???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு 0 தமிழகத்தில் பால், தயிர் விலை உயர்வு! 0 காஷ்மீர்: நிதி ஆயோக் உறுப்பினர் சர்ச்சை பேச்சு 0 மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினி வீடு முற்றுகை: த.பெ.தி.க. 0 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு 0 சாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சை: ஷீரடியில் கடையடைப்பு 0 பொங்கல் மது விற்பனை: கடந்த ஆண்டைவிட 10% அதிகம்! 0 கார் - லாரி மோதல்: நடிகை ஷாபனா ஆஸ்மி படுகாயம் 0 ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை: நமல் ராஜபக்ச 0 கூட்டணி குறித்து பொது வெளியில் பேச வேண்டாம்: ஸ்டாலின் அறிவுறுத்தல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   09 , 2019  23:29:26 IST

திரைப்பட இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து செய்யப்படுவதாக பீகார் போலீஸ் அறிவித்துள்ளது.

கும்பல் வன்முறையை தடுக்கக்கோரி, பிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், திரைப்பட இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, அனுரக் கஷ்யாப் உள்ளிட்டோர் மீது, பீகார் போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிகழ்வானது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில் புதன்கிழமை மாலையில் செய்தியாளர்களிடம் பேசிய முசாஃபர்பூர் காவல் கண்காணிப்பாளர் மனோஜ்குமார் சின்ஹா, நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் தொடரப்பட்ட இந்த தேசத்துரோக வழக்கில், மனுதாரரான சுதிர்குமார் ஓஜா, போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தவறியதாக கூறினார்.

மேலும் அவரின் புகார் ஆதாரமற்றதாகவும், முழுக்க முழுக்க சமூக அமைதியை குலைக்கும் நோக்கத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். இதனால் மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 ஆளுமைகள் மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்வதற்கு முடிவு எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். ஆதாரமற்ற புகாரை கொடுத்து தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்தியதற்காக, சுதிர்குமார் ஓஜா மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மனோஜ்குமார் சின்ஹா தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...