???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி: ராகுல் குற்றச்சாட்டு 0 அயோத்தி வழக்கில் இறுதிகட்ட விசாரணை இன்று தொடக்கம்! 0 ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் மீது வழக்குப்பதிவு 0 இன்ஸ்டாகிராமில் 3 கோடி பின் தொடர்பவர்களைப் பெற்ற பிரதமர் மோடி! 0 கீழடியில் ஆறாம் கட்ட ஆய்வு ஜனவரியில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 குப்பை அள்ளி மோடி விளம்பரம் தேடுகிறார்: திருநாவுக்கரசர் விமர்சனம் 0 சீமானை தேசதுரோக வழக்கில் கைது செய்க: காங்கிரஸ் மனு 0 மோடி அண்ணன் மகளிடம் வழிப்பறி செய்தவரைப் பிடிக்க களம் இறங்கிய 100 போலீஸ்! 0 இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவு: உலக வங்கி அறிக்கை 0 கோவையில் திருநங்கை போல் வேடமணிந்து வழிபறி செய்தவர்கள் கைது! 0 ஸ்டாலினால் அடுத்த முறை எம்.எல்.ஏ.கூட ஆக முடியாது: முதலமைச்சர் 0 இந்திய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம் 0 தேசிய பங்குச் சந்தையில் முறைகேடு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு 0 அமித்ஷாவை விமர்சித்த வழக்கு: ராகுல் காந்திக்கு ஜாமீன்! 0 மேலும் 150 ரயில்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அரசு, நீதித்துறை, ராணுவத்தை விமர்சிப்பது தேசத் துரோகம் ஆகாது: உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா

Posted : திங்கட்கிழமை,   செப்டம்பர்   09 , 2019  22:48:23 IST

அரசு மற்றும் நீதித்துறை நிர்வாகம் குறித்து விமர்சிப்பது தேச துரோகம் கிடையாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா, கருத்து சுதந்திரத்தை பறிப்பதற்காக ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் தேச துரோக சட்டம் கொண்டுவரப்பட்டதாகவும், கடந்த சில ஆண்டுகளாக இந்த சட்டம் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

அரசியல் தலைவர்களை விமர்சிப்பது அவதூறு ஆகுமே தவிர தேசதுரோகம் ஆகாது என்றும் கூறினார். மாற்றுக் கருத்து தெரிவிக்கும் உரிமை அரசமைப்பு சட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய உரிமை எனக் குறிப்பிட்ட அவர், நீதித் துறை, ராணுவம் உள்ளிட்ட அரசின் இதர அமைப்புகளுக்கு எதிரான விமர்சனங்களை ஒடுக்க முயன்றால் இந்தியா சர்வாதிகார நாடாகிவிடும் எனவும் எச்சரித்தார்.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...