செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக பொங்கலுக்கு விடுமுறை
உலகம் முழுவதும் பரந்து திரிந்து வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் மக்கள் அனைவரும் தமிழர்களால் திருநாளாம் தைப் பொங்கலை தை 1-ம்…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக பொங்கலுக்கு விடுமுறை
Posted : வியாழக்கிழமை, நவம்பர் 26 , 2020 22:22:03 IST
உலகம் முழுவதும் பரந்து திரிந்து வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் மக்கள் அனைவரும் தமிழர்களால் திருநாளாம் தைப் பொங்கலை தை 1-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
தை 1-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14-ம் தேதி அல்லது 15-ம் தேதிகளில் வரும். தைப் பொங்கல், காணும் பொங்கல், திருவள்ளுவர் தினம் என்று மூன்று தினங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டுவருகிறது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மகர சங்கராந்தி, பிஹூ என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இத்தனை ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்துக்கு பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்பட்டதில்லை.
இந்நிலையில், 2021ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே பொங்கலுக்கு விடுமுறை அளிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். 2021ஆம் ஆண்டுக்கான காலெண்டரை உச்ச நீதிமன்றம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
|