???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு 0 தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! 0 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது! 0 கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா! 0 குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை 0 கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது! 0 சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் 0 மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது! 0 வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள்! 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 11-ம் கட்ட விசாரணையை தொடங்கியது ஒருநபர் ஆணையம் 0 குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு 0 வட தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் 0 தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது: ஸ்டாலின் 0 நீட் மசோதாவை 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பிவிட்டோம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கோடை விடுமுறை முடிந்தது; தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜுன்   02 , 2019  23:35:50 IST

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் 2-வது வாரத்தில் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறைக்குப் பின் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்து வந்த நிலையில், திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ளன. ஒரு சில மழலையர் பள்ளிகள் மட்டும் திறப்பு தேதியை 7-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளன. அரசுப் பள்ளிகள், மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை பள்ளிகல்வித்துறை செய்துள்ளது.

பாடப்புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். கடந்த ஆண்டு 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டன. நடப்பு ஆண்டில் 2, 3, 4, 5, 7, 8, 10, 12-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதில், 1, 6, 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளதால் பள்ளி திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. எஞ்சிய வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணி முடிவடைந்ததும் மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...