???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட் 0 குட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் 0 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர் 0 இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை 0 'பெய்டி' புயல் காரணமாக இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு! 0 திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் 0 ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் 0 மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 0 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள்! 0 சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 0 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி 0 மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் 0 சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல்! 0 ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நீட் தேர்வு எழுதாமல் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை ரத்து: உயர்நீதிமன்றம்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுலை   17 , 2018  23:14:44 IST

நீட் தேர்வு எழுதாமல் 2 ஆண்டுகள் படிப்பை முடித்த 8 பல் மருத்துவ கல்லூரி மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம்,  அவர்களுக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. 
 
சென்னை மதுரவாயிலில் உள்ள சவீதா பல் மருத்துவ கல்லூரியில் கடந்த 2016௧7ஆம் கல்வி ஆண்டில் 8 மாணவர்கள் பல் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். இவர்கள் அனைவரும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். நீட் தேர்வில் தேர்ச்சி பெறாமல், மருத்துவ படிப்பில் யாரையும் சேர்க்க முடியாது என தெரிவித்த இந்திய பல் மருத்துவ கவுன்சில் 8 மாணவர்களின் சேர்க்கைக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து உத்தரவிட்டது.
 
இந்த உத்தரவை எதிர்த்து 8 மாணவர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பல் மருத்துவ கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீட் தேர்வில் வெற்றி பெறாமல், எந்த ஒரு மாணவனையும் மருத்துவ கல்வியில் அனுமதிக்க முடியாது என வாதிட்டார்.
 
இந்த 8 மாணவர்களும் நீட் தேர்வில் பங்கேற்காததால் இவர்களின் சேர்க்கைக்கு ஒப்புதல் அளிக்க முடியாது எனவும் தெரிவித்தார். இதனை ஏற்ற நீதிபதி வைத்தியநாதன், 8 மாணவர்களின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டர். அதே நேரத்தில், 8 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக அமைந்து விடக்கூடாது என்பதால் 8 மாணவர்களுக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...