???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி! 0 தோல்வியடைந்தவர்களின் பேச்சாக ராகுல் காந்தியின் பேச்சு இருக்கிறது: நிர்மலா சீதாராமன் 0 பாஜகவில் இருந்து மோடியை நீக்கிவிட்டால் பாஜக கட்சியே இருக்காது: குஷ்பு 0 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அமமுக உண்ணாவிரத போராட்டம் 0 அழகான தமிழ் மொழியை ஒழிக்க பாஜக முயற்சிக்கிறது: ராகுல் குற்றச்சாட்டு 0 நம்பிக்கையில்லா தீர்மானத்தை முதலமைச்சர் ஆதரிக்க வேண்டும்: ஸ்டாலின் 0 குரங்கணி காட்டுத்தீ விபத்து: மேலும் ஒருவர் பலி 0 நெஞ்சுவலி காரணமாக ம. நடராஜனுக்கு தீவிர சிகிச்சை! 0 பள்ளி ஆண்டு விழாவில் அதிக ஒளிகொண்ட மின்விளக்கு: மாணவர்களுக்கு கண் பாதிப்பு 0 உணவு தானிய உற்பத்தியில் சாதனை: தமிழக அரசுக்கு விருது! 0 சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் மீண்டும் தேர்வு! 0 குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் வீட்டுக்கு நேரில் சென்று கமல் இரங்கல்! 0 நாஞ்சில் சம்பத் விலகியது வருத்தமளிக்கிறது: டி.டி.வி. தினகரன்! 0 டி.டி.வி. தினகரன் மீது நாஞ்சில் சம்பத் பாய்ச்சல்! 0 பழனிசாமி நீக்கத்திற்கும் பாஜகவிற்கும் தொடர்பு இல்லை: அமைச்சர் ஜெயகுமார்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பெங்களூரு ஜெயிலில் இருக்கும் சசிகலா வேறு சிறைக்கு மாற்றம்?

Posted : திங்கட்கிழமை,   ஜுலை   17 , 2017  08:11:42 IST

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை வேறு சிறைக்கு மாற்றலாமா என்பது குறித்து கர்நாடக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

 

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர்(அம்மா அணி) சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை விதிமுறைகளை மீறி அவருக்கு சிறையில் சிறப்பு சொகுசு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா  பரபரப்பான புகார் கூறி உள்ளார்.

 

இது கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக டி.ஜி.பி. சத்தியநாராயணராவும், டி.ஐ.ஜி. ரூபாவும் திடீர் பணியிடைமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.

 

இதன் பிறகான ஆய்வின்போது டி.ஐ.ஜி. ரூபாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கைதிகள் கோஷமிட்டனர். அவர் ஆய்வு செய்து சிறையில் இருந்து திரும்பியபோதும் கைதிகள் 2 பிரிவுகளாக பிரிந்து தங்களின் அறைகளுக்கு செல்ல மறுத்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது கைதிகளுக்குள் கோஷ்டி மோதலை உருவாக்கும் அபாயம் இருக்கிறது. இதையடுத்து பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து 32 கைதிகள் மாநிலத்தின் வெவ்வேறு சிறைகளுக்கு நேற்று மாற்றப்பட்டனர்.

 

கைதிகளுக்கு இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை உள்ளது. இந்த பிரச்சினையால் அரசியல் தலைவராக இருக்கும் சசிகலாவுக்கு பாதுகாப்புப்  பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்று அரசு கருதுகிறது. அதோடு வரும் நாட்களில் இத்தகைய சிறப்பு வசதிகள் புகார்களைத்  தடுக்க சசிகலாவை கர்நாடகத்திற்குள் வேறு சிறைக்கு மாற்றலாமா? அல்லது வெளிமாநில சிறைக்கு மாற்றலாமா? என்று கர்நாடக அரசு தீவிரமாக ஆலோசிக்க தொடங்கியுள்ளது.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...