அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு! 0 கண்ணியம் குறையாமல் செயலாற்ற வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 0 இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசு கர்நாடக அரசுதான்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு 0 ஆன்லைன் ரம்மியை தடை செய்தால் அதில் நடிக்க மாட்டேன்: நடிகர் சரத்குமார் பேச்சு! 0 'பொன்னியின் செல்வன்' 3 நாட்களில் ரூ.200 கோடி வசூல்! 0 அக்டோபர் 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு 0 மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை 0 அக்டோபர் 11-ல் விசிக நடத்தும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி: திருமாவளவன் அறிவிப்பு 0 புதிய காங்கிரஸ் தலைவர் 'ரப்பர் ஸ்டாம்பாக' இருக்க மாட்டார்: சசி தரூர் 0 இந்தியாவை நாம் அனைவரும் ஒன்றுபட்டு காக்க வேண்டும்: கேரளா சிபிஎம் மாநாட்டில் முதலமைச்சர் 0 முன்னாள் சிபிஎம் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார் 0 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற்க கேரள சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்! 0 பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம்! 0 தேசிய விருது பெற்ற தமிழ் நடிகர்கள்: மனைவி ஜோதிகா குறித்து சூர்யா நெகிழ்ச்சி! 0 காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி: மல்லிக்கார்ஜுன கார்கே வேட்புமனு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை விசாரிக்க தடையில்லை: உயர் நீதிமன்றம்

Posted : வியாழக்கிழமை,   ஆகஸ்ட்   11 , 2022  23:24:30 IST

முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
 
அப்போது, தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி, தாக்கல்  செய்யப்பட்ட ரிட் மனுக்களை திரும்ப பெறுவதாகவும், வழக்குகளை ரத்து செய்யக் கோரி குற்றவியல் பிரிவில்   மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வேலுமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
இதையடுத்து இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி  அறப்போர் இயக்கம், ஆர் எஸ் பாரதி ,மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை   உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணை அடுத்த 25 ஆம் தேதி தள்ளி வைத்தனர்.
 
அப்போது வேலுமணி சார்பில், கடுமையான நடவடிக்கை  எடுக்க கூடாது என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு ஆட்சேபம் தெரிவித்த  தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
 
இதையடுத்து, விசாரணை தொடரந்து நடைபெறலாம் என்றும் கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட முடியாது எனவும், வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது எனவும் தெரிவித்த நீதிபதிகள், வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது என்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு  உத்தரவிட்டுள்ளனர்.
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...