???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வானதி சீனிவாசனுக்கு கட்சியில் தேசிய பதவி! 0 சென்னை அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் நியமனம்! 0 ஒரே நாளில் 64 குழந்தைகள் பிரசவம். ஆசிய அளவில் தமிழக அரசு மருத்துவர்கள் சாதனை! 0 ’எனக்கு சினிமா அரசியல் தெரியல, மிரட்டுறாங்க’ - சீனு ராமசாமி பேட்டி 0 ’சாஹாவிடம் அதிரடியை எதிர்பார்க்கவில்லை’ டேவிட் வார்னர் பேட்டி! 0 குட்கா விவகாரம் - சட்டப்பேரவை செயலாளர் வழக்கு 0 வன்முறையைத் தூண்ட பாஜக முயற்சி: திருமாவளவன் 0 10, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு 0 சசிகலா விடுதலை குறித்து 2 நாளில் தெரியவரும்: வழக்கறிஞர் 0 மனுதர்மத்தை பாஜக ஏற்றுக்கொள்கிறதா? கார்த்தி சிதம்பரம் கேள்வி 0 ஹத்ராஸ் பாலியல் வன்கொலை: நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை 0 நிதிஷ்குமார் அரசை தூக்கி எறியுங்கள் - சோனியா காந்தி 0 நிதிஷ்குமார் அரசை தூக்கி எறியுங்கள் - சோனியா காந்தி 0 7.5% உள் ஒதுக்கீடு: அமித்ஷாவிற்கு திமுக எம்.பி.க்கள் கடிதம் 0 ஆப்கனில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வட்டிக்கு வட்டி இல்லை என்பதை நடைமுறைப்படுத்துங்கள்: உச்சநீதிமன்றம் உத்தரவு

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   15 , 2020  00:39:55 IST

2 கோடி வரை வங்கி கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை என்ற முடிவு எடுத்த பிறகு, அதை நடைமுறைப்படுத்த தாமதம் செய்ய வேண்டியதில்லை. இவ்வாறு தாமதம் செய்வது பொதுமக்கள் நலனுக்கு உகந்ததாக இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
வங்கிகளில் மக்கள் பெற்ற கடன்களுக்கான மாதத்தவணையை கொரோனாவால் 6 மாதங்களுக்கு ஒத்திவைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதை மீறி வங்கிகள் கடன் பெற்றவர்களிடம் இருந்து தொடர்ந்து வட்டி வசூலிப்பதாக கூறி, அதை ரத்து செய்யக்கோரி கஜேந்திர சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கை நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இதற்கிடையே 2 கோடி ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளவர்களுக்கு மட்டும் மார்ச் முதல் ஆகஸ்டு வரையிலான 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளது என மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
 
மேலும் கடன் தவணை உரிமை காலத்தை 6 மாதங்களுக்கு மேல் நீட்டித்தால் கடனை திருப்பி செலுத்தும் போக்கில் பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும் வங்கி கடன்களை உரிய நேரத்தில் செலுத்துவது சீர்குலையும் என இந்திய ரிசர்வ் வங்கி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
 
இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ரூ.2 கோடி வரை வங்கி கடன்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை என்று முடிவு செய்தாகிவிட்டது. இந்த முடிவை எப்போது அமல்படுத்தப்போகிறீர்கள்? என கேட்டனர்.
 
அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வங்கிகள் கூட்டமைப்பின் சார்பில் ஆஜரான வக்கீல் ஹரீஷ் சால்வே ஆகியோர், ‘ரூ.2 கோடி வரை வங்கி கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வட்டிக்கு வட்டி இல்லை என்ற திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒரு மாதம் அவகாசம் வேண்டும்’ என்றனர்.இதற்கு நீதிபதிகள், ‘ரூ.2 கோடி வரை வங்கி கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை என்ற முடிவு எடுத்த பிறகு, அதை நடைமுறைப்படுத்த தாமதம் செய்ய வேண்டியதில்லை. இவ்வாறு தாமதம் செய்வது பொதுமக்கள் நலனுக்கு உகந்ததாக இல்லை. வட்டிக்கு வட்டி இல்லை என்ற திட்டம் செயல்படுத்தப்படுமா? என சாதாரண மக்கள் அச்சத்தில் உள்ளனர்
 
சாதாரண மக்களின் நிலையை பாருங்கள். எனவே ரூ.2 கோடி வரை வங்கி கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை என்ற திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். இதுதொடர்பாக முடிவு எடுத்து நவம்பர் 2-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும், சாதாரண மக்கள் தீபாவளியை சந்தோஷமாக கொண்டாடுவது மத்திய அரசின் கையில்தான் உள்ளது’ என்று தெரிவித்தனர்.'


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...