???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம் 0 ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் 0 கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா 0 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் 0 சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்! 0 கொரோனா நிலவரம்: தமிழகம் : 827; சென்னை : 559 0 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்! 0 இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் 0 தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'விவசாயத்தை அரசியல்வாதிகள் சூதாட்டக் களமாக பயன்படுத்துகிறார்கள்' - சாவித்திரி கண்ணன்

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   04 , 2019  03:45:24 IST


Andhimazhai Image

பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் எழுதிய 'விவசாயம் இன்று - நேற்று - நாளை', 'உழவர் குரல்', 'நோய் தீர்க்கும் பாரம்பரிய உணவுகள்', 'சாப்பிடாதீங்க' ஆகிய நான்கு நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் பொருளாளர் மணிமாறன் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். சென்னை பத்திரிகையாளர் சங்கம், காக்கைக் கூடு இணைந்து இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தன.

 

'விவசாயம் இன்று - நேற்று - நாளை' நூலை வெளியிட்டு பேசிய கவிதா முரளிதரன், ”விவசாயத்தை பற்றி பேசுவது, குறிப்பாக இயற்கை வேளாண்மை பற்றி பேசுவது இன்றைக்கு ஒரு வழக்கமாக இருக்கிறது. பல்வேறு தமிழ் சினிமாவில் கூட நாயகன் இயற்கை விவசாயம் செய்பவராக இருக்கிறார். அதைத்தாண்டி விவசாயம் பற்றி விரிவாக பேசிய படங்கள் எனக்கு தெரிந்து எதுவும் இல்லை. ஆனால், இந்த புத்தகம் ஏன் பாரம்பரிய விவசாயத்தை நோக்கி நாம் திரும்ப செல்லவேண்டுமென விரிவாக சொல்கிறது. இந்த புத்தகத்தில் இருக்கும் ஒரு சிறிய கருத்து வேறுபாட்டை உரிமையுடன் இங்கு முன்வைக்க விரும்புகிறேன். ஒரு இடத்தில் மாடுகள் கொல்லப்படுவதை பற்றி சாவித்திரி கண்ணன் சொல்லியிருக்கிறார். மாடுகளை கடத்தியதாகக் கூறி மனிதர்களை கொல்லக்கூடிய இன்றைய சூழ்நிலையில் அதை மட்டும் தவிர்த்திருக்கலாம் என தோன்றியது.

 

இந்த புத்தகத்தில் விவசாயிகளின் பிரச்சனைகளை தமிழ்நாடு, கேரளத்தை எடுத்துகாட்டாக வைத்து சொல்லப்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் விவசாயிகளின் பிரச்சனைகள் இவ்வாறு தான் இருக்கிறது என்பது எனது புரிதல். விவசாய பிரச்சனை வெறுமென விவசாயம் சார்ந்து மட்டுமின்றி அரசியல் நெருக்கடியாக, சமூக நெருக்கடியாக் இருப்பதை இப்புத்தகம் விளக்குகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே விவசாயிகள் தற்கொலை பற்றிய முறையான புள்ளிவிவரத்தை அரசு வெளியிடாமல் இருப்பதை வைத்தே விவசாயம் எத்தகைய நெருக்கடியான நிலையில் உள்ளது என்பதை அறியலாம்”  என்று கூறினார்.

 

சூழலியல் எழுத்தாளர் அருண் நெடுஞ்செழியன் பேசியதாவது, “பொதுவாக சூழலியல் பற்றிய கூட்டங்களில் அதுசார்ந்தவர்கள் மட்டும் தான் பங்கேற்பார்கள். சென்னை பத்திரிகையாளர் சங்கம், காக்கைக் கூடு இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சி மிக முக்கியமானதாக பார்க்கிறேன். பத்திரிகையாளர்கள், பொதுமக்களுக்க்கு சூழலியல் பற்றிய கண்ணோட்டத்தை உருவாக்க இதுபோன்ற நிகழ்ச்சிகள் உதவும். சமகாலத்தில் விவசாய பொருளாதாரத்தை புரிந்துகொள்ள ’உழவர் குரல்’ போன்ற இதுமாதிரியான நூல்கள் முக்கிய பங்களிப்பை செலுத்துகின்றன. விவசாயத்தின் தற்போதைய பிரச்சனைகளை இந்த நூலில் சொல்லப்படுவதோடு ஒப்பிட்டு பார்த்தால் நாம் விளங்கிகொள்ள இன்னும் எளிமையாக இருக்கும். இதில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் எல்லா மக்களுக்கும் புரியும்படி எளிமையான நடையில் சொல்லப்பட்டிருப்பது இதன் சிறப்பு”. இவ்வாறு அருண் நெடுஞ்செழியன் கூறினார்.

 

இரண்டு அமர்வுகளாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 'விவசாயம் இன்று - நேற்று - நாளை' புத்தகத்தை மூத்த பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் வெளியிட மக்கள் பாதையை சேர்ந்த அ.வை. தங்கவேல் பெற்றுக்கொண்டார். 'உழவர் குரல்' நூலை சூழலியல் எழுத்தாளர் அருண் நெடுஞ்செழியன் வெளியிட உயிர் எழுத்து ஆசிரியர் ஏ. சண்முகானந்தம் பெற்றுக்கொண்டார்.

 

இரண்டாவது அமர்வில் 'நோய் தீர்க்கும் பாரம்பரிய உணவுகள்' நூலை மருத்துவர் ச. சங்கர பாரதி வெளியிட மூத்த பத்திரிகையாளர் ம. ராஜதுரை பெற்றுக்கொண்டார். 'சாப்பிடாதீங்க' நூலை மருத்துவர் முத்து சித்ரா வெளியிட அக்குபஞ்சர் மருத்துவர் சாந்தா தேவி பெற்றுக்கொண்டார்.

 

 

ஏற்புரை வழங்கிய நூலாசிரியர் சாவித்திரி கண்ணன் பேசும்போது, “நம்மைப்போன்று நகரத்தில் வாழ்பவர்கள் விவசாயத்தை பற்றிய புரிதலே இல்லாமல் இருக்கிறோம். விளைபொருட்கள் எப்படி உற்பத்தி செய்யப்படுகின்றன, அதில் என்னென்ன சிக்கல்கள் இருக்கின்றன, விளைவித்து கொடுப்பவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் புரிந்துகொள்ளாமல் வாழ்நாள் முழுவதும் அவர்கள் தரும் பொருட்களை உண்டு மடிந்துபோகிறோம். இது மிகப்பெரிய அநீதியாக நான் கருதுகிறேன். நகரத்தில், கிராமத்தில் என எந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும், சிறிதுகாலம் விவசாயம் செய்யக்கூடிய பகுதிக்கு சென்று அந்த மக்களோடு இருந்து அனைத்தையும் புரிந்துகொள்வதை பாடமாக வைக்க வேண்டும். விவசாய களத்தை அரசியல்வாதிகள் சூதாட்டக் களமாக பயன்படுத்தி அதீத கொள்ளையடித்து வருகிறார்கள். விவசாயிகள் கடுமையாக சுரண்டப்படுகிறார்கள்.

 

அரிசி, பால் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்க்கை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இவை இரண்டுக்கும் அதனை உற்பத்தி செய்பவர்களால் அதற்குறிய விலையை நிர்ணயம் செய்ய முடியாது என்பது எப்படி சரியான அனுகுமுறையாக இருக்கும்? அரிசி, பால் விலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம் என்பதை வைத்துதான் அரசியல்வாதிகள் சூதாட்டம் நடத்துகிறார்கள். அரிசி, பால் விலை உயர்ந்தால் கொந்தளிக்கும் நாம், நுகர்வு கலாச்சாரத்தில் எதன் விலை உயர்ந்தாலும் பொருட்படுத்துவதில்லை. உணவுக்கான தானியத்தை உற்பத்தி செய்பவர்களுக்கு உரிய விலை அவர்களுக்கு கிடைக்கிறதா என்பதை நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்” என்று கூறினார்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...