???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்! 0 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு 0 கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் 0 இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு 0 தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் 0 தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று 0 வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு 0 ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நீதிபதி தஹில் ரமானி இடமாற்ற சர்ச்சை: உச்சநீதிமன்ற கொலிஜியம் விளக்கம்

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   12 , 2019  23:52:08 IST

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியான தஹில் ரமானி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றம் போன்ற பெரிய நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஒருவரை மேகலயா போன்ற மூன்று நீதிபதிகள் மட்டுமே உள்ள இடத்துக்கு மாற்றியது சர்ச்சையே ஏற்படுத்தியது.  இதற்கிடையில், கொலிஜியத்தை முடிவை எதிர்த்து அவர் குடியரசுத் தலைவருக்கு ராஜினாமா கடிதம் அளித்தார்.

நீதிபதி தஹில் ரமானியின் பணியிட மாற்றத்துக்கு பரிந்துரை செய்த கொலிஜியம் குழுவைக் கண்டித்து, தமிழ்நாடு - புதுச்சேரி வழக்கறிஞர் சங்கத்தினர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம், தமிழகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நீதிபதிகள் பணியிடமாற்றம் தொடர்பாக கொலிஜியம் குழு, தானாக முன்வந்து விளக்கமளித்துள்ளது. அதில், நீதிபதிகள் பணியிட மாற்றம் தகுந்த காரணங்களை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  நீதிபதிகள் இடமாற்றம் சட்டநெறிமுறைகள் படியும், நீதித்துறையின் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காகவுமே செயல்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பரிந்துரையும் கொலிஜியத்தின் முழுமையான முடிவின்படி ஒரு மனதாக எடுக்கப்படுவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. நீதித்துறையின் நலன் கருதி பணியிட மாற்றத்திற்கான காரணங்களை வெளியிட முடியாது எனவும், அதற்கு அவசியம் ஏற்பட்டால் , விளக்கம் அளிக்க கொலிஜியத்துக்கு எந்தத் தயக்கமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...