???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பாரத ஸ்டேட் வங்கி தேர்வில் முற்பட்ட வகுப்பினருக்கு குறைவான கட் ஆஃப் - தொடரும் விவாதம்!

Posted : புதன்கிழமை,   ஜுலை   24 , 2019  01:25:42 IST


Andhimazhai Image
பாரத ஸ்டேட் வங்கியின் எழுத்தர் பணிக்கான தகுதி தேர்வில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு கட் ஆஃப் மதிப்பெண் 28.5 என மிக குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது விவாதப் பொருளாகியுள்ளது.
 
எஸ்.பி.ஐ வங்கியின் எழுத்தர் பணியாளர்களுக்கான முதனிலை தேர்வு கடந்த ஜூன் 22, 23-ல் நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்றிரவு வெளியானபோது அதில் கட் ஆஃப் விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அதில் எஸ்.டி பிரிவினருக்கு 53.75, எஸ்.சி., ஓ.பி.சி., பிரிவினருக்கு  61.25 என கட் ஆஃப் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு (EWS) கட் ஆஃப் 28.5 மட்டுமே நிர்ணயிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பினர் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
 
எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா:
 
பொருளாதார ரீதியில் வறியவர்களுக்கான 10% இட ஒதுக்கீடு என்ற பெயரில் வங்கித்தேர்வில் நடந்திருக்கும் மோசடி இது. புஷ்யமித்திரன் ஆட்சிக்காலத்தை விடவும் இப்போதுதான் மனுநீதி உச்சத்தில் நின்றாடுகிறது என்பதற்கு இதைவிடவும் வேறென்ன உதாரணம் வேண்டும்?
 
மொத்த மதிப்பெண்கள் 100க்கு கட் ஆஃப்
 
#EWS 
சென்னை மண்டலத்தில்: 28.5
டெல்லி மண்டலத்தில்: 51
 
#ST
தமிழ்நாடு மண்டலத்தில்: 53.75
டெல்லி மண்டலத்தில்: 44.25
 
#SC 
சென்னை மண்டலத்தில்: 61.25
டெல்லி மண்டலத்தில்: 60
 
#OBC 
சென்னை மண்டலத்தில்: 61.25
டெல்லி மண்டலத்தில்: 62.5
 
#General 
சென்னை மண்டலத்தில்: 61.25
டெல்லி மண்டலத்தில்: 71.25
 
எழுத்தாளர் அழகிய பெரியவன்:
 
இந்திய ஸ்டேட் வங்கி தேர்வில், 'பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு' வழங்கப்பட்டிருக்கும் 'கட்ஆப்' உண்மையான சமூக நீதி எனும் 'இட ஒதுக்கீட்டுக்கு' வைக்கப்பட்டிருக்கும் ஆப்பு.
 
அதாவது பழங்குடியின,பட்டியலின,மிகவும் பிற்படுத்தப்பட்ட வேலை நாடுநருக்கு தேர்வில் வழங்கப்பட்டிருக்கும் கட்ஆப் மதிப்பெண்களை விட மிக மிக குறைவு.
 
இது தான் அவர்களின் எண்ணம். 
இதை தான் அவர்கள் நிறைவேற்ற விரும்புகின்றனர்.
 
என் மதிப்பிற்குரிய காங்கிரஸ் மற்றும் இடது சாரி 'யோக்கியவான்கள்' இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
 
எழுத்தாளர் சுபகுணராஜன்:
 
இதோ நடக்கிறது பாருங்கள் . ஸ்டேட் பேங்க் எழுத்தர் தேர்வு முடிவுகள் . ST பிரிவினருக்கு 53.75 மதிப்பெண் EWS க்கு ( அரிய வகை எட்டு லட்ச ரூபாய் வருவாய் ஏழைகள் )28..5 . போதுமா?
 
தம்பி பள்ளித் தேர்வில் 35 மதிப்பெண் வாங்கனும் பாஸாக. பொய்யாக தலித்துகள் 35 மதிப்பெண் வாங்கி டாக்டர் , இன்ஜினியரிங் , கலெக்டர் ஆகிறார்களென சொல்லியவர்கள் இன்று இந்தக் கேவலத்தில்.
 
அடுத்த ஆண்டு இந்த அடிமைகள் இங்கு இந்த 10% ஒதுக்கீடு கொண்டு வந்து தொலைக்கப் போகிறார்கள் . அப்போது MMC மருத்துவக் கல்லூரி அனுமதி SC 502 SC ( A ) 464 ST 460 BC 518 BC ( M ) 484 MBC 490 என்றும் EWS ( அ வ ஏழை ) 117 என்று இருக்கும் . இது 100% உறுதி
 
அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் அச்சு அசலாகவே அரியவகை ஏழைகள் வகையில் முற்றிலும் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்ற / பெறாத ‘தகுதியற்றவர்களால் ‘ நிறைந்திருக்கும் . உலகின் ‘மிகச் சிறந்த மருத்துவர்கள் ‘ உருவாக்கப்படுவார்கள்.

English Summary
SBI clerk exam cut off issue

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...