அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்துக்கு அதிக அளவில் தடுப்பூசிகளை வழங்க வேண்டும்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் 0 தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை 0 தமிழகத்தில் வரும் 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு: அரசு அறிவிப்பு 0 அதிகரிக்கும் கொரோனா: முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை 0 கடந்த ஆண்டைபோல ஒன்றுபட்டு கொரோனாவை ஒழிப்போம்: பிரதமர் மோடி 0 ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,501 பேர் உயிரிழப்பு! 0 ரெம்டெசிவிர் மருந்தின் விலை 2800 ரூபாயிலிருந்து 899 ரூபாயாக குறைப்பு 0 வேளச்சேரி வாக்குச்சாவடியில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் 186 வாக்குகள் மட்டுமே பதிவு 0 தடுப்பூசிக்கான வயது வரம்பை 25ஆக குறைக்க வேண்டும் - பிரதமருக்கு சோனியா கடிதம் 0 கால்நடைத் தீவன ஊழல்: 4வது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன்! 0 கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு விதித்த தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் 0 நண்பன் விவேக் மறைவால், துக்கம் தொண்டையை அடைக்கிறது: நடிகர் வடிவேலு கண்ணீர் 0 மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ.500 அபராதம்! 0 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9344 பேருக்கு கொரோனா! 0 நடிகர் விவேக் உடல் தகனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: 8 பேர் கொண்ட குழு நேரில் ஆய்வு!

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   26 , 2021  15:31:12 IST

சாத்தூர் அருகே அச்சமங்குளம் மாரியம்மாள் பட்டாசு ஆலையில் நடைபெற்ற வெடிவிபத்து தொடர்பாக, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான 8 பேர் கொண்ட குழு இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

 

விருதுநகர் மாவட்டம்,சாத்தூர் அருகே உள்ள அச்சமங்குளம் மாரியம்மாள் பட்டாசு ஆலையில் கடந்த 12ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தால் 23 உயிரிழந்த நிலையில், 15க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

வெடிவிபத்து தொடர்பாக  தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ததையடுத்து இச்சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

 

இதனடிப்படையில், வெடிவிபத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கண்ணன் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு சில தினங்களுக்கு முன்பாக அமைத்தது.

 

இந்நிலையில், இந்தக் குழுவானது, விபத்து நடைபெற்ற பகுதியை இன்று நேரில் சென்று ஆய்வு செய்த நிலையில், இது தொடர்பான அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...