???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203! 0 முன்னாள் எம்.எல்.ஏ மரணம்! 0 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர்! இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார்! 0 உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு 0 செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு 0 ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி 0 என்.எல்.சி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு 0 குவைத் புதிய சட்டம்: தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேறும் அபாயம் 0 மன்னர் மன்னன் மரணம் தமிழர்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு: மு.க.ஸ்டாலின் உருக்கம் 0 கொரோனா இன்று: தமிழகம்-3827 சென்னை-1747! 0 முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா! 0 ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும்! 0 தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! 0 தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகள் 2021 ஜூலை வரை நீட்டிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம்

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   17 , 2019  23:20:10 IST

தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையில் உள்ள பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க பள்ளிக்கல்வி துறை முடிவு செய்தது. அதன்படி கடந்த கல்வியாண்டில் முதற்கட்டமாக 2018- 19ம் ஆண்டில் 1, 6, 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த கல்வியாண்டில் 2, 3, 4, 7 8 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த 3-ஆம் தேதி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி திறந்த நாளில் அனைத்து மாணவர்களுக்கும் பாடபுத்தகங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் 3, 4, 5, 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பெரும்பாலான பாடபுத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. புதிய பாடத்திட்டத்தை அச்சிடும் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அச்சிடும் பணி விரைவாக நடந்து வருகிறது. மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால், புத்தகங்களை விரைந்து வழங்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...