???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நிலவேம்புக்கு கொரோனா எதிர்ப்புத்திறன் - சுவீடன் பல்கலை. கூட்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு 0 கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆனது! 0 அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று 0 நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு பாராட்டு 0 சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ராவின் வீடியோவை நம்ப வேண்டாம்: சிபிசிஐடி 0 கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை: ஜெயக்குமார் 0 வகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 தமிழகத்தில் வெளிநாட்டு இஸ்லாமியருக்குக் கொடுமை! -கே.எஸ்.அழகிரி அறிக்கை 0 சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை 0 தமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று 0 சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? நீதிமன்றம் 0 சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ விசாரணை தொடக்கம் 0 சொத்து வரி வசூலை 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் 0 கான்பூரில் ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம்

Posted : வியாழக்கிழமை,   மே   28 , 2020  21:11:19 IST

புலம்பெயர் தொழிலாளர்கள் படும் துயரம் குறித்து உச்சநீதிமன்றம், தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கு, நீதிபதிகள் அசோக் பூஷன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் கட்டணங்கள் மற்றும் உணவை யார் வழங்குவது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.  தொழிலாளர்கள் பசியின்றி இருக்கிறார்களா என யாரேனும் கண்காணிக்கிறார்களா என்றும், தொழிலாளர்கள் அனைவரும் சொந்த ஊர் திரும்ப இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என்றும் வினவினர்.

இதற்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தொழிலாளர்களுக்கான பயணக்கட்டணத்தை அவர்கள் புறப்படும் மாநில அரசோ அல்லது அவர்கள் சென்றடையும் மாநிலத்தின் அரசோ ரயில்வே நிர்வாகத்துக்கு வழங்குவதாகத் தெரிவித்தார்.

விசாரணையின் போது நாடு முழுவதும் 4 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப காத்து கொண்டிருப்பதாக மனுதாரர்களில் ஒருவரான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் தெரிவித்தார்.

இதையடுத்து புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடைக்கால உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர். அதில் புலம்பெயர் தொழிலாளர்களிடம் ரயில்களிலோ, பேருந்திலோ எவ்விதமாக கட்டணமும் கண்டிப்பாக வசூலிக்கக்கூடாது என தெரிவித்தனர்.  தொழிலாளர்கள் ரயிலில் புறப்படும் வரை அவர்களுக்கான உணவை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினர். ரயிலில் புறப்படும் வரை மாநில அரசுகளும், ரயில் பயணத்தில் ரயில்வே நிர்வாகமும் தொழிலாளர்களுக்கு உணவும் குடிநீரும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், சொந்த மாநிலத்துக்கு திரும்புவோர் தங்கள் கிராமங்களை சென்றடையும் வரையிலான போக்குவரத்து, மற்றும் உணவை அவர்களின் மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உணவு தொடர்பாக உத்தரவு பேருந்து பயணங்களுக்கும் பொருந்தும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். தொழிலாளர்கள் உள்ள பகுதிகளில் உதவி மையங்களை ஏற்படுத்தி, அவர்கள் பதிவு செய்வதை மாநில அரசுகள் விரைவுபடத்த வேண்டும் என்றும், தொழிலாளர்கள் எந்த சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறார்களோ, அப்பகுதிக்கு அருகில் உள்ள முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தேவையான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  தேவையான ரயில்களை ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், பயணத்திற்கான ரயில்கள் மற்றும் பேருந்துகள் குறித்த அறிவிப்புகளை மாநில அரசுகள் வெளியிட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்ப எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் எவ்வளவு தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர் என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...