கொலை: 2 பேர் கைது, 5 பேரிடம் விசாரணை 0 பொறியியல் கலந்தாய்வுக்கு இனி நேரில் வரவேண்டியதில்லை: அமைச்சர் தகவல்! 0 பல்கலைகளில் பல கோடி ரூபாய் ஊழல்: அன்புமணி குற்றச்சாட்டு! 0 சென்னை மீனவர்கள் மீது கடலோர காவல்படை தாக்குதல்! 0 கனடா பிரதமருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு! 0 டி.டி.வி.தினகரனுக்கு கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ ஆதரவு 0 ஜெயலலிதா பிறந்த நாள்: சென்னை வருகிறார் பிரதமர் மோடி 0 தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்! 0 ரஜினியை முதல்வராக முன்னிறுத்தி அரசியல் மாநாடு! 0 தலைமை செயலாளரை தாக்கிய வழக்கு: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களின் ஜாமின் மனு தள்ளுபடி 0 தயாரிப்பாளர்கள் - டிடிஎஸ் நிறுவனம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி 0 புதிய கட்சி தொடங்கியுள்ள கமலுக்கு பாரதிராஜா ஆதரவு 0 அதிமுக எங்கள் கட்சி: டி.டி.வி.தினகரன் பொளேர்! 0 ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ் 0 நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

டாக்டர் கிருஷ்ணசாமி மீது சீமான் கடும் தாக்கு.

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   06 , 2017  07:01:57 IST

நீட் தேர்வுக்கு ஆதரவாகத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்துவரும் கிருஷ்ணசாமிக்கு நாம் தமிழகர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டம் தெரிவித்துள்ளார்.

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், கிருஷ்ணசாமியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

மக்களின் உணர்வுகள் என்ன என்பதை கிருஷ்ணசாமி போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள தலைவர்கள் நீட் தேர்வில் தாங்கள் செய்த தவறுகளை மறைக்கவே பார்க்கிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு தடை விதித்த போது அதனை ஆதரித்தார். அதே போல மீத்தேன் எரிவாயு திட்டம், நீட் தேர்வு உள்ளிட்ட தமிழர்களை பாதிக்கும் அனைத்து வி‌ஷயங்களில் அவர் பா.ஜனதா பக்கமே நின்று கொண்டிருக்கிறார். இப்படித் தமிழர் நலனுக்கு எதிராக கிருஷ்ணசாமி செயல்படுவது கண்டிக்கத்தக்கது. சுயநலத்தையே தன் நலமாக கொண்டிருப்பவர் அவர். முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி சமூக அக்கரையோடு மக்கள் நல பணியாற்றி வருபவர் அவரை பார்த்து, அந்தப் பொம்பளய எனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார். கிருஷ்ணசாமியால் மட்டும்தான் இப்படியெல்லாம் பேச முடியும்.

 

அவரது குடும்பத்தினர் அனைவருமே டாக்டர்களாகி விட்டனர். எந்த நீட் தேர்வை எழுதி அவர்கள் தேர்வானார்கள். அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளின் தயவால் எம்.எல்.ஏ.வான அவர் இன்று அந்த கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார். இன்று நீட் தேர்வுக்கு எதிராக நடக்கும் போராட்டம் கிருஷ்ணசாமியின் பேரப் பிள்ளைகளுக்கும் சேர்த்துதான் என்பதை அவர் உணர வேண்டும். மரணத்தில் கூட மனதளவில் பாதிக்கப்படாதவர்கள் எப்படி மனிதர்களாக இருக்க முடியும்.

 

நீட் தேர்வுக்கு எதிராக மருத்துவ மாணவர்களைவிட கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று அதிக அளவில் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனை மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்ளாமல் கடந்து சென்று விடக்கூடாது. தமிழக அரசு தனது பொறுப்பை உணர்ந்து இந்த வி‌ஷயத்தில் அக்கறையோடு செயல்பட வேண்டும். இல்லையென்றால் மாணவர்கள் புரட்சிப் போராட்டம் அரசை வீழ்த்தும் வகையில் கூட செல்லும். போராட்டக் களத்தில் இருக்கும் மாணவர்களுக்கு நாம் தமிழர் கட்சி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

 

இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...