???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட் 0 குட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் 0 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர் 0 இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை 0 'பெய்டி' புயல் காரணமாக இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு! 0 திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் 0 ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் 0 மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 0 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள்! 0 சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 0 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி 0 மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் 0 சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல்! 0 ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சவரக்கத்தி: நெஞ்சை இடிக்கிற ஒரு பகலின் சிம்பனி!

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   12 , 2018  04:48:50 IST


Andhimazhai Image

 

 

 

 

 

 

 

 

 

நாம், அன்று என்றோ துவங்கிய கதை வசனத்திலேயே பாய் போட்டு படுத்துவிட்டதால் இன்னும் திரைக்கதை வசமாகவில்லை. அதன் பல்வேறு சாத்தியக் கூறுகள் பரிசோதிக்கப்படவில்லை. ஒரு ஊர்ல ஒரு அப்பா அம்மா இருந்தாங்களாம் என்று துவங்கி சொல்கிறவனின் சௌகர்யத்துக்கு மட்டுமாக வளைந்து கொடுக்கிற கதை பாணி சினிமாவை தேங்க வைக்கிற திருப்பணியை செவ்வனே ஆற்றிக் கொண்டிருக்கிறது. விதிவிலக்குகளில் முக்கியமானவர் மிஷ்கின். அதிலும் இந்தப் படம் எந்த பீடிகைகளும் இல்லாமல் ரண களத்துடன் துவங்கி விடுகிறது. இதைச் சொல்லாமல் முடியாது என்பதால் சொல்லுகிறேன். எல்லாம் தெரிந்த பல சினிமா வல்லுனர்கள் இங்கேயே உச்சுக்கொட்டி விடுவார்கள். ஆனால் படம் உறுதியான திரைக்கதையுடன் மேற்செல்லுகிறது.

 

மத்திய தர வர்க்கத்தின் உதார் புருஷன் ஒருத்தன் மண்டையில் மசாலாவே இல்லாத ஒரு முரட்டு ரவுடியை அகஸ்மாத்தாய் அடித்து வாயில் வெத்தலப் பாக்கு போட்டு விடுகிறான். ரவுடி தனது குழுவினருடன் அவனை அன்று முழுவதும் தேடுவதுதான் கதை சுருக்கம். தபால் தலையில் ஒன் லைனை எழுதிவிடலாம் என்பதால் அதைச் சொல்வதில் பாதகமில்லை. உள் மடிப்புகளாய் சில விஷயங்களும் உள்ளன. இந்தப் பொடிக் கதையில் விரிகிற உணர்வுகளைத்தான் நான் சிபாரிசு செய்ய விரும்புவேன். அந்த உணர்வுகளைக் கூட தருணங்கள் வைத்து சரியான இருக்கையில் அமர்த்தி மரியாதை செய்திருக்கிறார்கள்.

 

ராம் மிகையான மனிதர். கொஞ்சம் கட்டுப்பாடு இருந்திருக்கலாம். அந்த கதாபாத்திரத்தில் கூட அமைதி கூடியிருக்கிற சந்தர்ப்பம் அமையாதது யாருடைய தவறென்று தெரியவில்லை. ஆனால் மிகையாயினும் பூர்ணா ஈர்ப்புதான். முகத்திலேயே கர்ப்பிணிக் களை  இருந்தது. காது கேளாதவரின் அசட்டை இருந்தது. இதை எல்லாம் விடுங்கள், படத்தில் அவ்வப்போது வந்தவாறு இருக்கிற ஒவ்வொரு முகமும் வாழ்வைப் பற்றின ஒரு குட்டிக் கோட்டோவியம்தான். எனக்கு பெத்தப்பாவையும், குழுவின் மூளையாக இருந்து அடி வாங்குகிற ஒரு அல்லக்கையையும் மறக்கவே முடியவில்லை. ஷாஜியின் பைத்தியம் நாம் face book, whatsapp  இல் பத்து நிமிடம் இருந்து விட்டால் வந்து விடுவதுதான்.   

 

இயக்குனர் ஆதித்யா. அவரது எளிமையான ஆக்கத்திற்கு ஒளிப்பதிவாளர் முதல் அத்தனை பேரும் துணை நின்றிருக்கிறார்கள். அரோல் கரோலி அடுத்த படிக்கு ஏறி விட்டார் என்பதை பார்க்க முடியும். தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களால் மிஷ்கினின் மனதை கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது. நல்ல ஒரு பாட்டை ஊறும் அன்பு வைத்து எழுதி இருக்கிறார்.

 

படத்தின் எழுத்து மிஷ்கின். ஒரு பாட்டை எழுதி பாடவும் செய்திருக்கிறார். இதிலெல்லாம் அவர் தனது சாதனைகளை தானே முறியடிப்பார் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் மூளையில்லாமல் அழிச்சாட்டியம் செய்கிற ஒரு முட்டாள் ரவுடியை திரையில் கொண்டு வந்திருக்கிறார் பாருங்கள், அது இங்கே இருக்கிற ஒருத்தராலும் முடியாது. இது என்னய்யா இது, பத்தாயிரம் பேர் ரவுடியா வந்ததில்லையா என்றால்- ஆமாம், வந்திருக்கிறார்கள்- இவரைப் போல முடியாது என்கிறேன்.

 

ஏனெனில் மிஷ்கின் செய்து போட்டு விட்ட ரவுடியின் முகத்தில் ஒரு குழந்தை இருந்தான், அது யாருக்கு கை வசமாகும் ?

 

- மணி.எம்.கே.மணி -



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...