அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

’’என்னை ஹிட்லர் என்று சொன்னால் நீங்கள் யார்?’’ - சீமான்

Posted : வியாழக்கிழமை,   மே   12 , 2016  13:03:56 IST

நாம் தமிழர் கட்சியின் செந்தமிழன் சீமானை தொலைபேசியில் அழைத்தபோது, அவர் கடலூரில் வேட்புமனுத் தாக்கல் செய்து சிலமணி நேரங்கள் ஆகியிருந்தன. தெருத்தெருவாக வாக்கு சேகரித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னவர், நமது கேள்விகளுக்கும் பதில் அளித்தார். முதலில் மென்மையாக ஆரம்பித்தவர், தனக்கேயுரிய பாணியில் அனாயசமாக உஷ்ணத்தின் எல்லகளைத் தொட்டார். மீண்டும் குளிர்ந்தார். அவரது பேட்டியிலிருந்து...
 
 
கடலூர் தொகுதி நிலவரம் எப்படி இருக்கிறது?
நான் முழுக்க மக்களை நம்பி நிற்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக நிற்பது நம்முடைய மாண்பு. ஒரு இனத்தின் அழிவில் பிறந்தவன் நான்,  கடலூர் ஒரு பாதிக்கப்பட்ட நகரம். தமிழ்நாட்டின் குப்பைத் தொட்டியாக இது இருக்கிறது. அதிக புற்றுநோயாளிகள் இருக்கும் மாவட்டம் இதுதான். தொழிற்சாலை கழிவு உள்ளிட்ட எல்லா பிரச்னைகளும் இருக்கிறது. நான் நிற்பதால் இதை ஒரு கவனத்துக்கு உரிய தொகுதியாக மாற்ற நினைத்தேன். இதை இப்போது நட்சத்திர தொகுதி என்கிறார்கள்.
 
 
தமிழ்நாட்டை தமிழர்களே ஆளவேண்டும் என்பதுதான் உங்கள் அரசியலின் ஆணிவேராக இருந்தாலும்,  உங்கள் அளவுகோல்கள் படியே வேற்றுமொழி பேசுகிறவர்கள் பதினான்கு பேருக்கும் மேல் போட்டியிட வாய்ப்புக்கொடுத்திருக்கிறீர்கள் அல்லவா?
இதில் எந்த குழப்பமும் இல்லை. எங்கள் கட்சியின் அரசியல் -எல்லா உயிர்களுக்கும். அரசு- எல்லா மக்களுக்கும். தலைமை அதிகாரம் எப்போதும் தமிழனுக்கு என்பதுதான்.  பிறநாடுகளில் நாம் என்ன அரசியல் செய்கிறோம்? அந்த நாட்டு தேசிய இனங்கள் என்ன அரசியல்  வைத்திருக்கிறார்களோ அதைத்தானே செய்கிறோம்? வேறு மாநிலங்களில் தமிழன் தலைமைப்பதவிக்கு வரமுடியுமா? முடியாது. வரவும் கூடாது. நாம் இங்கே நம் இனத்தின் தார்மீக உரிமையைக் கேட்கிறோம். தமிழர் நாட்டை தமிழர் ஆளவேண்டும் என்பது அடிப்படை உரிமை. அதிகாரம் தமிழர்களிடம்  இருந்திருந்தால் தமிழனுக்கு இவ்வளவு துயரங்கள் வந்திருக்காது என்கிறேன். அணு உலையோ, கெயில் எரிவாயோ, மீத்தேனோ, கச்சத்தீவு இழப்போ நடந்திருக்காது. காவிரி, முல்லைப்பெரியாறில் 400 டிஎம்சிக்கு கையேந்தி நிற்கிறோம். ஆனால் 2300 டி எம்சி தண்ணியைக் கடலில் விடுகிறோமே? அதை ஏன் சேமிக்கவில்லை? நுட்பமாக பார்த்தால் எங்களுடைய ஆறுகளில் மண் அள்ளுவதை கருணாநிதி வந்தாலும் அள்ளுவாங்க; ஜெயலலிதா வந்தாலும் அள்ளுவாங்க; கச்சத்தீவை மீட்பேன் என்கிறார்கள். யார் கொடுத்தது? தமிழர் அல்லாதவர் ஆளும்போது தமிழர்களை ஆளவேண்டும் என்ற கனவுதான் இருக்கிறதே ஒழிய, தமிழின மொழிவழி தேசிய இனம் எல்லா இனங்களைப்போல் வாழவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் போய்விடுகிறது. நாங்கள் எல்லா மொழிதேசிய மக்களையும் மதிக்கிறோம். நேசிக்கிறோம். அவர்களுக்கு நாங்கள் நட்பானவர்கள். ஆனால் எம்மொழி பேசுகிறவர்களுக்கு  உயிரானவர்கள். நிதிஷ்குமார் பீகாரில் பீகாரியா பஹாரியா(வெளியில் இருந்துவருகிறவனா?) என்று கேட்கிறார். கேரளத்தில் உம்மன் சாண்டி தமிழன் வெறிகொண்டு அதிகாரம் கேட்டு வருகிறான் என்கிறார். அவனுக்குக் கொடுங்கள் அவன் கேட்பதுதான் நியாயம் என்கிறார். என்னைத் தான் சொல்கிறார் அவர். அவன் கேட்பது நியாயம் என்கிறார். என்னை திராவிடனா மலையாளியா என்றால் நான் மலையாளிதான் என்பேன் என்கிறார் அவர். கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் ஆற்றுமணலை இங்கிருப்பது போல் ஏன் அள்ளமுடியவில்லை? ? இதையெல்லாம் பார்க்கும்போதுதான் இந்த மண்ணை ஆளும் உரிமை இந்த மண்ணில் பிறந்தவனுக்குத்தான் இருக்கணும் என்கிறேன். எங்க கட்சியில் மத்தமொழி பேசுறவங்களும் இருக்காங்க. அவங்களுக்கும் பதவி, அதிகாரம் கொடுக்கப்போறோம்.  ஆந்திரா தெலுங்கானா, ஆந்திரா என்று இரண்டாகப் பிரிந்தது. சந்திரசேகரராவ் ஆந்திராவிலோ, சந்திரபாபு நாயுடு தெலுங்கானாவிலோ முதல்வர் ஆகமுடியுமா?  ஒரே மொழி பேசும் மக்கள்தானே அவங்க.. அங்கே அது நடந்ததா? தமிழர் நாட்டை தமிழர் ஆளக்கூடாதா என்று சொன்னால் எதிர்ப்பவர்களைக் கேட்கிறேன், நானூறு ஆண்டாக வெள்ளைக்காரன் ஆண்டான். ஏன் அவனை விரட்டினீங்க? ஏன் சோனியா காந்தியை பிரதமர் ஆகவிடலை?
 
 
பிறமொழியாளர்களை ஒதுக்கும் பேச்சுகளால் உங்கள் கட்சியில் இருக்கும் பிறமொழியாளர்கள் உள்ளம் குறுகுறுக்குமே?
இல்லையே.. என் தம்பிகள் எனக்கு உயிராக நிற்கிறார்கள். தெலுங்கர், மலையாளி, உருதுபேசும் இஸ்லாமியர், மராட்டி பேசுகிறவர் என்று எல்லோரும் இருக்காங்க. என் உடன் இருந்து பார்க்கும்போது நான் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் எப்படி உண்மையாக இருக்கிறேன் என்பது தெரிகிறது. அவர்களில் பலர் மாவட்ட செயலாளராக இருக்கிறார்கள்.. எல்லா மொழிகளின் தேசிய இனங்களுக்கும் சீட்டு கொடுத்திருக்கோம். இந்திய ஒன்றியத்தில் யாரும் என் கட்சியில் இணையலாம். நாங்கள் உரிமைக்காகப் போராடும் ஓர் இனத்தின் மகன்கள். எங்கள் அடையாளங்களை இழந்து, வேளாண்மையை இழந்து தவிக்கும்  நாங்கள் பிற மொழிவாரி இனங்களைப் பகைத்துக்கொண்டு வெல்ல இயலாது என்று அறிந்திருக்கிறோம். நாங்கள் உரிமையை முன்னெடுக்கும்பொது அதற்கு துணையாக வரவேண்டியது பிற இனங்களின் கடமை என்று கேட்கிறோம். எங்கள் வரைவு அறிக்கையில் குடிநீர், மருத்துவம், கல்வி எல்லாவற்றையும் எல்லோருக்கும் பொதுவாகத்தான் தருவதாகத்தான் கூறியிருக்கிறோம். எந்த மொழியாளர்களையும் வேறுபடுத்திக் கூறவில்லை. கட்டபொம்ம நாயக்கர் மன்னராக இருந்தார்.  என் பாட்டன்  வெள்ளையத்தேவனும் சுந்தரலிங்கமும் அவரிடம் தளபதியாக இருந்தார்களாக இல்லையா? அதுபோல் நீங்க எனக்கு தளபதியா இருங்க.மன்னன் நான் தான்! அதுதானே சரி? இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் தமிழர்கள் உள்ளனர். ஆனால் அந்த மாநிலங்களில் ஊடகவிவாதங்களில் ஒரு தமிழன் அமர்ந்து பார்த்துள்ளீர்களா? ஆனால் என் நாட்டு ஊடகத்தில் எல்லா மொழிக்காரர்களும் அமர்ந்து, அவர் பேசுகிறது இனவாதம் என்கிறார்கள். ஈழப்பிரச்னையில் கருத்து சொல்றாங்க. எங்களைப்போய் திரும்பத் திரும்ப இனவாதி என்கிறீர்களே எங்களைப் போல் ஒரு மக்களாட்சியை ஏற்ற மாநிலம் உலகில் உண்டா? உலக இனங்கள் எல்லாவற்றுக்காகவும் நாங்க பேசியிருக்கோம். எங்களுக்காக யாராவது பேசியிருக்காங்களா?
 
 
இப்படி நீங்கள் மொழித் தூய்மைவாதம் இனத்தூய்மைவாதம் பேசுவது ஹிட்லர் கடைப்பிடித்த பாணிபோல போல உள்ளதாகச் சொல்கிறார்களே?
இப்படிச் சொல்கிறீர்களே.. நீங்கள்தான் ஹிட்லர். ஒரு தேசிய இனம் உரிமையைக் கேட்பதை, பாசிசம் என்று சொல்கிறவன் தான் கொடிய ஹிட்லர். என் இனம் 
சாகும்போது நீ என்ன செய்தாய்? கருணாநிதி இருக்கும் இடத்தில் நான் இருந்திருந்தால் போரை நடத்தவேண்டும் என்ற எண்ணம் சோனியா காந்திக்கு வந்திருக்காது. என் இனத்தைக் கொல்ல ஆயுதமும் பணமும் கொடுப்பதாக இருந்தால் புலிகளுக்கு பணமும் பயிற்சியும் நானும் கொடுக்க வேண்டிவரும் என்று ஓர் அறிக்கையில் கதை முடிந்திருக்கும். நான் தமிழன் என்று பேசுவது உங்களுக்குப் பிடிக்கலையா? சரி நான் திராவிடன் என்று பேசுவது என்ன? நான் பிறப்பின் அடிப்படையில் மொழியின் அடிப்படையில் தூயவாதம் பேசுகிறேன் என்றால் ஆரியன் என்று எப்படிப் பார்த்தீர்கள்? திராவிடன் என்று எப்படிப்பார்த்தீர்கள்? நாடு தமிழ்நாடு. தேசம் தமிழ்தேசம். இங்கே இருக்கும் அரசியல் தமிழ்தேசிய அரசியல்தானே? கச்சத்தீவைக் கொடுத்தது இந்திய தேசிய அரசியல்; அதை திருப்பி எடுக்கப் போராடுவது தமிழ்தேசிய அரசியல்தானே? சல்லிக்கட்டுக்கு தடை விதிப்பது இந்திய தேசிய அரசியல்.  அதற்கு தடை நீக்கப்போராடுவோம். அது தமிழ்தேசிய அரசியல். சீனப்பட்டாசு வேண்டாம் என்று சிவகாசிப் பட்டாசுக்காகப் பேசுவதுதான் தமிழ்தேசியம். ஈழவிடுதலையை எல்லாரும் ஆதரிக்கிறீங்க. அது என்ன தேசம்? தமிழ்தேசம். அதை நாங்க பேசினால் ஆபத்தாகிவிடுகிறதா? திரும்பத்திரும்ப ஹிட்லர் மாதிரின்னு சொல்றான்.. இருந்துட்டுப்போறேனே... என்னை ஹிட்லர் என்று  
சொன்னால் நீ யார்? நீ மிகக்கொடுமையான இனவாதி.. ஒரு தேசிய இனத்தின் மகன் தன் உரிமைக்காக நிற்கும்போதுபோது உம்மன் சாண்டி மாதிரி அது சரிதான் என்று சொல்லணும். அவன் முதல்வர் ஆனால், அவன் கூப்பிட்டாலும் கூப்பிடலைன்னாலும் முன்னிருக்கையில் இருந்து வாழ்த்துவேன் என்று அவர் சொல்கிறார். எனக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் இருந்து வந்தெல்லாம் வாக்கு கேட்கிறாங்க.. என்னை அவங்க பாசிஸ்டாக, இனவாதியாகப் பார்க்கலையே.. ஏன் பார்க்கலை? நான் கேட்கிறது சரி என்கிறார்கள். நான் என் தேசிய இனத்தை மட்டும் பார்க்கலை. காஷ்மீர், திரிபுரா, பஞ்சாப் என எல்லா தேசிய இனத்துக்காகவும் போய் நிற்கிறேன் அல்லவா? சரி பிறமொழியாளர்கள் எனக்கு வாக்குப் போடலையா? போடாதே.. அவங்க வாக்கு தமிழனுக்கு இல்லை என்றால்.. தமிழன் வாக்கும் அவர்களுக்கு இல்லை என்று ஆகிவிடும் அல்லவா? கருணாநிதியும், ஜெயலலிதாவும், விஜயகாந்தும் அவர்கள் சொந்தக்காரர்கள் வாக்கில் தான் வெல்கிறார்களோ? விஜயகாந்த் என் நாட்டை ஆள்வது என்றால் இன்னொருமுறை விஜயநகரப் பேரரசை நிறுவப்போகிறீர்களா? மன்னராட்சி காலத்தில்தான் போர் தொடுத்தீர்கள்.. நாங்கள் தோற்றோம்.  நீங்க ஆட்சி செய்தீர்கள். மக்களாட்சி காலத்திலும் நாயக்கர் ஆட்சிதானா? நாங்கள் விடுதலையே பெறலையா?
 
 
பொதுவாக ஒப்பீட்டு அளவில் அதிமுகவை விட  திமுகவையே நீங்கள் அதிகம் விமர்சிக்கிறீர்கள் என்கிறார்கள்.ஐந்தாண்டு ஆட்சி செய்திருக்கும் அதிமுகவை சீர்தூக்கிப் பார்க்கும் தேர்தல் அல்லவா இது?
இதை நான் ஏற்கமாட்டேன். என்னுடைய பேச்சைக் கேட்காதவர்கள் சொல்வது இது. இதை திமுககாரர்கள்தான் கிளப்பிவிடுகிறார்கள். இரு கட்சிகளையும் சம தராசில் நிறுத்துகிறோம். அப்படிப்பார்த்தாலும் கூட கருணாநிதி ஒன்றும் புனிதர் இல்லையே? ஜெயலலிதா என்றைக்கு அரசியலுக்கு வந்தார், கருணாநிதி என்றைக்கு அரசியலுக்கு வந்தார்? அரை நூற்றாண்டுகால தமிழ்நாட்டு அரசியல் வரலாறு என்ன? கருணாநிதி வாழ்க! கருணாநிதி ஒழிக என்பதுதானே? மையப்புள்ளி அவர்தான். எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்கவேண்டியவர் அவர்தான்.  கருணாநிதி மட்டும் கக்கன், ஜீவானந்தமாக இந்த மண்ணை ஆட்சி செய்திருந்தால் ஏது ஜெயலலிதா?
 
 
இப்போதே  கறுப்புப்பூனைபடை வைத்திருக்கிறீர்களே? சாதாரண மக்கள் எப்படி நெருங்குவார்கள்?
கூட்டத்தில் போய் குத்துப்பட்டு சாவு என்கிறீர்களா? (சிரிக்கிறார்.. ) நான்  ரொம்ப எளியவன். தம்பிகள்   பாதுகாப்பு என்று சொல்லி இப்படிச் செய்கிறார்கள். அவர்களுக்கு என் உயிர் முக்கியமாகப் படுகிறது. என்னுடைய ஆட்சி நிர்வாகம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். நான் தனிப்பட்டமுறையில் இடுப்பில் துப்பாக்கி வைத்திருக்கிறேனா கத்தி வைத்திருக்கிறேனா என்று பார்க்காதீர்கள். கூட்டங்களில் வரும்போது யாராவது கையைப் பிடித்து கீறிவிட்டுவிடுவார்கள். தூரத்தில் இருந்து ஆசிட் கூட வீசிவிடலாம். அதுபோல் அபாயம் எனக்கு இருப்பது உண்மைதானே? நான் இதை விரும்பவே இல்லை!. என் கூட்டங்களுக்கு போலீஸ் பாதுகாப்பே கூட சமீபத்தில் தான் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
 
(மே அந்திமழை2016 இதழில் வெளியான கட்டுரை)


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...