???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203! 0 முன்னாள் எம்.எல்.ஏ மரணம்! 0 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர்! இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார்! 0 உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு 0 செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு 0 ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி 0 என்.எல்.சி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு 0 குவைத் புதிய சட்டம்: தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேறும் அபாயம் 0 மன்னர் மன்னன் மரணம் தமிழர்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு: மு.க.ஸ்டாலின் உருக்கம் 0 கொரோனா இன்று: தமிழகம்-3827 சென்னை-1747! 0 முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா! 0 ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும்! 0 தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! 0 தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகள் 2021 ஜூலை வரை நீட்டிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அதிமுக கூட்டணி: யாருக்கு எவ்வளவு சீட்டு?

Posted : சனிக்கிழமை,   பிப்ரவரி   16 , 2019  04:53:46 IST


Andhimazhai Image

 

 மாலை மயங்கும் நேரம். சென்னையின் கடற்கரையில் தேசிங்கு ராஜா தன் குதிரையைக் கண்டு அதை நோக்கி ஓடினான். குதிரை அவனை முகர்ந்து அடையாளம் கண்டது.

“ராஜா.. இவ்வளவு நாள் எங்கே போயிருந்தீங்க?”

“இதுவா முக்கியம்? ராஜா என்றால் இப்படி காணாமல் போவது பிறகு அரண்மனைக்கு வருவதும் சகஜம்தானே…?”

“ம்க்கும்..” என்ற குதிரை “சரி மேட்டருக்கு வாங்க..” என்றது.

“அதிமுக- பாஜக கூட்டணிதானே…. அது ஏறக்குறைய முடிவடைந்த நிலைதான். பாஜகவுக்கு 15 சீட்களைக் கொடுத்துவிட்டு தாங்கள் 25 இடங்களை வைத்துக்கொள்வது என்று முடிவு செய்துள்ளனர் அதிமுகவினர். சமீபத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் நடந்த பேரத்தில் இப்படித்தான் முடிவானதாம். பாஜக தன்னிடம் எட்டு இடங்களை வைத்துக்கொண்டு மீதி இடங்களில் நான்கை பாமகவுக்கும் மூன்றை தேமுதிகவுக்கும் கொடுக்கும். அதிமுக தங்களின் 25 இடங்களில் புதிய தமிழகம், தமாகா, புதுச்சேரிஎன்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆகிய மூன்று கட்சிக்கும் ஆளுக்கு ஒரு இடம் ஒதுக்குமாம்.”

“ஓ… சரி பாரிவேந்தர், ஏசி சண்முகம் ஆகியோரின் கதி?”

“எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. இவர்களின் பேச்சுவார்த்தை திறனைப் பொறுத்து இடங்கள் ஒதுக்கப்படலாம் அல்லது வேறு ஏற்பாடுகள் செய்யப்படலாம்”

“பியூஷ் கோயலுடன் சந்திப்பில் யார் யார் இருந்தார்கள்?”

“கோயல் வருவதற்கு முன்பே பங்களாவில் ரகசியமாக ஈபிஎஸ், ஓபிஎஸ் இருந்ததாகச் சொல்கிறார்கள். தமிழிசை பொன்னார் இருவரும் பாஜக சார்பிலும் அதிமுக சார்பில் வேலுமணி, தங்கமணி இருவரும் கூடுதல் உறூப்பினர்கள். நள்ளிரவில் பேச்சுவார்த்தை முடிந்ததும் கோயலை விமானநிலையத்துக்கு தமிழிசையும் பொன்னாரும் அழைத்துச் செல்ல, வேலுமணி, தங்கமணி இருவரும் பங்களாவின் முன்வாயில் வழியாக வெளியேறினர்.”

“ஆக.. பின் வாயில் வழியாக ஓபிஎஸ், ஈபிஎஸ் வெளியேறினர்…”

:ஆக…. என்ற வார்த்தையைச் சொல்லாதே…. சவுக்கை எடுப்பேன்”

“மன்னரே.. மாங்காய் புளித்ததோ வாய் புளித்ததோ என்று பேசாதீரும்”

தேசிங்கு சிரித்துவிட்டான். குதிரை சின்னதாக ஒரு ஆட்டம் போட்டது.

“திமுக பக்கம் செய்தி சொல்லும்”

“ஏன் நானேதான் சொல்லணுமா? நீயும் தெருத்தெருவாக சுற்றுகிறாய் அல்லவா? நீயும் சொல்லேன்”

“என்னதான் பாமக அதிமுக பக்கமாகச் சேர்ந்து விட்டது என்று சொல்லப்பட்டாலும் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றே சொல்லவேண்டும் என்கிறார்கள். திமுக பக்கம் கூட பாமகவை இழுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. திமுக தரப்பில் விசிக வை விட பாமக இருப்பதே நல்லது என்று  திட்டம் ஓடுகிறதாம்”

“என்ன சொல்கிறாய்?”

“ஆமாம். களநிலவரம் அப்படி இருக்கிறதாம். பாமக ஒருவேளை அதிமுக கூட்டணிக்குப் போய்விட்டால் பிறகுதான் விசிக இங்கு சேர்வது முடிவாகுமாம் என்று ஒரு நண்பர் சொல்கிறார்”

:ஏது பாமகவுக்கு இவ்வளவு மவுசு?”

“போன சட்டமன்றத் தேர்தலில் தனியே நின்று 5.5 சதவீத ஓட்டு வாங்கிக் காட்டி இருப்பதால் இந்த மவுசு. மநகூவே 2.3% தானே வாங்கியது. ஆகவே பாமக இருப்பது பலம் என்று இருதரப்பும் நினைக்கிறது.”

“அடேங்கப்பா.. அப்படியானால் அதிமுக கூட்டணியில் 4 சீட்டுக்கு எப்படி பாமக ஒப்புக்கொள்ளும்?”

“மாட்டார்கள். அதிகம் கேட்பார்கள். இழுபறிதான். லேசில் முடிவடையாது பாருங்கள்.. ஒருவேளை பாஜக அதிமுககூட்டணி முறிந்து பாமக அதில் அதிக இடங்களுடன் சேர்ந்தாலும் சேரலாம்..”

“ஏன் பாமக தனியாக இந்த தேர்தலில் நின்று அதிக சதவீத வாக்குகளைப் பெற்று அடுத்த சட்டமன்றத் தேர்தலில் நிறைய இடங்களைத் தரும் கூட்டணியில் இடம் பெற்று துணை முதல்வர் இடம் பெறும் என்று சொல்லேன்..”

“அடடா… என்ன இருந்தாலும் நீங்கள் அரச வம்சம். ஆண்ட பரம்பரை அல்லவா... உங்கள் ராஜ தந்திரம் மிகச் சிறப்பு” என்றது குதிரை.

”ஜெ, கலைஞர் இல்லாத நிலையில் நடக்கும் தேர்தல்.. அதிகாரத்தில் உள்ள கட்சிகள் பெரியண்ணன் தோரணையில் நடந்துகொள்ளும்.. இதையெல்லாம் சமாளிக்கவேண்டும்.. சின்ன கட்சிகளையும் அரவணைத்துப்போகவேண்டும்.. பெரிய சவால்தான்…” என்ற தேசிங்கு

“டிடிவி என்ன செய்யப்போகிறாராம்?” என்று கேட்டான்.

“அதிகமான வாக்குகளைப் பெறுவதே அவர் இலக்கு. கட்சிக்கு அங்கீகாரம் வாங்க குறிப்பிட்ட அளவிலான வாக்குகளைப் பெறவேண்டும்… அதுவே அவர் முதல் இலக்கு. சில இடங்களை வெல்வது பற்றி அவர் அலட்டிக்கொள்ளப்போவது இல்லை”

என்ற குதிரை “ரொம்ப நாள் கழித்து சந்திக்கிறோம்.. விசேஷம் ஒன்றும் இல்லையா?” என்றது.

 

“சரி வா போவோம்” என்றவாறு தேசிங்கு முன்னே போக, குதிரை குஷியானது.

 

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...