???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது!

Posted : புதன்கிழமை,   ஜுலை   17 , 2019  22:37:22 IST



உச்ச நீதிமன்றத்தின் 100 முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள் தமிழ் உள்பட 9 மாநில மொழிகளில் மொழிப் பெயர்த்து வெளியிடப்பட்டது. அதனை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெற்றுக்கொண்டார்.

உச்ச நீதிமன்றத்தில் புதிய கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்தார். இந்தவிழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அந்த விழாவில் உச்ச நீதிமன்றத்தின் 100 முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. அதனை ராம்நாத் கோவிந்த் பெற்றுக்கொண்டார்.

இதுகுறித்து ராம்நாத் கோவிந்த் ட்விட்டர் பதிவில், ‘உச்ச நீதிமன்றத்தின் 100 முக்கியமான வழக்குகளின் தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதை பெற்றுக்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் பல்வேறு மாநில மொழிகளில் கிடைக்கும். ஆங்கிலம் தெரியாத இந்தியக் குடிமகன்கள் இதனை எளிதில் அணுக முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...