???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலகக் கோப்பை கால்பந்து: கோஸ்டோரிகாவை பந்தாடியது பிரேசில் 0 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி செல்லமேஸ்வரர் ஓய்வு பெற்றார்! 0 பாஜகவின் பிரதிநிதியாக ஆளுநர் செயல்படுகிறார்: ஸ்டாலின் காட்டம்! 0 கேரளத்தை பிரதமர் தொடர்ந்து புறக்கணிக்கிறார்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு 0 தென் கொரிய முன்னாள் பிரதமர் கிம் ஜாங் பில் மறைவு 0 வன்முறையை தூண்டும் வகையில் பேட்டி: பாரதிராஜா மீது வழக்கு பதிவு 0 காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மசூத் ஹுசைன் நியமனம்! 0 அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுகளை அந்தந்த மாவட்டங்களிலேயே எழுதலாம்: பிரகாஷ் ஜவடேகர் 0 திமுகவினர் கைதை கண்டித்து போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின் கைது! 0 2021க்கு முன்பு தேர்தல் சட்டமன்ற தேர்தல் வராது: ஜெயக்குமார் பேச்சு 0 டெல்லியில் கேரள முதல்வர் போராட்டம் 0 நாட்டிற்கு நல்லது நடப்பதை ஸ்டாலின் விரும்பவில்லை: தமிழிசை கருத்து 0 ஆளுநர் கார் மீது கருப்புக் கொடி வீசிய தி.மு.க.வினர் 192 பேர் கைது! 0 ‘சர்கார்’ படத்தில் விஜய் புகை பிடிக்கும் காட்சி: அன்புமணி எதிர்ப்பு 0 கடலுக்கு செல்ல வேண்டாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை வானிலை மையம் எச்சரிக்கை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவின் நியமனம் செல்லாது: அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   12 , 2017  06:44:39 IST

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று கூடியது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் 2,140 பொதுக்குழு, 296 செயற்குழு உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன இந்தக் கூட்டத்தில் பல  முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 

அவற்றில் முக்கியமான தீர்மானங்களின் விவரம்:

 

* பொதுச்செயலாளர் சசிகலாவின் நியமனம் ரத்து.

* இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும்.

 * எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் அணி இணைந்ததற்கு பாராட்டு.

 * டிடிவி தினகரனால் அறிவிக்கப்பட்ட கட்சி பொறுப்புகள், நியமனங்கள் செல்லாது.

* ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பொறுப்புகளில் தொடர்வார்கள்.

* அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா மட்டுமே.

* ஜெயலலிதா வீட்டை நினைவில்லம் ஆக்கும் அரசின் முடிவுக்கு ஆதரவு.

* எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடிவரும் தமிழக அரசுக்குப் பாராட்டு.

* ஜெயலலிதாவுக்கு ரூ.15 கோடியில் நினைவிடம்:முதல்வருக்கு பாராட்டு.

* அதிமுகவில் இனிமேல் பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது.

* பொதுச்செயலாளருக்கு வழங்கப்பட்ட அனைத்து அதிகாரங்களும் இனி ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கப்படும்.

* தலைமை ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமனம். ஒருங்கிணைப்புக் குழுவில் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கமும் இடம்பெற்றுள்ளனர்.

* சசிகலாவின் அதிகாரங்கள் அனைத்தும்  ஓபிஎஸ் மற்றும் பழனிசாமிக்கு வழங்கப்படுகிறது.

* தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்ட பிரமாண பத்திரங்களை வாபஸ் பெறப்படும். 

* பொதுக்குழு தீர்மானங்கள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது.

* சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார்.

* வறட்சி, வெள்ள பாதிப்புகளில் விரைந்து செயல்பட்ட அரசுக்கு நன்றி. click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...