அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் வரும் 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு: அரசு அறிவிப்பு 0 அதிகரிக்கும் கொரோனா: முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை 0 கடந்த ஆண்டைபோல ஒன்றுபட்டு கொரோனாவை ஒழிப்போம்: பிரதமர் மோடி 0 ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,501 பேர் உயிரிழப்பு! 0 ரெம்டெசிவிர் மருந்தின் விலை 2800 ரூபாயிலிருந்து 899 ரூபாயாக குறைப்பு 0 வேளச்சேரி வாக்குச்சாவடியில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் 186 வாக்குகள் மட்டுமே பதிவு 0 தடுப்பூசிக்கான வயது வரம்பை 25ஆக குறைக்க வேண்டும் - பிரதமருக்கு சோனியா கடிதம் 0 கால்நடைத் தீவன ஊழல்: 4வது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன்! 0 கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு விதித்த தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் 0 நண்பன் விவேக் மறைவால், துக்கம் தொண்டையை அடைக்கிறது: நடிகர் வடிவேலு கண்ணீர் 0 மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ.500 அபராதம்! 0 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9344 பேருக்கு கொரோனா! 0 நடிகர் விவேக் உடல் தகனம்! 0 கொரோனாவுக்கு எதிரான போரில் கும்பமேளா ஊக்கம் அளிக்க வேண்டும் – பிரதமர்! 0 பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா தொற்று!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு: நாடாளுமன்றம் இன்று கூடியது

Posted : திங்கட்கிழமை,   மார்ச்   08 , 2021  10:14:00 IST

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்ற வகையில் மக்களவை, மாநிலங்களவை கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இந்த உரையை விவசாயிகள் போராட்டத்தை காரணம் காட்டி 20-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.
 
பிப்ரவரி 1-ந் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்தார்.
 
அதைத் தொடர்ந்து வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி விவசாயிகள் நடத்தி வருகிற போராட்டங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் மீது தனி விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி 4 நாட்கள் நடந்த தொடர் அமளியால் சபை முடங்கியது.
 
முதல் அமர்வுக்கு பின்னர் மாநிலங்களவை பிப்ரவரி மாதம் 12-ந் தேதியும், மக்களவை 13-ந் தேதியும் ஒத்திவைக்கப்பட்டன.
 
இந்த நிலையில் பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வுக்காக நாடாளுமன்றம் இன்று கூடியது.
 
குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்றனர். மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்றார்.
 
எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்தார். கருக்கலைப்பு திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...